உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்த கொள்கை குழப்பம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு 'தேசிய உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை' வரைவு வெளியிடப்பட்ட பின்னர் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organisations (FPO)) சமீபத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கள் தங்கள் தயாரிப்பு தரத்தை வெளிப்படுத்த ஒரு 'தேசிய பிராண்டை' உருவாக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஊக்குவிப்பதற்கும், அங்கீகரிப்பதற்கும், அந்த துறையின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும். வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஜூலை மாதத்தில் சில உழவர் உற்பத்தியாளர் அமைப்புககளின் செயல்திறன் குறித்து கவலை தெரிவித்து, இடைவெளிகளை அடையாளம் காண மறுஆய்வு செய்ய அழைப்பு விடுத்தார்.
10K கொள்கை (10K policy) முன்முயற்சியின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன என்று மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த உழவர் உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடமிருந்து சராசரியாக ₹210 கோடி சமபங்கு நிதியை பெற்றுள்ளனர். இது ஒரு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு ₹2 லட்சம் மட்டுமே பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் பலர் கடுமையான பாதிப்புகளில் உள்ளதாக தனியார் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய கொள்கை ஆவணம், உறுப்பினர், அளவு மற்றும் மூலதனத்தை உருவாக்க மூன்று-அடுக்கு கூட்டமைப்பு கட்டமைப்பை வலியுறுத்துகிறது.
10K கொள்கையின் ஒரு மையப் பிரச்சினை என்னவென்றால், விவசாயிகளை ஈர்க்க உள்ளீட்டு கொள்முதல், கடன் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் தற்போதுள்ள அமைப்புகளை விட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். விவசாயிகள் தற்போதைய நிலையிலிருந்து நிச்சயமற்ற மாற்றுக்கு மாற வாய்ப்பில்லை. திறமையான தலைமை மற்றும் தொழில்முறை முக்கியம்.
தற்போதைய கொள்கைகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (FPO) வெற்றியில் நிபுணர்களை முதலீடு செய்யும் ஒரு அமைப்பை உருவாக்கத் தவறிவிட்டன. நிர்வாக ஆதரவுக்காக ஒரு வள நிறுவனத்திற்கு (‘resource institution (RI)’) மூன்று ஆண்டுகளில் உருவாக்கத்திற்கு 18 லட்ச ரூபாயும், செயல்படுத்துவதில் 25 லட்சம் ரூபாயும் வரை ஒதுக்கீடு செய்கிறார்கள். விவசாயத்தில் நேரடியாக ஈடுபடாத வள நிறுவனங்கள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (FPO) துறையில் நுழைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக, வள நிறுவனங்கள் அவர்கள் விரும்பும் அளவுக்கு பல உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) உருவாக்க முடியும் என்று தெரிகிறது. வணிக வளர்ச்சியை ஊக்குவிக்க தொழில்முறை நிதி இணைக்கப்பட வேண்டும். சமூக பங்குச் சந்தைகள் அல்லது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகள் மூலமாகவும் மூலதனத்தை திரட்டலாம்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றிய கொள்கை குழப்பமும் உள்ளது. ஆரம்பத்தில், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) கூட்டுறவுகளில் நிர்வாக சிக்கல்களைத் தீர்ப்பதற்காக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்' என்று கருதப்பட்டன.
தற்போது, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் கூட்டுறவு அமைப்புகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பல நிறுவன அமைப்புகள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) திட்டத்தை செயல்படுத்துகின்றன. இது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPO) அடையாள நெருக்கடிக்கு வழிவகுக்கிறது. கூட்டுறவுகள் மீது மத்திய அரசு கவனம் செலுத்துவது இந்த குழப்பத்தை அதிகரிக்கிறது. இந்த பிரச்சினைகள் விரிவான ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.