தூய்மை இந்தியா இயக்கத்தின் நான்கு முக்கிய பாடங்கள் நான்கு ' Ps'க்கள் என்று அறியப்பட்டன. அரசியல் தலைமை, பொது நிதி, கூட்டாண்மை மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவை மிகப் பெரிய, மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்று இப்போது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 23, 2024 அன்று, *நேச்சர்* இதழில் வெளியான ஒரு அறிவியல் அறிக்கை, திட்டத்தின் 10 ஆண்டு நிறைவையொட்டி, குழந்தை மற்றும் குழந்தை இறப்பைக் குறைப்பதில் ஸ்வச் பாரத் மிஷனின் (Swachh Bharat Mission’s (SBM)) தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15, 2014 அன்று செங்கோட்டையிலிருந்து தனது சுதந்திர தின உரையின் போது தூய்மை இந்தியா இயக்கத்தை அறிவித்தார். இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்டது.
‘
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2, 2019-க்குள் திறந்தவெளி மலம் கழிப்பை ஒழிப்பதை தூய்மை இந்தியா இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது. இது சுமார் 550 மில்லியன் இந்தியர்களின் நடத்தையை திறந்தவெளியில் மலம் கழிப்பதிலிருந்து அரசாங்கத்தால் கட்டப்பட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான வீட்டு கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு மாற்ற முயன்றது. நேச்சர் அறிக்கை திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கழிப்பறைகள் ஆண்டுக்கு 60,000-70,000 கைக்குழந்தைகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றின என்று கூறியது.
ஆகஸ்ட் 15, 2014 அன்று இந்த அறிவிப்பு முன்னெப்போதும் இல்லாதது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திறந்தவெளி கழிப்பிடத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடி உறுதிபூண்டிருப்பது மற்ற நாடுகளுக்கு ஆச்சரியமான செயலாக இருந்தது. ஐந்து ஆண்டுகளில் 550 மில்லியன் மக்களின் நடத்தையை மாற்றுவது என்பது மிகவும் தைரியமான இலக்கு. மோடியின் தலைமையின் கீழ், தூய்மை இந்தியா இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்து, கிராமங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
மோடி தனது மாதாந்திர மன் கி பாத் (Mann Ki Baat) வானொலி உரை உட்பட பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி தூய்மை இந்தியா இயக்கத்தை ஆதரிக்க மக்களை ஊக்குவித்தார். கிராமங்கள் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாதவை (open defecation free (ODF)) ஆக மாற ஆர்வத்துடன் உழைத்தன மற்றும் அவர்களின் சாதனைகளை கௌரவ யாத்திரை (pride tour) மூலம் கொண்டாடின.
கிராமங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே நட்புரீதியான போட்டி உருவானது. இமாச்சலப் பிரதேசம், கேரளா, உத்தராகண்ட், ஹரியானா போன்ற மாநிலங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலங்களாக மாறி, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. அக்டோபர் 2, 2019 அன்று, அனைத்து மாநிலங்களும் தங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக அறிவித்துக் கொண்டாலும், நடத்தை மாற்றம் மற்றும் நீடித்த சாதனைகளில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கவனம் இரண்டாம் கட்டம் வரை தொடர்ந்தது.
சுகாதாரப் பலன்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மேம்பட்ட கண்ணியம் மற்றும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சேமிப்பு ஆகியவை தூய்மை இந்தியா இயக்கத்தின் விளைவுகளில் அடங்கும். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை அடைவதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் மருத்துவக் கட்டணம் மற்றும் நேரம் ரூ.50,000 மிச்சமாகிறது என்று யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது.
உலக அளவில் மதிப்புமிக்க பாடங்களை தூய்மை இந்தியா இயக்கம் பகிர்ந்து கொண்டது. 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த 55 சுகாதாரம் மற்றும் துப்புரவு அமைச்சர்களுடன் நிறைவு அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
நைஜீரிய நீர் மற்றும் துப்புரவு அமைச்சர் மிகவும் இத்திட்டத்தில் ஈர்க்கப்பட்டு, அவர் நாடு திரும்பியதும் தூய்மையான நைஜீரியா பிரச்சாரத்தைத் தொடங்கினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் நான்கு முக்கிய பாடங்கள், அரசியல் தலைமை (political leadership), பொது நிதியுதவி (public financing), கூட்டாண்மை (partnerships) மற்றும் மக்களின் பங்கேற்பு (people’s participation) ஆகியவை அடங்கும். அவை உலகெங்கிலும் உள்ள துப்புரவுத் துறையில் பயன்படுத்தப்பட்டு, நிலையான வளர்ச்சி இலக்கு எண் 6: சுகாதாரம் மற்றும் தண்ணீருக்கான அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
உஜ்வாலா (Ujjwala) (சமையல் எரிவாயு சிலிண்டர்கள்), ஜன் தன்(Jan Dhan) (வங்கி கணக்குகள்), ஆவாஸ் யோஜனா(Awas Yojana), ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு(Ayushman Bharat medical insurance scheme) மற்றும் நீர் விநியோகத்திற்காக 180 மில்லியன் வீடுகளை இலக்காகக் கொண்ட ஜல் ஜீவன் மிஷன்(Jal Jeevan Mission) உள்ளிட்ட பல வெற்றிகரமான அரசாங்க முயற்சிகளில் ஸ்வச் பாரத் மிஷன் ஒன்றாகும். பிரதமர் மோடியின் துணிச்சலான பார்வை மற்றும் அரசியல் தலைமை ஆகியவை இந்த மாற்றத்திற்கான திட்டங்களுக்கு மையமாக உள்ளன.