ஆதாரை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - அஜய் சிஹ்னா கற்பூரம்

 ஆதார் அடையாளச் சான்று மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ஆதாரை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. 

 

பள்ளி விடுப்புச் சான்றிதழ் (School Leaving Certificate) போன்ற பிற அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இந்த நோக்கத்திற்காகச் செயல்படுவதால், ஆதார் அட்டைகளை வயதுச் சான்றாகப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24-ம் தேதி வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பு ஆதாரின் பங்கு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) ஆதார் எண்களை வழங்குவதற்கு பொறுப்பான "அனைவருக்குமான  அடையாள உள்கட்டமைப்பு" (universal identity infrastructure) என்று ஆதாரை விவரிக்கிறது.


நீதிமன்றம் ஏன் இந்தத் தீர்ப்பை வழங்கியது? ஆதாருக்கான முதல் அட்டைகள் வழங்கப்பட்டதிலிருந்து ஆதார் தற்போது எவ்வாறு மாறிவிட்டது?


மோட்டார் வாகன விபத்துகளுக்கு இழப்பீடு கோருவதற்கு பெரும்பாலும் வயதுச் சான்று (Age proof) தேவைப்படுகிறது.


நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சிகா ராம் என்ற நபரின் குடும்பத்திற்கான இழப்பீடு வழங்குவது குறித்து தீர்ப்பு  வழங்க வேண்டியிருந்தது. ஏப்ரல் 2015-ஆம் ஆண்டில், ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் (Motor Accident Claims Tribunal), காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடாக 19,35,400 ரூபாய்  வழங்க உத்தரவிட்டது.


மோட்டார் வாகனச் சட்டம், 1988 (Motor Vehicles Act(MVA)) இன் கீழ் இறப்பு தொடர்பான வழக்குகளுக்கான இழப்பீடு, குறிப்பிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த காரணிகளில் இறந்தவரின் வருமானம் மற்றும் வயது, அத்துடன் இவரை சார்ந்திருப்பவர்களின் நபர்களின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும். இறந்தவரின் வயது ஒரு விரிவாக்கத்தை தீர்மானிக்க உதவுகிறது.  இந்த விரிவாக்கம் ஒரு எண்ணிக்கையை குறிக்கிறது. இது இறந்தவரின் சம்பாதிக்கும் திறன் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.


மேல்முறையீட்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையை 9,22,336 ரூபாய் ஆக குறைத்தது. இவர் இறக்கும் போது இவரது ஆதார் அட்டையின்படி 47 வயதாக இருந்தார். அதாவது, மோட்டார் வாகனச் சட்டத்தின் (MVA) கீழ் 13-ன் விரிவாக்கத்தைக் குறிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவரது பள்ளி விடுப்பு சான்றிதழின்படி விபத்து நடந்தபோது அவருக்கு உண்மையில் 45 வயது என்றும், அதற்கு பதிலாக பெருக்கி 14-க இருக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். 


சிறார் நீதிச் சட்டம் (Juvenile Justice Act): உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆதார் வயதுச் சான்றாக இல்ல என்பதைக் குறிக்கிறது.


உச்ச நீதிமன்றம் 13 பக்க தீர்ப்பை வழங்கியது. உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதாக விமர்சித்தது. இந்த  உத்தரவில் “வக்கிரம், சட்ட விரோதம் அல்லது அதை செல்லாததாக்கும் வேறு ஏதேனும் சிக்கல்கள்” உள்ளதா என்பதில் மட்டுமே உயர் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் (Juvenile Justice (Care and Protection of Children) Act), 2015-ன் பிரிவு 94 ஐ மேற்கோள் காட்டியது. இது "சம்பந்தப்பட்ட தேர்வு வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான சான்றிதழ்" சட்டத்தின் கீழ் ஒரு வாரியம் அல்லது குழுவின் முன் கொண்டு வரப்பட்ட ஒரு நபரின் வயதை தீர்மானிக்க ஆதாரமாக பயன்படுத்தப்படலாம்.  ஆதார் அட்டைக்கு பதிலாக ஒரு நபரின் வயதை தீர்மானிக்க பள்ளி விடுப்பு சான்றிதழை பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுடன் இது கூடுதலாக இருந்தது. 


நீதிபதி டாக்டர். ஏ.கே.சிக்ரி ஆதாரை "அடையாளச் சான்று" என்று விவரித்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையும் இந்த வாதம் குறிப்பிடுகிறது.  அத்துடன் ஆதார் "பிறந்த தேதிக்கான சான்று அல்ல" என்பதை மீண்டும் வலியுறுத்தும் UIDAI சுற்றறிக்கை ஒன்றை மீண்டும் வலியுறுத்தியது. 


இதனால் பள்ளி விடுப்புச் சான்றிதழில் வயது அடிப்படையில் இழப்பீட்டைக் கணக்கிட உச்ச நீதிமன்றம் 14-ஐ பெருக்கி குடும்பத்திற்கு ரூ.15 லட்சத்தை வழங்கியது.


பல ஆண்டுகளாக ஆதாருக்கான ஆணை எவ்வாறு விரிவடைந்துள்ளது? 


வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் அரசாங்கத் திட்டங்களைப் பெற உதவுவதற்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் முதலில் ஆதார் ஒரு தனிப்பட்ட அடையாளமாக (unique ID (UID) முன்மொழியப்பட்டது. இது பின்னர், இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அடையாள அட்டைகளை பதிவு செய்து வழங்குவதற்கான தேசிய முயற்சியாக மாறியது. இருப்பினும், இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தை (UIDAI) மேற்பார்வையிட்ட நிதி அமைச்சகத்துக்கும்,  உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், இந்த திட்டம் முடங்கியது.  இந்திய தேசிய அடையாள ஆணைய (National Identification Authority of India (NIAI)) மசோதாவும் வாக்கெடுப்புக்கு முன் நிராகரிக்கப்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆதாருக்கான முயற்சியை பாஜக எதிர்த்தது. தரவுத்தளத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகைகள் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகளை எழுப்பினர்.


2016-ஆம் ஆண்டு பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பிறகு நிலைமை மாறியது.  இந்திய தேசிய அடையாள ஆணைய (NIAI) மசோதா திரும்பப் பெறப்பட்டது.  மேலும், கட்சி ஜூலை 2016 இல் ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளின் இலக்கு விநியோகம்) மசோதாவை பண மசோதாவாக (Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits, and Services) Bill) அறிமுகப்படுத்தியது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 110-வது பிரிவு, பண மசோதா சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், மாநிலங்களவையின் எதிர்ப்புகளை மீறி மக்களவையில் சட்டமாக நிறைவேற்ற அதிகாரம் அளிக்கிறது. 


கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சட்ட மனுவைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் அல்லது மொபைல் சிம் கார்டு பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இருப்பினும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் உறுதி செய்தது. அரசாங்க சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளின் அடையாளங்களைச் சரிபார்க்க ஆதாரை பயன்படுத்தவும் இது அனுமதித்தது.


ஆதார் பதிவு தன்னார்வலமாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் பயன்பாடு கணிசமாக விரிவடைந்துள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களைப் பெற ஆதார் சரிபார்ப்பு இப்போது அவசியம். அமேசான் பே (Amazon Pay) மற்றும் ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் (Aditya Birla Housing Finance) போன்ற தனியார் நிறுவனங்களும் ஆதாரை கோருகின்றன. ஜனவரி 2024-ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) கீழ் வேலை தேடும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.




Original article:

Share: