ஜனவரி முதல் ஏப்ரல் 2024 வரை, டிஜிட்டல் கைது மோசடிகளால் இந்தியாவில் பொதுமக்கள் ₹120.30 கோடி ரூபாய் இழந்து உள்ளதாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cybercrime Coordination Centre) தெரிவித்துள்ளது.
அக்டோபர் 27-ஆம் தேதி தனது வானொலி நிகழ்ச்சியான "மன் கி பாத்" (Mann Ki Baat) நிகழ்ச்சியில், "டிஜிட்டல் கைதுகள்" (“digital arrests”) விவகாரத்தை முன்னிலைப்படுத்தினார். இந்த மோசடிகள் குறித்து மக்களை எச்சரித்த அவர், “டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்திய சட்டத்தின் கீழ் டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு இல்லை. இதுபோன்ற விசாரணைகளுக்காக எந்த அரசு நிறுவனமும் உங்களை தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இத்தகைய மோசடிகள் எவ்வாறு வேலை செய்கின்றன? தொலைபேசி அல்லது காணொளி அழைப்புகள் மூலம் கைது செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் மோசடி செய்பவர்கள் மக்களை எவ்வாறு ஏமாற்ற முடிந்தது?
டிஜிட்டல் கைது மோசடிகள் என்றால் என்ன?
இந்த மோசடிகளில், குறிப்பிட்ட சில நபர்கள் அரசு அதிகாரிகள் போல் நடிக்கின்றனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை WhatsApp, Skype அல்லது பிற செயலிகள் மூலம் தொடர்புகொள்கின்றனர். போதைப்பொருள் கடத்தல் அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கையாளுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக மோசடி செய்பவர்கள் அடிக்கடி பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுகின்றனர்.
மோசடி செய்பவர்கள் காவல் அதிகாரிகளைப் போல உடை அணிகிறார்கள். போலி காவல் நிலைய பின்னணியை உருவாக்குகிறார்கள். அவர்கள் உண்மையானதாக தோற்றமளிக்க போலி அதிகாரப்பூர்வ பதக்கங்களைக் (official badges) காட்டுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்துகிறார்கள் மற்றும் போலி ஆவணங்களைக் காட்டுகிறார்கள். அவர்கள் "டிஜிட்டல் கைது" செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களிடம் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் அழைப்பை துண்டிக்கவோ அல்லது வீடுகளை விட்டு வெளியேறவோ வேண்டாம் என்று கூறுகின்றனர். இந்த அழைப்புகள் பல மணி நேரம் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர்கள் உத்தரவுகளைப் பின்பற்றாவிட்டால் என்ன மோசமான நிகழ்வுகள் நடக்கும் என்பதை மோசடி செய்பவர்கள் விளக்குகிறார்கள். பிறகு பணம் கேட்கிறார்கள். பணம் செலுத்தினால் பாதிக்கப்பட்டவர்களை "விடுதலை" அல்லது வழக்கை முடித்து வைப்பதாக பொய்யான வாக்குறுதி அளிக்கிறார்கள்.
டிஜிட்டல் கைது மோசடி அழைப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி
மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் அறியாமையை பயன்படுத்தி பொய் சொல்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு மன அழுத்த சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். அவர்கள் தகவல் மூலம் பயத்தை உருவாக்கி அவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக உணர வைக்கிறார்கள். இந்த மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் காவல்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் அல்லது ரிசர்வ் வங்கி அதிகாரிகளாக நடிக்கிறார்கள் மற்றும் போலி அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு நம்பிக்கையுடன் பேசுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த மோசடிகள் செல்வந்தர்கள் உட்பட யாரையும் குறிவைக்கலாம். உதாரணமாக, இந்த மாதம், ஜவுளித் துறையின் தலைவரான எஸ்.பி.ஓஸ்வால், மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்பவர்களுக்கு ₹7 கோடியை இழந்தார். வர்த்மான் குழுமத்தின் தலைவரான ஓஸ்வால், ஸ்கைப் மூலம் அவர் இரண்டு நாட்கள் "டிஜிட்டல் காவலில்" வைக்கப்பட்டதாகக் கூறினார்.
மோசடி செய்பவர்கள் ஸ்கைப்பில் ஒரு போலி உச்ச நீதிமன்ற விசாரணையை நடத்தினர். அங்கு ஒருவர் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் போல் நடித்து, சட்ட விசாரணையை போலியாக உருவாக்கி, போலி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டச் சிக்கல்களைத் தீர்க்க காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று மோசடி செய்பவர்கள் அடிக்கடி சொல்வார்கள். மோசடி செய்பவர்களின் அழைப்புகள் நீண்ட நேரம் நீடிக்கும். இந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மோசடி செய்பவர்கள் ஆதார் அல்லது வருமான வரி விவரங்களைக் கேட்கலாம். பாதுகாப்பாக இருக்க, பிரதமர் மோடி மூன்று வழிமுறைகளை பரிந்துரைத்தார்
அத்தகைய அழைப்புகளை ஏற்க நேரிட்டால் பீதி அடைய வேண்டாம். உங்களால் முடிந்தால், அழைப்பை பதிவு செய்யுங்கள். எந்த அரசாங்க நிறுவனமும் ஆன்லைனில் உங்களை அச்சுறுத்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 1930 என்ற எண்ணை அழைத்து இணைய நிதி மோசடிகளை தேசிய உதவி எண்ணை அழைத்து அணுகி மோசடி குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கவும்.
டிஜிட்டல் கைது மோசடிகளை எதிர்கொள்ள அரசு என்ன செய்துள்ளது?
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) என்பது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒரு சிறப்புக் குழுவாகும். அதிகரித்து வரும் சைபர் கிரைம் வழக்குகளை நிவர்த்தி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். ஜனவரி முதல் ஏப்ரல் 2024 வரை, இந்தியர்கள் இந்த மோசடிகளால் ₹120.30 கோடி ரூபாய் இழந்துள்ளதாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) கண்டறிந்துள்ளது.
இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகளைத் தடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) பணியாற்றியுள்ளது. மேலும், விழிப்புணர்வு பிரசாரங்களையும் துவக்கி உள்ளனர். இந்தப் பிரச்னைகள் குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவுமாறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மே மாதம், அரசாங்கம் பல்வேறு சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியது. இந்தக் குழு இந்தியர்களைக் குறிவைத்து, குறிப்பாக கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறது.