உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? - அஜய் சிஹ்னா கற்பூரம்

 உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நவம்பர் 10-ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் ஓய்வு பெற்ற  பின்பு, அவருக்குப் பிறகு பதவியேற்பார். இதன் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது? என்பது பற்றிய விவரம். 


அக்டோபர் 24-ம் தேதி, நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக (Chief Justice of India (CJI)) ஒன்றிய அரசு நியமித்தது. இந்த நியமனம், ஒரு வாரத்திற்கு முன்பு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் அளித்த பரிந்துரையை முறையாக அங்கீகரித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தலைமை நீதிபதி சந்திரசூட் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற்ற  பின்பு,  அவருக்குப் பிறகு பதவியேற்பார்.  அவர் மே 13, 2025 அன்று ஓய்வு பெறும் வரை பதவியில் இருப்பார். தற்போது, தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இரண்டு ஆண்டு பதவிக்காலமானது சமீபத்திய ஆண்டுகளில் மிக நீண்டதாக உள்ளது. 


தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான செயல்முறை என்ன?


மரபுப்படி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி (உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பல வருட அனுபவத்தின் அடிப்படையில்) இந்தியாவின் தலைமை நீதிபதியாக (CJI) பொறுப்பேற்கிறார். இந்த செயல்முறையானது ‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான நடைமுறைக் குறிப்பாணையில்’ (Memorandum of Procedure (MoP) என குறிப்பிடப்படுகிறது) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதியின் நியமனத்தின் அடிப்படை : இந்திய தலைமை நீதிபதி நியமனம் அந்த பதவிக்கு தகுதியானவராக கருதப்படுபவரை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிக்கு பரிந்துரை வழங்கப்பட வேண்டும் என்று நடைமுறைக் குறிப்பாணை (Memorandum of Procedure (MoP)) கூறுகிறது. 1999-ஆம் ஆண்டில் நடைமுறைக் குறிப்பாணை (MoP) நிறுவப்படுவதற்கு முன்பே, தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மரபுப்படி உயர் பதவிக்கு உயர்த்தப்படுவது வழக்கம். 


நியமன செயல்முறை எவ்வாறு தொடங்குகிறது : நடைமுறைக் குறிப்பாணையின் (MoP) படி, ஒன்றிய சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் ஒரு பரிந்துரையை குறிப்பிடும்போது நியமனத்திற்கான செயல்முறை தொடங்குகிறது. இந்த பரிந்துரை, அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க, பதவி விலகும் இந்திய தலைமை நீதிபதியிடம் (CJI) பரிந்துரை கோரப்படுகிறது. மரபுப்படி, தற்போதைய தலைமை நீதிபதி ஓய்வு பெறும் தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு செயல்முறை தொடங்க "பொருத்தமான நேரம்" (appropriate time) ஆகும். தலைமை நீதிபதி சந்திரசூட் தனது பரிந்துரை கடிதத்தை அக்டோபர் 17-ம் தேதி அன்று ஒன்றிய அரசுக்கு அனுப்பினார். 


ஒன்றிய அரசின் ஒப்புதல் : நடைமுறைக் குறிப்பாணையில் (MoP) குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள செயல்முறையின் படி, இந்திய தலைமை நீதிபதி அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரையை வழங்குகிறார். இதன்பிறகு, மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர், பிரதமரிடம் பரிந்துரை செய்வார். அதன்பின்னர், பிரதமர் நியமனம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.


அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதால், ஒரு தலைமை நீதிபதியின் பதவிக்காலம் அவர்களின் முன்னோடி நீதிபதியின் ஓய்வு பெறும் வயதைப் பொறுத்தது.  எதிர்காலத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளின் பட்டியல் இங்கே குறிப்பிட்டுள்ளது. 

 

மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதியை தலைமை நீதிபதியாக நியமிக்கும் மரபிலிருந்து எப்போதாவது விலகல் ஏற்பட்டுள்ளதா?


ஆம். இந்த மரபு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நிராகரிக்கப்பட்டது. அவரது அரசாங்கம் 1973-ஆம் ஆண்டில் நீதிபதி ஏ.என்.ரேவை இந்திய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. மேலும், மூன்று மூத்த நீதிபதிகளான ஜே.எம்.ஷெலட் (J.M. Shelat), கே.எஸ்.ஹெக்டே (K.S. Hegde) மற்றும் ஏ.என்.குரோவர் (A.N. Grover) ஆகியோரை மாற்றியது.


நீதிபதி ரே (Justice Ray) தனது மூத்த சக நீதிபதிகளைக் காட்டிலும் இந்திரா அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததாகக் கருதப்பட்டார். "அடிப்படை கட்டமைப்பு" கோட்பாட்டை (basic structure doctrine) வகுத்த கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை அறிவித்த மறுநாள் அவரது நியமனம் அறிவிக்கப்பட்டது. 13 நீதிபதிகள் கொண்ட அமர்வின் 7-6 தீர்ப்பில் நீதிபதி ரே சிறுபான்மையினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜனவரி 1977-ஆம் ஆண்டில், நீதிபதி எச்.ஆர்.கண்ணாவை நீக்கிவிட்டு, நீதிபதி எம்.எச்.பெக்கை தலைமை நீதிபதியாக நியமித்தது இந்திரா காந்தி அரசு நியமத்திற்கான மரபை மீண்டும் புறக்கணித்தது.  ஏ.டி.எம் ஜபல்பூர் vs ஷிவ் காந்த் சுக்லா (ADM Jabalpur vs. Shiv Kant Shukla) உத்தரவில் நீதிபதி கன்னா மட்டுமே கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். இதில் நீதிபதிகள் ஏ.என்.ரே, பி என் பகவதி, ஒய்.வி.சந்திரசூட் மற்றும் எம்.எச்.பெக் ஆகியோர் அடங்கிய பெரும்பான்மை அமர்வில் தேசிய அவசரகால காலத்தில் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன என்பதை அரசாங்கத்துடன் ஒப்புக்கொண்டனர். 


நடைமுறைக் குறிப்பாணை (MoP) எப்படி உருவானது? 


முதல் நீதிபதிகள் வழக்கு (1981), இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (1993) மற்றும் மூன்றாவது நீதிபதிகள் வழக்கு (1998) ஆகியவற்றில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுக்கான செயல்முறையை நிறுவியது. இந்த செயல்முறை உச்ச நீதிமன்ற கொலீஜியம் என்று அழைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம், அதன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்.


1999-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நடைமுறைக் குறிப்பாணை (MoP), நியமன செயல்முறை மற்றும் மையமாகச் செயல்படுகிறது. இது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது.  நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலீஜியம் அமைப்பு ஒரு நீதித்துறை கண்டுபிடிப்பு என்பதால் இந்த மையம் முக்கியமானதாக உள்ளது. இது சட்டத்தால் நிறுவப்படவில்லை அல்லது அரசியலமைப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை.


2015-ம் ஆண்டில்,  உச்சநீதிமன்றம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission (NJAC)) உருவாக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்தது.  இந்த சட்டத்திருத்தம் நீதிபதிகளை பரிந்துரை செய்வதில் ஒன்றிய அரசுக்கு அதிக செல்வாக்கு செலுத்த அனுமதித்திருக்கும். இந்த தீர்ப்புக்குப் பிறகு, 2016-ம் ஆண்டில் நடைமுறைக் குறிப்பாணை (MoP) மறுபரிசீலனை செய்யப்பட்டது. இருப்பினும், அது இன்னும் இறுதி செய்யப்படுவதாக கடந்த ஆண்டு வரை அரசாங்கம் கூறியுள்ளது.




Original article:

Share: