இந்தியாவுக்கு நிலையான மக்கள்தொகை தேவை, அதிக குழந்தைகள் அல்ல.

 தென் மாநிலங்களின் கவலைகளை நிதிக்குழு கவனிக்க வேண்டும். 


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தமிழ்நாட்டின்  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சமீபத்திய கருத்துகள் பரவலான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவை இரண்டு குழந்தை விதிமுறைகள் (two-child norm) குறித்த நீண்டகால தேசிய ஒருமித்த கருத்துக்கு முற்றிலும் எதிராக உள்ளது. இரண்டு முதல்வர்களும் உண்மையில் பெரிய குடும்பங்கள் மற்றும் அதிக குழந்தைகளை ஆதரித்து உள்ளனர். சென்னையில் நடந்த திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எங்களுக்கும் 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர்கள் தகுதி பெறுவார்கள் என்ற சட்டத்தை நாயுடு இயற்றிய பிறகு இது நடந்தது.  இத்தகைய அறிக்கைகள் மூர்க்கத்தனமானவை மற்றும் வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளுடன் அதன் வளர்ச்சி இலக்குகளை சமநிலைப்படுத்துவதில் இன்னும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இவை குறுகிய மனநிலையை பிரதிபலிக்கின்றன.


மொத்த கருவுறுதல் விகிதத்தில் (Total Fertility Rate (TFR)) ஒட்டுமொத்த சரிவு நல்லது என்றாலும், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற சில மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் மாற்று நிலை 2.1 யை விட மிக அதிகமாக உள்ளது.  இந்த மாநிலங்களுக்கு பொது சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த அதிக நிதி ஆதாரங்கள் தேவை.  இது அவர்களின் மக்கள்தொகையை நிலைப்படுத்த உதவும். 


இந்த அறிக்கைகளின் பின்னணியில் மூன்று பரந்த காரணங்கள் உள்ளன. முதலாவதாக, வட மாநிலங்கள் அவற்றின் மக்கள் தொகை அளவு காரணமாக ஒன்றிய அரசின் அதிகாரங்களில் பெரும் பங்கைப் பெறுகின்றன.  இரண்டாவதாக, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு வரவிருக்கும்  தொகுதி மறுவரையறையின் (delimitation) போது, தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் குறைவான இடங்களைப் பெறக்கூடும். மூன்றாவதாக, வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் அதிக  மூத்த குடிமக்களின் அதிக எண்ணிக்கை போன்ற பிரச்சனைகள் உள்ளது.

 

எவ்வாறாயினும், அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்கள்  பற்றிய அச்சங்கள் தவறானவை.  கடந்த 77 ஆண்டுகளில்,  நாடாளுமன்றத்தில் வட, மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருந்தாலும், தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட வேகமாக முன்னேறியுள்ளன. தென்னிந்திய வளர்சிக்கு வட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது. உண்மையில், மூத்த குடிமக்கள் தொகை பற்றிய தெற்கின் கவலைக்கான பதில், அதிக குழந்தைகளை பெறுவதில் இல்லை, மாறாக புலம்பெயர்ந்தோருக்கு இடமளிப்பதில் உள்ளது.


இருப்பினும், தென் மாநிலங்களின் கவலைகள் கவனிக்கப்பட வேண்டும். 16-வது நிதி ஆணையம், தற்போது அதிகாரப்பகிர்வு குறித்த மாநிலங்களின் கருத்துகளைத் தேடும் பணியில் உள்ளது.  15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மக்கள்தொகை அடிப்படையில் 12.5% பங்கை அளிக்கிறது. இருப்பினும், மக்கள் தொகை மற்றும் பரப்பளவு ஒவ்வொன்றும் 15% பெறுகின்றன. மேலும், வருமான தூரம் (மிக உயர்ந்த தனிநபர் வருமானத்திலிருந்து) 45% பங்கை கொண்டுள்ளது. மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வருமான தூரம் ஆகியவற்றிற்கு இந்த முக்கியத்துவம் தென் மாநிலங்களுக்கு எதிராக செயல்படுகிறது.  குறிப்பாக வரி மற்றும் நிதி செயல்திறனில் 2.5% பங்கையே பெறுகின்றன. இது பின்தங்கிய மாநிலங்களை ஊக்குவிப்பதோ அல்லது நிதி பொறுப்புள்ள தென் மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பதோ இல்லை.  16-வது நிதிக்குழு இந்த ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தி, தென் மாநிலங்களின்  பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் விபரீதமான பேச்சுக்களையும் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 




Original article:

Share: