கர்ப்பிணிகளுக்கு வேலை வாய்ப்புகளை மறுக்க மருத்துவ சான்றிதழ்கள், உடல் பரிசோதனைகள் மற்றும் விதிவிலக்காக தகுதி நீக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சட்டமியற்றுவோர் கவனிக்க வேண்டும்
இந்த மாத தொடக்கத்தில், டெல்லி உயர்நீதிமன்றம் சோனு ராஜ்புத் vs இந்திய ஒன்றியம் (Sonu Rajput vs Union of India) வழக்கில் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இதில், பணிபுரியும் பெண்களுக்கான சமத்துவத்தை பெறுவதில் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது முக்கிய வழக்காகப் பார்க்கப்படுகிறது.
மனுதாரர் சோனு ராஜ்புத் ஒரு இளம் பெண் ஆவார். இவர், ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் (Sashastra Seema Bal (SSB)) 'கான்ஸ்டபிளாக (தூய்மைப்பணி நபர்-பெண்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒதுக்கீட்டின் கீழ் பணிக்கு விண்ணப்பித்தார்.
மேலும், இவர் உடல் தாங்குதிறன் சோதனை (physical endurance test) மற்றும் உடல் தரநிலை சோதனைக்கு (physical standard test) தகுதி பெற்றார். இருப்பினும், இருப்பினும், இறுதி கட்டமாக இருந்த மருத்துவ தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அதிக எடை காரணமாக இவர் தேர்வில் தோல்வியடைந்தார் (உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index (BMI)) 25-க்கு குறைவாக இருக்க வேண்டும்). குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுதப் படைகளில் உள்ள பணியாளர்கள் மோசமான பணி நிலைமைகளின் கீழ் வேலை செய்கிறார்கள். எனவே, மருத்துவ பரிசோதனையின் இறுதி முடிவை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய ஆயுத காவல் படைகள் குறிப்பிட்டன. மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஆட்சேர்ப்பு மருத்துவத் தேர்வுக்கான வழிகாட்டுதல்களின் படி ஒரு பெண் குழந்தை பிறந்து ஆறு வாரங்கள் முடிந்த பிறகு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தாலும், மருத்துவக் குழுவின் மறுபரிசீலனைக்கு அவர் தகுதியானவர் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையை குறைக்க ஆறு வார காலம் மிகவும் குறுகியதாக இருப்பதைக் கவனித்த நீதிமன்றம், கர்ப்பத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் மருத்துவ ஆரோக்கியத்தைப் பெற வழிகாட்டுதல்கள் மிகவும் நியாயமானதாக அதிக காலத்தை கொடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால் அனைவருக்கும் ஒரு நியாயமான காலக்கெடுவை அமைக்க முடியுமா? கருவுற்றிருக்கும் உடல்கள் மற்றும் நிலைமைகள் மாறுபடும், எனவே ஒரே அளவு தீர்வைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம்.
ஃபாஸ்டியன் பேரம் (The Faustian bargain)
ஃபாஸ்டியன் பேரம் ஒரு ஜெர்மன் நாட்டுப்புற புராணத்திலிருந்து வருகிறது. இந்த கதையில், ஜோஹன் ஃபாஸ்ட், ஒரு மந்திரவாதி மற்றும் ஜோதிடர், தனது ஆன்மாவை பிசாசுக்கு விற்று அறிவையும் மந்திர சக்தியையும் பெற்றார். இது பெரும்பாலும் 'பிசாசுடன் ஒரு ஒப்பந்தம்' (a deal with the devil) என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஒழுக்கம் மற்றும் மதிப்புகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் பொருள் நன்மைகள் அல்லது திறன்களைப் பெறுவதை இது குறிக்கிறது. ஒப்பந்தம் பிசாசுடன் இருப்பதால், அந்த நபர் எப்போதும் முடிவில் இழக்கிறார்.
இதேபோல், பெண்கள் தங்கள் குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலையின் மூலம் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது பெரும்பாலும் தங்களின் திறன்களை இழக்கிறார்கள். இருப்பினும், இந்த சூழ்நிலையில் அரசு "பிசாசாக" இருக்க வேண்டியதில்லை. அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி நன்மதிப்பை மதிக்கும் ஒரு அரசு, இதுபோன்ற நியாயமற்ற பரிமாற்றங்களை நிறுத்த சட்டத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் முதலில், இந்த வகையான வர்த்தகத்தை சட்டம் எவ்வாறு உருவாக்குகிறது? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மகப்பேறு நலச் சட்டம்-1961 (Maternity Benefit Act) ஆனது 2017-ல் திருத்தப்பட்டுள்ளபடி, கர்ப்பிணிப் பெண்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான சட்டமாகும். இது அவர்களுக்கு 26 வார ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மற்றும் அனைத்து வேலைப் பலன்களுக்கும் பெண்களுக்கு உரிமை அளிக்கிறது. இருப்பினும், வேலையின் தேவைகள் அல்லது பதவி உயர்வுகள் போன்ற சலுகைகள் வரும்போது கர்ப்பிணிப் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தச் சட்டம் தெளிவுபடுத்தவில்லை. மேலும், பணியிடத்தில் கர்ப்பத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு எதிராக பொதுவான விதி எதுவும் இல்லை. இதனால், சோனு ராஜ்புத் வழக்கில் பெண்களின் மகப்பேறு உரிமையை பாதுகாக்க நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. இதனால், கர்ப்பம் அவர்கள் வேலை பெறுவதையும் வாழ்வாதாரத்தைப் பெறுவதையும் தடுக்காது என்பதை உறுதி செய்வதை நீதிமன்றம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1990-ம் ஆண்டு, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தலைவர் எஸ். அமுதா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியது. இதில், மருத்துவ தேர்வு விதிகளின் 21-வது விதியை நீதிமன்றம் ரத்து செய்தது. இது அரசியலமைப்பின் 21-வது பிரிவை மீறுவதாக மனுதாரர்கள் கண்டறிந்தனர். கர்ப்ப காலத்தின் போது உயர் பதவில் இருந்தால், "தற்காலிகமாக தகுதியற்றவர்கள்" (temporarily unfit) என்று அறிவிக்க இந்த ஒழுங்குமுறை அனுமதித்துள்ளது. இந்நிலையில், மனுதாரர் 16 வார கர்ப்பிணியாக இருந்தார். அவர் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு இளநிலை வேதியியலாளராக நிரந்தர நியமனம் மறுக்கப்பட்டது.
இதேபோல், டாக்டர் ராணி தேவி vs சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகம் (Dr. Rani Devi vs. Chaudhary Devi Lal University) தொடர்ந்த வழக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஹரியானா அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்தது. இந்த சுற்றறிக்கையில் விரிவுரையாளர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாக இருந்தால் "தற்காலிகமாக தகுதியற்றவர்கள்" என்று அறிவித்தது.
மேலே குறிப்பிட்ட இரண்டு வழக்குகளிலும், கர்ப்ப காலத்தில் பணிபுரியும் பெண்கள் வேலை சம்மந்தமான நிலைகளில் இவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று நீதிமன்றம் கவனித்தது. இந்த தரவானது, நீதிமன்றத்திற்கு ஒரு தீர்வை வழங்குவதற்கும், கர்ப்பிணி பெண்கள் தங்கள் வேலையைத் தொடர அனுமதிப்பதற்கும் வழிவகுத்தது. சுருக்கமாக கூறுவதானால், கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைத் தீர்க்க நீதிமன்றங்கள் தலையிட்டன. மருத்துவ உடற்தகுதி குறித்த ஆண்களை மையமாகக் கொண்ட யோசனைக்கு வேலைவாய்ப்பு விதிகள் சாதகமாக இருப்பதால் இது அவசியமானது.
உழைக்கும் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும்
சில பயனுள்ள சட்ட தீர்வுகள் இருந்தபோதிலும், சட்டக் கட்டமைப்பானது பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு முக்கிய வழிகளில் பாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது. முதலாவதாக, வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிரான சட்டம் மற்றும் கர்ப்பம் தொடர்பான வேறுபாடுகளால் தங்குமிடங்களுக்கு உரிமை இல்லாமல், பெண்கள் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக தங்கள் இனப்பெருக்கத் தேர்வுகளை வர்த்தகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இரண்டாவதாக, நீதிமன்றங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புதிய சட்டங்களை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்கும் இடையே சமநிலையைக் கண்டறிய வேண்டும். சட்டமன்றம் செயல்படாத வகையில் அவர்கள் செயல்பட வேண்டும். பணியிடத்தில் கர்ப்பம் காரணமாக பெண்கள் பாகுபாடு அல்லது தடைகளை எதிர்கொள்ளும் போது நீதிமன்றங்கள் இன்னும் வழக்குகளை விசாரித்து ரிட் அதிகார வரம்பு (writ jurisdiction) மூலம் தீர்வுகளை வழங்குகின்றன. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டங்கள் இல்லாதது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனையாகும்.
நிர்வாகத்தில் அக்கறையுள்ள, பிரதிநிதித்துவ அமைப்புகள் இல்லாதது மற்றொரு குறைபாடாகும். உடற்தகுதி தேர்வுகளுக்கான காலக்கெடுவை அமைப்பதற்கு முன் எந்த மகளிர் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறவில்லை என்று தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. கர்ப்பிணிகளின் உடலியல் யதார்த்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நியாயமான தங்குமிடம் (reasonable accommodation) என்ற கொள்கையை பின்பற்றுவதாகும். இது கர்ப்பிணி பெண்களின் குறிப்பிட்ட சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்யும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities Act), 2016 மூலம் நிறுவப்பட்ட வலுவான கட்டமைப்பானது, பணியிடத்தில் பெண்களுக்கு தகுந்த விழிப்புண்ர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிகாட்டியாக செயல்படும். குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பிற்கான தீர்வு, கடந்த கால தவறுகளை மீண்டும் செய்வதாக இருக்க முடியாது. ராஜ்புத் பதவியின் நிலை, 'கான்ஸ்டபிளாக (தூய்மைப்பணி நபர்)-பெண்' இதற்கு பணிகளைச் சேர்ப்பதை விட அதிகம் தேவைப்படுகிறது. இது கர்ப்பிணி நபர்களின் தனிப்பட்ட சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதில் தொடங்குகிறது.
இந்த நீடித்த பிரச்சினை இருந்தபோதிலும், வேலைவாய்ப்பின் போது கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை கவனத்தில் கொண்டு அதற்கு ஒரு தீர்வை வழங்க சட்டமன்றம் தவறிவிட்டது. வரலாற்று ரீதியாக மகப்பேறு உரிமையை நிலைநிறுத்திய நீதிமன்றத்தின் மூலம் உரிமையை பெறலாம் என்றாலும், சட்டம் இந்த உரிமையை எளிதில் அங்கீகரிக்க முடியும் போது, அவர்களை கட்டாயப்படுத்த எந்த காரணமும் இல்லை.
மருத்துவ சான்றிதழ்கள், உடல் பரிசோதனைகள் மற்றும் தன்னிச்சையான தகுதி நீக்க அளவுகோல்கள் கர்ப்பிணிகளுக்கு வேலை வாய்ப்புகளை மறுக்க பயன்படுத்தப்படுவதை சட்டமன்றம் அங்கீகரிக்க வேண்டும். அத்தகைய வேலை வாய்ப்புகள் மகப்பேறு சலுகைகளின் பிரிக்க முடியாத பகுதியாகும் மற்றும் இவற்றிற்கு எதிரான நேர்மறையான மற்றும் பாகுபாடு எதிர்ப்பு பாதுகாப்புகள் சட்டத்தால் வழங்கப்பட வேண்டும்.