ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயல்முறையை சரிசெய்ய வேண்டிய தருணம் -அசோக் தாக்கூர், மந்தா எஸ்.எஸ்.

 குடிமைப் பணிகளின் நற்பெயரை பாதுகாப்பதில்  இந்தியாவுக்கு மிகப்பெரிய பணி உள்ளது.


ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) மற்றும் இந்திய ஆட்சிப் பணி ஆகியவற்றின் நற்பெயர் பூஜை கேத்கர் சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டுள்ளது. திருமதி கேத்கர் தேர்வாணையத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தினார். தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility-Cum-Entrance Test (NEET)) தேர்வில் உள்ள குறைபாடுகளை கொள்ளும்போது, ​​சிக்கல் தெளிவாகிறது. இந்த சிக்கல்களை சரிசெய்வது  இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்திய ஆட்சிப் பணி (IAS) போன்ற குடிமை பணிகளின் நற்பெயரை மீட்டெடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் நற்பெயரையும் மேம்படுத்த நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். 


இடைவெளி குறைபாடு


நீட் தேர்வு சர்ச்சை ஒரு முறை தேர்வுத் தாளை சரியாக கையாளாததால் பிரச்சனை  ஏற்பட்டது. மாறாக, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய வழக்கு மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடுகளில் உள்ள "மேல் வகுப்பினர்" விதி மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (economically weaker sections (EWS)) இட ஒதுக்கீடு ஆகிய இரண்டிலும் நீண்ட கால பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இரு பிரிவினரும்  வட்டாட்சியரிடம் இருந்து வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், இந்த வழக்கில் இந்த செயல்முறை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.


பட்டியலிடப்பட்ட சாதிகள் (Scheduled Caste (SC)) அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribe (ST)) என்று சிலர் தவறான தகவல்களை வழங்குவதாக குற்றச்சட்டு எழுந்துள்ளது. இந்தக் புகார்களை எளிதாக சரிபார்க்கலாம்.  இருப்பினும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒதுக்கீடு மற்றும் ஊனமுற்ற பிரிவினருக்கு இந்த சரிபார்ப்பு எளிதாக இருக்காது. இந்த அமைப்புகளை எளிதாகப் பயன்படுத்த முடியும்.

வருமான விஷயத்தில், விண்ணப்பதாரரின் வருமானத்தை கருத்தில் கொள்வதா அல்லது அவர்களின் தந்தையின் வருமானத்தை கருத்தில் கொள்வதா என்பதில் இன்னும் குழப்பம் உள்ளது. மேலும், ஒரு நபர் OBC/EWS பிரிவின் கீழ் இந்திய வருவாய் பணியில்  (Indian Revenue Service) சேர்ந்து, பின்னர் அவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் சேர விரும்புவதால் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இடைக்காலத்தில் அவரது வருமானம் எல்லையைத் தாண்டியுள்ளது. பின்னர் என்ன நடக்கும்? வருமானம் மாறும் என்றால், ஒரு நபரின் பொருளாதார நிலையின் ஒரு முறை புகைப்படம் எவ்வாறு காலவரையின்றி ஏற்றுக்கொள்ள முடியும்? 


ஒரு நபரின் நிலை ஒரு சான்றிதழால் நிறுவப்பட்டவுடன், அது விண்ணப்பதாரரால் வித்தியாசமாக தெரிவிக்கப்படுவதில்லை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சரிபார்க்கப்படுவதில்லை. பல சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் முதல் முறையாக தேர்வில் தேர்ச்சி பெறத் தவறி, பின்னர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான சான்றிதழுடன் தேர்ச்சி பெறுவதைப் பார்த்திருக்கிறோம். நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், வருமான சான்றிதழை வழங்கும் பொறுப்பில் உள்ள வட்டாட்சியருக்கு அவ்வாறு செய்வதற்கு எந்த வசதி அல்லது நற்சான்றிதழும் இல்லை. 


சிலர் கூறுவதைப் போல, "இது எப்போதும் இப்படித்தான் செய்யப்படுகிறது" என்பதால் மட்டுமே அவர்கள் அதை வெளியிடுகிறார்கள்.  எடுத்துக்காட்டாக, ஒரு விண்ணப்பதாரரின் தந்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் செல்வந்தராக இருந்து,  சொந்தமாக தொழில்களை செய்தலும், தனிநபர் வருமான வரி செலுத்தவில்லை என்றால், வட்டாட்சியருக்கு இதைத் பற்றி தெரிந்துகொள்ள வழியில்லை.


இத்தனை கேள்விகள் மற்றும் பிரச்சினைகள் இருந்தபோதிலும், வருமானம் குறித்த விதிகளை புதுப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. வழக்குகள் மறு ஆய்வு செய்யப்படவில்லை. தற்போதுள்ள விதிகள் பலவீனமாக உள்ளன.  மாறாக, மக்கள் பெரும்பாலும் இந்த சிக்கல்களை புறக்கணிக்கிறார்கள் அல்லது அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 


நாங்கள் இருவரும் அமைச்சகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். ஆனால் நிறுவனங்களிடம் இருந்து விளக்கம் கேட்கும் ஒரு வழக்கையும் நாங்கள் பெறவில்லை. சந்தேகத்திற்குரிய வழக்குகள் எதுவும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இப்போது நாம் பார்ப்பது ஆரம்பம் தான். குடிமைப் பணி மற்றும் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து இன்னும் பல பிரச்சினைகள் எழுந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இருப்பினும், வழக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு செயல்முறை அமைப்பு இந்தியாவில் இல்லை. யாராவது புகார் அளித்தால் மட்டுமே ஆய்வு நடக்கும். கூடுதலாக, பரவலான பரிந்துரை (rampant sifarish)  என்ற கலாச்சாரம் ஒரு குழப்பமான சூழலுக்கு வழிவகுக்கிறது. அங்கு சரியும் தவறும் கலந்ததாகத் தெரிகிறது. இது சிறந்த நிர்வாகிகளுக்கும் சவால்களை உருவாக்குகிறது.


முன்னோக்கி செல்லும் வழி


தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அதிக வெளிப்படைத்தன்மை மாற்று மருந்தாக இருக்க முடியுமா? கேத்கர் விஷயத்தில் இதைச் செய்திருந்தால், அவரால் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வை 12 முறை எழுதியிருக்க முடியாது. இருப்பினும், ஆதார் போன்ற பாதுகாப்பான அமைப்பைக் கூட பயன்படுத்த முடியும். உதாரணமாக, 2018-ஆம் ஆண்டில், மானிய விலையில் எரிவாயு வழங்குதல் போன்ற பிற நலத் திட்டங்களுக்கான மானியங்களை மோசடியாகக் கோர ஆதார் எண்களை உருவாக்க போலி பயோமெட்ரிக் தரவு பயன்படுத்தப்பட்டது.


அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வு? முதலாவதாக, மாநிலம், அமைச்சகம் அல்லது துறையைப் பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வருமானம் மற்றும் இயலாமை குறித்த  தெளிவான வழிமுறைகளை அரசாங்கம் வெளியிட வேண்டும். தேவைப்பட்டால், இந்த பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அரசாங்கத்திற்கு உதவ முக்கிய நபர்கள் அல்லது நிறுவனங்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கலாம். அதற்கு நமக்கு ஒரு வலுவான சரிபார்ப்பு அமைப்பு தேவை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில், முன்னோக்கிய மற்றும் காலத்திற்கு ஏற்ற நடைமுறைகளை  உருவாக்க வேண்டும். மேலும், மோசடியை தடுக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.


பல விஷயங்களில் நேர்மையான சிந்தனையும் நமக்குத் தேவை. குடிமை தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் மனநல குறைபாடுகள் ஏன் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை பணியாளர் மற்றும் தொழில்நுட்பத் துறை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு தீவிரமான மற்றும் கவனம் செலுத்தும் சிந்தனை தேவைப்படுகிறது. கூடுதலாக, குடிமை தேர்வில் பாதுகாப்புச் சேவைகளைப் போல் இல்லாமல், தகுதித் தேர்வை (aptitude test) ஏன் சேர்க்கவில்லை என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.


முறையான சோதனையின்றி தவறான சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். நீதிமன்றங்கள் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு தவறான நபர் குடிமை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், தகுதியான நபர் அரசாங்கத்தில் பணியாற்றும் வாய்ப்பை இழக்கிறார். 


குடிமைப் பணித்தேர்வில் தேசத்திற்கு பணி செய்வதில் ஆர்வம் இல்லாத நபர்களுக்கு இடமில்லை. ஓட்டுநனரால் இயக்கப்படும் கார் போன்று சேவைகளுடன் வரும் சலுகைகளை அனுபவிக்க   தேர்வில் தேர்ச்சி பெறும் நபருக்கு குடிமை பணியில் இடமில்லை. எனவே, நடைமுறை மற்றும் கட்டமைப்பு அமைப்புகளில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது.


அசோக் தாக்கூர், முன்னாள் கல்விச் செயலாளர், இந்திய அரசு; எஸ்.எஸ். மந்தா, முன்னாள் தலைவர், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு




Original article:

Share: