தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அவர் மைனர் என்பதை தீர்மானிக்க எலும்பு பகுப்பாய்வு சோதனை (ossification test) நடத்தப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் தர்மராஜ் காஷ்யப்பும் ஒருவர். அவர் மைனரா என்பதைத் தீர்மானிக்க மும்பை நீதிமன்றத்தின் முன் அவருக்கு எலும்பு பகுப்பாய்வு சோதனை (ossification test) நடத்தப்பட்டது. காஷ்யப் மைனர் என்று அவரது வழக்கறிஞர் கூறினார். ஆனால், சோதனை திங்களன்று இந்தக் கூற்றை நிராகரித்தது. மும்பையில் உள்ள எஸ்பிளனேட் நீதிமன்றம், காஷ்யப்பை அக்டோபர் 21-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. காஷ்யப் தனக்கு 17 வயது என்று கூறியிருந்தார். ஆனால், அவரது ஆதார் அட்டையில் அவரது வயது 19 என்று இருந்தது.
எலும்பு பகுப்பாய்வு சோதனை (ossification test) என்றால் என்ன?
எலும்பு பகுப்பாய்வு சோதனை (ossification test) என்பது ஒரு நபரின் எலும்புகளை ஆய்வு செய்வதன் மூலம் அவரது வயதைக் கண்டறியப் பயன்படும் ஒரு மருத்துவ முறையாகும்.
இந்தச் சோதனையின் போது, உடலில் உள்ள இடுப்பு எலும்பு (clavicle), மார்பெலும்பு (sternum) மற்றும் இடுப்புப் பகுதி (pelvis) போன்ற குறிப்பிட்ட எலும்புகளின் எக்ஸ்ரே எடுக்க, இந்த எலும்புகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஏனெனில், மேற்கண்ட எலும்புப் பகுதியானது ஒரு நபர் வளரும்போது குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படுகின்றன.
ஒரு மனிதனின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட வயதில் சில எலும்புகள் கடினமாகி, ஒன்றுக்கொண்று இணைவதால், எலும்புகள் வயதைக் குறிக்கும் ஒரு வழியாக இருக்கலாம்.
நீதிமன்றங்கள் பெரும்பாலும் இந்த முறையைப் பயன்படுத்தினாலும், பாபா சித்திக் வழக்கைப் போலவே, சோதனைகள் மிகவும் துல்லியமாக கருதப்படுவதில்லை.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படி, "கதிரியக்க பரிசோதனையின் சான்றுகள் வயதை நிர்ணயிப்பதற்கு பயனுள்ள வழிகாட்டி காரணி என்று நீதிமன்றங்கள் எப்போதும் கருதுகின்றன. ஆனால், அது முடிவானது அல்லது மறுக்க முடியாதது" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
எலும்பு பகுப்பாய்வு சோதனை (ossification test) என்பது மனிதர்களில் குழந்தை பருவத்திலிருந்து இளமை பருவத்தின் இறுதி வரை நிகழும் எலும்பு உருவாக்கத்தின் செயல்முறையாகும்.