அடல் புத்தாக்கத் திட்டம் 2.0 (Atal Innovation Mission(AIM))

 முக்கிய அம்சங்கள் :


1. அடல் புத்தாக்கத் திட்டம் (AIM) 2.0 என்பது வளர்ந்த இந்தியா (Viksit Bharat) நோக்கிய ஒரு படியாகும். இது, இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலை விரிவுபடுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடல் புத்தாக்கத் திட்டத்தின் (AIM) தொடர்ச்சியானது சிறந்த வேலைகள், புதுமையான தயாரிப்புகள் மற்றும் துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சேவைகளை உருவாக்குவதற்கு நேரடியாக பங்களிக்கும்.


2. அடல் பழுதுநீக்க ஆய்வகம் (Atal Tinkering Labs (ATL)) மற்றும் அடல் புத்தாக்க வளர் மையங்கள் (Atal Incubation Centres (AIC)) போன்ற அடல் புத்தாக்கத் திட்டம்-1.0-ன் சாதனைகளை அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 உருவாக்குகிறது. இந்த திட்டத்தின் உத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. அடல் புத்தாக்கத் திட்டம்-1.0 இந்தியாவின் வளர்ந்து வரும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்க புதிய கண்டுபிடிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. மாறாக, அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய முன்னோடியான முயற்சிகளை (pilot initiatives) அறிமுகப்படுத்துகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் சமூகத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் வெற்றிகரமான திட்டங்களை அளவிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 மூன்று வழிகளில் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு சூழலை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது: அதில்,

(அ) ​​அதிக கண்டுபிடிப்பாளர்களையும், தொழில்முனைவோரையும் கொண்டு வருவதன் மூலம் உள்ளீட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

(ஆ) அதிக புத்தொழில்கள் வெற்றிபெற உதவுவதன் மூலம் வெற்றி விகிதம் அல்லது 'செயல்திறனை' (throughput) மேம்படுத்த முயல்கிறது.

(இ) சிறந்த வேலைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதன் மூலம் 'வெளியீட்டின்' (output) தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


அடல் புத்தாக்கத் திட்டம் (Atal Innovation Mission (AIM)) பற்றிய தகவல்கள்


அடல் புத்தாக்கத் திட்டம் என்பது இந்திய அரசின் முதன்மையான முயற்சியாகும். இது நாடு முழுவதும் புதுமை மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை உருவாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடல் புத்தாக்கத் திட்டத்தின் (AIM) குறிக்கோள், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதாகும். இது பல்வேறு பங்குதாரர்களுக்கு தளங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. நாட்டில் புதுமை மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை மேற்பார்வையிடும் கட்டமைப்பை உருவாக்க அடல் புத்தாக்கத் திட்டம் (AIM) செயல்படுகிறது.




Original article:

Share: