சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலம் (Eco-sensitive Zone) என்றால் என்ன?

 • நிலையான வளர்ச்சி பற்றிய விவாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு முக்கிய தலைப்பாகும். காட்கில் அறிக்கை மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கை ஆகியவை இப்பகுதியில் பாதுகாப்பு உத்திகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.


• பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கு சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் (Eco-Sensitive Zones (ESZs)) முக்கியம். ஆனால், அவை பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களுடன் மோதல்களை சந்தித்து வருகின்றன. சமீபத்திய உதாரணமாக கேரளாவின் முன்மொழிவு, இந்தச் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.


முக்கிய அம்சங்கள்:


• வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு 400க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆபத்தான கிராமங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூரல்மலை, முண்டக்காய், வெள்ளரிமலை போன்ற கிராமங்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன. மே மாதம், சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் குறித்த மாநிலத்தின் வரைவு முன்மொழிவு, வயநாடு, வெள்ளரிமலை உட்பட 12 கிராமங்களை உள்ளடக்கியது.


• நவம்பர் 2, 2024 அன்று, கேரள அரசு திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பித்தது. 12 மாவட்டங்களில் 29 தாலுகாக்கள் முழுவதும் 98 கிராமங்களில் 8,590.69 சதுர கி.மீ நிலத்தை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கக் கோரியது. இந்த முன்மொழிவு உள்ளாட்சித் துறையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த தகவலை  மக்களவையில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் பகிர்ந்துள்ளார்.


• ஜூலை மாதம், மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பான ஆறாவது வரைவு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு 56,825 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவித்தது. இந்தப் பகுதிகள் குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளன.


• சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் என்று குறிப்பிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட கிராமங்கள் சுரங்கம், குவாரிகள், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் புதிய அனல் மின் நிலையங்கள் கட்டுவதற்கு முழு தடை விதிக்கப்படும். விண்வெளி விஞ்ஞானி கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்ட பணிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


• ஆறாவது வரைவு அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் அளித்தது. பல்வேறு மாநில அரசுகளின் பரிந்துரைகளை நிபுணர் குழு இப்போது ஆய்வு செய்து வருகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2013ஆம் ஆண்டில், மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 9,993.7 சதுர கிமீ பரப்பளவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக குறிக்க கேரளா முன்மொழிந்தது. 2019ஆம் ஆண்டில், கேரளா 8,656 சதுர கிமீ பரப்பளவைக் குறைக்க பரிந்துரைத்தது. இருப்பினும், சமீபத்திய வரைவு அறிவிப்பில் 9,993.7 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் நுண்ணுணர்வுகொண்டதாக உள்ளது.


• தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள நிலம் சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும்  என்று  ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் தேசிய வனவிலங்கு செயல் திட்டத்தில் (National Wildlife Action Plan)  2002-2016 குறிப்பிடப்பட்டுள்ளது.


• 10-கிமீ விதி என்பது பொதுவான வழிகாட்டுதல், அதன் பயன்பாடு மாறுபடலாம். 10 கி.மீ. தாண்டி உள்ள பகுதிகள், நுண்ணுணர்வு வழித்தடங்கள் (sensitive corridors) போன்ற சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், அவை சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களாக அறிவிக்கப்படலாம்.


• பிப்ரவரி 9, 2011ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்கள் "அதிர்ச்சித் தாங்கிகளாக" செயல்படுகின்றன என்று விளக்குகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகிலுள்ள பலவீனமான சுற்றுச்சூழல் (fragile ecosystems) அமைப்புகளில் மனித நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தை குறைப்பதே அவர்களின் நோக்கம்.


• இந்த பகுதிகள் ஒரு மாற்று மண்டலமாக (transition zone) செயல்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பையும், தொலைவில் உள்ள பகுதிகளுக்கு குறைந்த பாதுகாப்பையும் வழங்குகிறது.


• சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலங்களுக்கு (Eco-Sensitive Zones (ESZs)) அருகில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. மாறாக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுமே அவர்களின் நோக்கமாகும்.




Original article:

Share: