சட்டப்பிரிவு 356-ஐ அமல்படுத்துவதற்கான நிலையில் மணிப்பூர் -துஷ்யந்த் தேவ்

 அடிப்படை உரிமைகளின் இறுதி பாதுகாவலரான உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழும் மணிப்பூரில் வன்முறைகள் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது.

 

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரங்கள் மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது. இது 356-வது பிரிவை அமல்படுத்துவதை அவசியமாக்குகிறது. அதன்படி ஆளுநரின் அறிக்கைக்காக குடியரசுத் தலைவர் காத்திருக்க வேண்டியதில்லை. 356-வது பிரிவின் கீழ், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு செயல்பட முடியாது என்று குடியரசுத் தலைவர் கருதினால் இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தலாம். மணிப்பூரில், வன்முறை மே 2023-ல் தொடங்கியது. இந்த வன்முறை முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடுமையாக உள்ளது.


ஆகஸ்ட் 3, 1949 அன்று, பி.ஆர். அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் இந்த முக்கியமான விதி விளக்கினார் அதன்படி, முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தை சபைக்கு நினைவூட்டி ஆரம்பிக்க விரும்புகிறேன். அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதங்களின் போது, பிரச்சனையை கையாள்வதற்கான ஒரு அமைப்பை அரசியலமைப்பு உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்டதை நான் சபைக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று பி.ஆர். அம்பேத்கர் கூறினார். சட்டப்பிரிவு 277-A பின்னர் 356 என்று அழைக்கப்பட்டது. அதன் அவசியத்தை அம்பேத்கர் விரிவாக விளக்கினார். ஆளுநரின் அறிக்கைக்காகக் காத்திருக்காமல் செயல்படும் சுதந்திரம் குடியரசு தலைவருக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குடியரசுத் தலைவர் தனக்கு கிடைத்த தேவைகள் உண்மை என்று கருதினால், அவர் தனது கடமையை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும்.


மணிப்பூர் ஏன் வித்தியாசமானது என்பதை நிரூபிக்கிறது 


குடியரசு தலைவர், திரௌபதி முர்மு தனது அரசியலமைப்பு கடமைகளை அறிந்தவர் மற்றும் உணர்திறன் கொண்டவர் என்பதைக் காட்டியுள்ளார். விரைந்து செயல்படும் சக்தியும் பொறுப்பும் குடியரசு தலைவருக்கு உண்டு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற வன்முறைகள் மக்களிடையே நடந்து கொண்டிருக்கவில்லை. நாகாலாந்து மற்றும் மிசோரமில் கிளர்ச்சிகளின் வன்முறைகள் நீண்டகாலத்திற்கு முன்பு நடந்தாலும், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறது. 


மணிப்பூரில் நிலைமை வேறுபட்டது. மணிப்பூரில் சாதாரண மக்கள் வன்முறையால் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தங்களைக் காத்துக் கொள்ள வன்முறையில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


ஆகஸ்ட் 3-4, 1949 இல் அரசியல் நிர்ணய சபைக் கூட்டங்களின் போது இந்த விதியின் மீதான விவாதங்களை நினைவில் கொள்வது அவசியம். எச்.வி. காமத் இந்த விதியை கடுமையாக எதிர்த்தார். மேலும், குடியரசு தலைவருக்கு தலையிட்டு அதிகாரம் வழங்குவது "அரசியலமைப்புக் குற்றம்" (‘constitutional crime’) என்று கூறினார். ஆலடி கிருஷ்ணசுவாமி ஐயர் இந்த விதியை ஆதரித்தார். "அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக” ஒன்றிய அரசின் கடமையாக மாற்றுவதற்காக இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார். அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டில் ஏதேனும் ஒரு மாநிலம் சிரமங்களை எதிர்கொண்டால், அதில் தலையிட்டு விஷயங்களைச் சரிசெய்வது ஒன்றிய அரசின் கடமை என்றும் அவர் கூறினார்.


கே.சந்தானம், “இந்த விதிகளை எப்போது பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் என்று கூறினார். உள்நாட்டுப் பிரச்னை அல்லது வெளிப்புற தாக்குதல்கள் போன்ற மாநிலத்தில் அரசாங்க செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டால் அல்லது சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாவிட்டால், மாநில அரசால் செயல்பட முடியாது. இதுபோன்ற சூழல்களில் ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விதிகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை மட்டுமல்ல, அவசியமானவை. சூழலுக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சிக்கல் இன்னும் அதிகரிக்கும்.  


தாக்கூர் தாஸ் பார்கவா கூறும்போது, ​​“ஒட்டுமொத்த இயந்திரமும் செயலிழந்த நிலைதான் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன். சாதாரண மக்கள் அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதில்லை. அமைதி மற்றும் ஒழுங்குக்கான உள் குழப்பங்கள் அனைத்தும் இதன் மூலம் மறைக்கப்படுகின்றன.

 

டாக்டர்.அம்பேத்கர் மீண்டும் ஆகஸ்ட் 4, 1949 இல் எழுந்து பதிலளித்தார், "இந்திய அரசு சட்டம், 1935 இல் “இயந்திரங்களின் தோல்வி” (‘failure of machinery’) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அதன் நடைமுறை மற்றும் நியாயமான அர்த்தத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்”. இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டால், மாநிலங்களின் நிர்வாகத்தை இடைநிறுத்திவைப்பதற்கு முன், இந்த அதிகாரங்களைக் கொண்ட குடியரசுத் தலைவர், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் கூறினார். இவ்வாறு சட்டப்பிரிவு நிறைவேற்றப்பட்டது. 


பிரிவு 355 இது போன்ற சவால்களை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு உதவ ஒன்றியத்தை அரசை கட்டாயப்படுத்துகிறது. மேலும், ஒன்றிய அரசு முயற்சித்தும் வெற்றி பெறவில்லை என்று கருதலாம். 


நீதிமன்ற உத்தரவு 


மே 8, 2023 அன்று உச்சநீதிமன்றம் ஒரு பொதுநல வழக்கில், ஒரு உத்தரவை வழங்கியது, அதன்படி “எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தில் எந்த வன்முறையும் பதிவாகவில்லை என்று ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் (Solicitor General) கூறுகிறார். மேலும், நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, குறிப்பாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும், “மீண்டும் வன்முறைகள் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் அது வலியுறுத்தியது.


ஒன்றிய அரசின் உத்தரவாதத்தை நீதிமன்றம் பதிவு செய்து, “மனு மற்றும் கூடுதல் பிரமாணப் பத்திரங்களில் எழுப்பப்பட்ட கவலைகள் முறையாகக் குறிப்பிடப்படும் என்று ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார். தேவையான சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்” என்றார்.


இருப்பினும், ஜூலை 2023-ல், மே 4 அன்று ஒரு கும்பலால் பெண்களை நிர்வாணமாக சித்தரித்தது சென்ற சம்பவம் குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து நோட்டீஸ் எடுத்தது. இதைப் பார்த்த நீதிமன்றம், “மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்முறைகளைக் காட்டும் ஊடகங்களில் வெளியாகும் காட்சிகளால் நீதிமன்றம் மிகவும் கவலையடைந்துள்ளது. இந்த படங்கள் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளின் மொத்த மீறல்களை வெளிக்காட்டின. பெண்களை வன்முறையில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.


"அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்: (i) குற்றவாளிகளை அவர்களின் செயல்களுக்கு பொறுப்பாக்குங்கள் (ii) இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தணியாத வன்முறை 


மே 3 மற்றும் நவம்பர் 11, 2024 க்கு இடையில், இன வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். நூற்றுக்கணக்கான கோவில்கள், தேவாலயங்கள், வீடுகள் மற்றும் பிற இடங்கள் அழிக்கப்பட்டன. நவம்பர் 9-ஆம் தேதி, மூன்று பிள்ளைகளின் தாய் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். மேலும், 17 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.


தெளிவாக, உச்சநீதிமன்றத்தின் 27 விசாரணைகள் இருந்தபோதிலும், அது பயனற்றதாக இருந்தது. அடிப்படை உரிமைகளின் இறுதிப் பாதுகாவலரின் கண்காணிப்பின் கீழ், வன்முறை தொடர்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. மணிப்பூரின் 3 கோடி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை, சுதந்திரம், கண்ணியம் மற்றும் அமைதி ஆகியவை பறிக்கப்படுகின்றன. அமர்வில் உள்ள முதன்மை நீதிபதிகள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? சமீப காலமாக உச்சநீதிமன்றம் பலவீனமாகி வருவதை இது காட்டவில்லையா?


மணிப்பூரில் நடக்கும் மதவெறி வன்முறை, இந்தியாவுக்கு பெரும் கவலை அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசால் வன்முறையை தடுக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியும் அளிக்கிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், அரசாங்கம் முன்னெச்சரியாக செயல்பட்டிருக்க வேண்டும். அமைதி, மத நல்லிணக்கம், நீதி, நிவாரணம், மறுவாழ்வு ஆகியவற்றை மீட்டெடுக்க பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


தற்போதைய, சூழலில் குடியரசு தலைவரின் உடனடி தலையீடு தேவைப்படுகிறது. சட்டப்பிரிவு 356 பயன்படுத்தப்பட்டதைவிட அதிகமாக தவறாக பயன்படுத்தப்பட்டாலும், இப்போது அதை செயல்படுத்துவது நாடு முழுவதும் பாராட்டப்படும்.


துஷ்யந்த் தவே, மூத்த வழக்கறிஞர் மற்றும் இந்திய உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனின் முன்னாள் தலைவர் ஆவார்.




Original article:

Share: