தேசிய தலைநகர் பகுதியான டெல்லிக்கு மாசு தொடர்பான கட்டுப்பாடுகளின் மிக உயர்ந்த நிலை ஏன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் என்னென்ன தடை செய்யப்பட்டுள்ளது? அடுத்த சில நாட்களில் காற்றுத் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதா?
தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தில் (Graded Response Action Plan (GRAP)) நான்காம் கட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (நவம்பர் 18) டெல்லி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியது. தேசிய தலைநகர் பகுதியான டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை புகைமூட்டம் மற்றும் அதிக அளவு காற்று மாசுபாடு ஏற்பட்டதால், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (Air Quality Management (CAQM)) திங்கள்கிழமை முதல் GRAP-இன் நான்காம் கட்டத்தை செயல்படுத்த உத்தரவுகளை பிறப்பித்தது.
எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 441-ஆக இருந்தபோதிலும், GRAP-யை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள CAQM துணைக்குழு "முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும், காற்றின் தரம் மேம்படும் வரை காத்திருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும், தலைநகரில் காற்றின் தரக் குறியீடு (AQI) 450-க்கும் கீழே குறைந்தாலும் நான்காம் கட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மாசு தொடர்பான கட்டுப்பாடுகளின் மிக உயர்ந்த நிலை ஏன் அறிவிக்கப்பட்டுள்ளது? அதன் கீழ் அனுமதிக்கப்பட்டவை மற்றும் தடைசெய்யப்பட்டவை என்னென்ன?
GRAP என்றால் என்ன?
தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (Graded Response Action Plan (GRAP)) என்பது தேசிய தலைநகர் பகுதியான டெல்லி பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்பை அடைந்தவுடன் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்கத் தொடங்கும் அவசரகால நடவடிக்கைகளின் தொகுப்பாகும். 2016-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2017-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், சுற்றுச்சூழல் மாசு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையம் (Environment Pollution (Prevention and Control) Authority (EPCA)) மாநில அரசு பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களுடன் நடத்திய பல கூட்டங்களுக்குப் பிறகு வகுக்கப்பட்டது.
இயற்கையில் காற்றின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால், காற்றின் தரம் 'மோசம்' முதல் 'மிகவும் மோசம்' (‘poor’ to ‘very poor’) வரை குறையும்போது, இரண்டு பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். AQI 'மோசம்' பிரிவில் (201 முதல் 300 வரை) இருக்கும்போது GRAP-ன் நிலை I செயல்படுத்தப்படுகிறது. நிலை II என்பது 'மிகவும் மோசம்' பிரிவில் (301-400), நிலை III என்பது AQI 'கடுமையான' வகையாக (401-450) இருக்கும்போது மற்றும் இறுதியாக நிலை IV என்பது 'கடுமையான +' வகைக்கு (450 க்கும் மேல்) உயரும் போது இந்த GRAP-இன் நிலைகள் பின்பற்றப்படுகிறது .
GRAP IV ஏன் இப்போது விதிக்கப்பட்டுள்ளது?
காற்றின் தர சூழ்நிலை மற்றும் வானிலை நிலைமைகளுக்கான முன்னறிவிப்புகளின் மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) ஞாயிற்றுக்கிழமை மாலை 441-ஆக இருந்தது மற்றும் இரவில் வரம்பு நிலையை மீறியது. கடுமையான மூடுபனி, மாறுபட்ட காற்று, மிகவும் சாதகமற்ற வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் காரணமாக இந்த கடுமையான பிரிவில் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GRAP IV-ன் கீழ் என்ன அனுமதிக்கப்படுகிறது?
1. டெல்லிக்குள் லாரி போக்குவரத்தை நிறுத்த வேண்டும் (அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் / அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகள் தவிர). இருப்பினும், அனைத்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied Natural Gas (LNG)) / அழுத்தப்பட்ட இயற்கை வாயு (Compressed Natural Gas (CNG)) / எலக்ட்ரிக் / பிஎஸ்-6 (BS- VI) டீசல் வண்டிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும்.
2. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்பவை / அத்தியாவசிய சேவைகளை வழங்குபவை தவிர, மின்சார வாகனங்கள் / CNG / பிஎஸ்-6 டீசல் தவிர டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட இலகுரக வர்த்தக வாகனங்களை (எல்சிவி) டெல்லிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம்.
காற்றின் தரம் மோசமடையும் போது பின்பற்ற வேண்டிய தெளிவான வழிமுறைகளை திட்டம் நிறுவியது.
3. டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 (BS- VI) மற்றும் அதற்கும் குறைவான டீசலில் இயங்கும் நடுத்தர சரக்கு வாகனங்கள் (Medium Goods Vehicles (MGVs)) மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் (Heavy Goods Vehicles (HGVs)) ஆகியவை அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்பவை / அத்தியாவசிய சேவைகளை வழங்குவது தவிர டெல்லியில் இயக்குவதற்கு கடுமையான தடையை அமல்படுத்த வேண்டும்.
4. நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பரிமாற்றம், குழாய்கள், தொலைத்தொடர்பு போன்ற பொதுத் திட்டங்களுக்கான கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
5. டெல்லியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்புகளுக்கு, நேரடி வகுப்புகளை நிறுத்தி அதற்கு பதிலாக இணைய வழியில் பாடங்களை நடத்துவது குறித்து டெல்லி அரசாங்கம் அது குறித்த ஒரு முடிவை எடுக்கலாம்.
6. பொது, நகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பலத்துடன் செயல்படவும், மீதமுள்ளவை வீட்டிலிருந்து வேலை செய்யவும் அனுமதிக்க டெல்லி அரசு முடிவு செய்யலாம்.
7. மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு தகுந்த முடிவுகளை எடுக்கலாம்.
8. கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களை மூடுவது மற்றும் அவசரமற்ற வணிக நடவடிக்கைகளை நிறுத்துவத, ஒற்றைப்படை பதிவு எண்களின் அடிப்படையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது போன்ற கூடுதல் அவசர நடவடிக்கைகளை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம்.
மேலும், குடிமக்கள் சாசனத்தை (citizen charter) கடைப்பிடிக்கவும், பிராந்தியத்தில் காற்றின் தரத்தை நிலைநிறுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நோக்கம் கொண்ட GRAP நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த உதவுமாறு குடிமக்களை வலியுறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் சுவாச பிரச்சனை, இருதய பிரச்சனை, பெருமூளை அல்லது பிற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.