முக்கிய எடுத்துக்காட்டுகள்:
. சனிக்கிழமையன்று நடந்த தணிப்பு வேலைத் திட்டத்தில் (Mitigation Work Programme (MWP)) வளர்ந்த நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் வரலாற்று ரீதியாக அதிக பங்களிப்பை அளித்துள்ளதாக இந்தியா, தெரிவித்தது. வளர்ந்த நாடுகள் தொடர்ந்து இலக்குகளை மாற்றிவிட்டன, காலநிலை நடவடிக்கையை தாமதப்படுத்துகின்றன. மேலும், உலகளாவிய கார்பன் நிதி நிலை அறிக்கையில் மிகப் பெரிய பகுதியைப் பயன்படுத்தியுள்ளனர் என்று இந்தியா சுட்டிக்காட்டியது.
. இந்தியாவின் துணை முன்னணி பேச்சுவார்த்தையாளர், நீலேஷ் சா, கடந்த வாரத்தில் வளரும் நாடுகளின் முக்கியமான பிரச்சினைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார். உலகின் சில பகுதிகள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார். இந்தப் பகுதிகள் மாற்றங்களுக்கு காரணமாக இல்லாவிட்டாலும், மீட்டெடுக்க அல்லது மாற்றியமைக்க மிகவும் குறைவான திறனைக் கொண்டுள்ளன என்று கூறினார்.
. தணிப்பு வேலைத் திட்டம் (Mitigation Work Programme) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் உள்ள COP27-ல் உருவாக்கப்பட்டது. MWP என்பது உமிழ்வைக் குறைப்பதற்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நாடுகளுக்கு உதவுவதாகவும், குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க எந்த நாட்டையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் வளரும் நாடுகள் தெரிவித்தன. இருப்பினும், அனைத்து நாடுகளிடமிருந்தும் உடனடி நடவடிக்கைக்கு MWP அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் விரும்புகின்றன.
. சரியான நிதி உதவி, தொழில்நுட்பம் மற்றும் திறன்-வளர்ப்பு இல்லாமல், வளரும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பொருளாதாரங்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் விளைவுகளை மாற்றியமைக்க முடியாது என்று சாஹ் வலியுறுத்தினார்.
. 2009-ல், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் காலநிலை நடவடிக்கைக்கு ஆதரவாக 2020ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் $100 பில்லியன் வழங்குவதாக உறுதியளித்தன. இந்த இலக்கு 2022-ல் எட்டப்பட்டது. வழங்கப்பட்ட பணத்தில் சுமார் 70% கடன்களாக வந்தது இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நிதிச்சுமையை அதிகரித்தது. ஐ.நா. காலநிலை செயல்முறைக்கு தனியார் துறை பொறுப்பேற்காததால், அரசு நிதியில் இருந்து நிதி உதவி வர வேண்டும் என்று வளரும் பொருளாதாரங்கள் தெரிவித்து வருகின்றன.
. பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினாவின் விலகல் COP29-ல் பேச்சுவார்த்தையாளர்களின் மன உறுதியை பெரிதும்பாதித்துள்ளது. இருப்பினும், சீனா, இங்கிலாந்து மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் முக்கியமான இடத்தில் உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா:
. பாகுவில் உள்ள நாடுகள் காலநிலை நிதி தொடர்பான புதிய ஒட்டுமொத்த அளவு இலக்கு (New Cumulative Quantitative Goal (NCQG)) என்ற ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை தேவை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதை எவ்வாறு திரட்டுவது என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
. வளரும் நாடுகள் இந்தப் பணத்தின் பெரும்பகுதி பொது நிதியிலிருந்து, மானியங்கள் அல்லது சலுகைக் கடன்கள் வடிவில் வழங்க வேண்டும் என்று விரும்புகின்றன. இந்தப் பணம் அவர்களின் தேவைக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகள் எவ்வளவு பங்களிக்கத் தயாராக உள்ளன அல்லது மொத்தத்தில் எந்தப் பகுதி பொது நிதியிலிருந்து வர வேண்டும் என்று தெளிவாக கூறவில்லை.