அரசியலமைப்பின் 105(3)வது பிரிவின்படி, ஒவ்வொரு சபை, அதன் உறுப்பினர்கள் மற்றும் அதன் குழுக்களின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் மற்றும் விதிவிலக்குகளை வரையறுப்பதற்கான எந்தவொரு சட்டமும் இதுவரை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படவில்லை. அத்தகைய சட்டம் இல்லாமல், 1978-ம் ஆண்டு அரசியலமைப்பின் நாற்பத்தி நான்காவது திருத்த சட்டத்தின் 15-வது பிரிவுக்கு முன்பு இருந்ததைப் போலவே, நாடாளுமன்றத்தின் அவைகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களின் அதிகாரங்கள், சிறப்புரிமைகள் மற்றும் விலக்குரிமைகள் ஆகியவை இருக்கும்.
நாடாளுமன்ற அவையின் அவமதிப்பு என்பது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதன் செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயலையும், புறக்கணிப்பு என வரையறுக்கப்படுகிறது. அத்தகைய அவையின் எந்தவொரு உறுப்பினரும் அல்லது அதிகாரியும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக அல்லது இடையூறாக இருக்கும் செயல்களும் இதில் அடங்கும்.
கூடுதலாக, இது குற்றத்திற்கு முன் உதாரணம் இல்லாவிட்டாலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அத்தகைய தடைக்கு வழிவகுக்கும் செயல்களைக் குறிக்கிறது. அனைத்து சிறப்புரிமை மீறல்களும் சபையின் அவமதிப்பாகக் கருதப்பட்டாலும், ஒரு நபர், அவையின் எந்தச் சலுகைகளையும் மீறாவிட்டாலும், அவமதிப்புக் குற்றவாளியாகவே இருக்கமுடியும் என வரையறுக்கப்படுகிறது.