கண்டத்தில் நைஜீரியாவின் நிலைப்பாட்டையும், ஆப்பிரிக்காவில் சீனாவின் செல்வாக்கு மத்தியில் இந்தியா தங்கள் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஆராய்வோம்.
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக பிரேசில் செல்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) அதிகாலை நைஜீரியா சென்றடைந்தார். நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபுவுடனான சந்திப்பில் தனது தொடக்க உரையில், "நைஜீரியாவுடனான எங்கள் இராஜதந்திர கூட்டாண்மைக்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
ஆப்பிரிக்க நாட்டிற்கு கடந்த 17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். நைஜீரியாவின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர் (the Grand Commander of the Order of Niger) தலைநகர் அபுஜாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு "இந்தியா-நைஜீரியா உறவுகளை வளர்ப்பதில் அவரது இராஜதந்திரம் மற்றும் உயர்தர நிலை பங்களிப்புக்காக" வழங்கப்பட்டது. இதன் மூலம் 1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
பிரதமர் தனது உரையில், இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று நட்பை குறிப்பிட்டார். இந்த அங்கீகாரம் உலகளாவிய தெற்கின் விருப்பத்தை அவர்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று கூறினார். பயங்கரவாதம், பிரிவினைவாதம், கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவை நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றிய முக்கிய சவால்கள் என்றும் அவர் அடையாளம் கண்டார்.
இந்தியா-நைஜீரியா உறவுகளின் வரலாறு, கண்டத்தில் நைஜீரியாவின் நிலைப்பாடு மற்றும் ஆப்பிரிக்காவில் சீனாவின் செல்வாக்கு மத்தியில் ஆழமான உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பார்க்கிறோம்.
இந்தியா-நைஜீரியா இடையேயான 60 ஆண்டுகால உறவு
இந்தியா மற்றும் நைஜீரியா, முறையே 1.4 பில்லியன் மற்றும் 220 மில்லியன் மக்கள்தொகை, பல மத, பல இன மற்றும் பல மொழி சமூகங்களைக் கொண்ட பெரிய, வளரும் மற்றும் ஜனநாயக நாடுகளாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அக்டோபர் 2007-ஆம் ஆண்டில் அபுஜாவுக்கு பயணம் செய்தபோது, நாடுகள் தங்கள் இருதரப்பு உறவின் நிலையை "இராஜதந்திர கூட்டாண்மை" நிலைக்கு உயர்த்தின.
ஆனால், இந்த உறவுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. 1958-ஆம் ஆண்டில் இந்தியா தனது தூதரகத்தை லாகோஸில் நிறுவியதிலிருந்தும் மற்றும் 1960-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து நைஜீரியா சுதந்திரம் அடைந்தலிருந்து உயர்மட்டத்தில் அரசியல் தொடர்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
1960-ஆம் ஆண்டு முதல் 80-ஆம் ஆண்டு வரை, சுதந்திர நைஜீரியாவின் ஆரம்ப ஆண்டுகளில் இந்திய ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். கடுனாவில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் போர்ட் ஹார்கோர்ட்டில் கடற்படை போர் கல்லூரி ஆகியவற்றையும் இந்தியா நிறுவியது. 60,000 வலுவான இந்திய புலம்பெயர்ந்த சமூகம், இன்று மேற்கு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது. இது நீண்டகால இருதரப்பு உறவுக்கு மதிப்பு சேர்க்கிறது.
"ஆப்பிரிக்காவில் நைஜீரியா ஒரு பெரிய மற்றும் நேர்மறையான பங்கைக் கொண்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்காவுடனான நெருங்கிய ஒத்துழைப்பு இந்தியாவுக்கு அதிக முன்னுரிமையாக உள்ளது" என்று பிரதமர் மோடி X-தளப் பதிவில் கூறினார்.
200-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் நைஜீரியாவின் உற்பத்தித் துறைகளில் சுமார் 27 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன மற்றும் மத்திய அரசுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய முதலாளிகளாக உள்ளன. சலுகைக் கடன்கள் (100 மில்லியன் டாலர்) மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டங்கள் மூலம் மேம்பாட்டு உதவிகளை வழங்குவதன் மூலம் இந்தியா இரண்டு முனைகளில் நட்பு நாடாக உருவெடுத்துள்ளது.
ஆப்பிரிக்காவில் நைஜீரியாவின் பங்கு
நைஜீரியா, ஆப்பிரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மூன்றாவது பெரிய உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. அதன் பொருளாதாரம் கண்டத்தில் நான்காவது பெரியது மற்றும் அதன் மக்கள் தொகை மிக அதிகம். அதனால் தான் இது "ஆப்பிரிக்காவின் ராட்சதன்" (“Giant of Africa”) என்று குறிப்பிடப்படுகிறது.
இது அனைத்து ஆப்பிரிக்க நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது. அதன் முன்னோடியான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு 1963-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் அதன் முக்கிய நிறுவனர்களில் ஒருவர் அப்போதைய நைஜீரிய அதிபர் நான்டி அசிகிவே ஆவார். கடந்த ஆண்டு இந்தியா நடத்திய உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி-20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆனது.
கூடுதலாக, நைஜீரியா ஐக்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Petroleum Exporting Countries (OPEC)) போன்ற சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
நைஜீரியாவுடன் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்த இந்தியாவின் திட்டங்கள், ஆபிரிக்காவில் அதன் கூடுதலான இராஜதந்திர நலன்களுடன் பொருந்துகின்றன. அங்கு சீனா ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க முத்திரையை பதித்துள்ளது. மின்சார வாகனங்கள் போன்ற துறைகளுக்கு இந்தியாவுக்குத் தேவைப்படும் கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை ஆப்பிரிக்கா கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆப்பிரிக்கா முக்கிய நாடாக உள்ளது.
இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளில், சீனா ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகத்தை பெரிதும் விரிவுபடுத்தியது. 2012-ஆம் ஆண்டில் சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 128 பில்லியன் டாலராக இருந்தது. அமெரிக்காவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே இது 100 பில்லியன் டாலராக இருந்தது.
சீனா அதன் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியின் (Belt and Road Initiative (BRI)) கீழ் சாலைகள், இரயில் பாதைகள், அணைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பெரிதும் நிதியளிக்கிறது. தற்போது, சீனா ஆபிரிக்காவின் மிகப் பெரிய வணிகத்தின் நட்பு நாடாக உள்ளது. இந்த வணிக செயல்பாடு ஆண்டு $200 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. கண்டம் எங்கிலும் 10,000 க்கும் அதிகமான சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சீன வணிகங்களின் மதிப்பு 2015-ஆம் ஆண்டு முதல் 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. தற்போதைய முதலீடுகளில் இது 300 பில்லியன் டாலர் உள்ளது.
இந்த முன்னேற்றங்கள் மற்றும் நைஜீரியாவின் வளர்ச்சி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, ஆப்பிரிக்காவில் இந்தியா தனது பொருளாதார மற்றும் கலாச்சார முதலீடுகளைத் தொடரும். நைஜீரியா இல்லாமல் இது சாத்தியமில்லை. பிரதமர் தனது பயணத்தின் முடிவில், "ஆப்பிரிக்காவில் பழமொழி சொல்வது போல: 'ஒரு நண்பர் நீங்கள் பாதையைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக இருக்கிறார்' (‘A friend is someone you share the path with’”) எனக் குறிப்பிட்டார்.