ஷேக் ஹசீனா விசயத்தில் நியாயமான விசாரணையாக இருக்க வேண்டும் என்பதை வங்காளதேசம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இந்த செயல்முறையை மேற்கொள்ள வங்காளதேச அரசு முகமைகளை இந்தியா அனுமதிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 2024-ம் ஆண்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, வங்காளதேசத்தின் வெளியேற்றப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் புது தில்லிக்குத் தப்பி ஓடிய சில மாதங்களுக்குப் பிறகு, வங்காளதேசம் அரசு அவரை திரும்ப ஒப்படைக்குமாறு முறைப்படி கோரியது. இதற்கு டிசம்பர் 23, 2024 அன்று, "நீதித்துறை செயல்முறையை" (judicial process) எதிர்கொள்ள அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் முறைப்படி கேட்டுக் கொண்டது.
அதே நாளில் டாக்கா இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்திற்கு வாய்மொழியாக ஒரு அறிக்கையை அனுப்பியது. இது, வங்காளதேசத்தின் தலைமை ஆலோசகரின் பத்திரிகை செயலாளர், "இந்தியாவுடனான எங்களின் உறவுகள் நியாயம் (fairness), சமத்துவம் (equality) மற்றும் கண்ணியத்தின் (dignity) அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார்.
ஆகஸ்ட் 5, 2024 அன்று டாக்காவிலிருந்து வெளியேறிய பின்னர் சரணடையாததால் ஷேக் ஹசீனா அவர்கள் தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கும் மற்றும் அவரது சில முன்னாள் நண்பர்களுக்கு எதிராக ஆகஸ்ட் 13, 2024 அன்று முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) தாக்கல் செய்யப்பட்டது.
ஏனெனில், போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை அழிக்க சதி செய்ததாகவும், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை தவறாக நடத்தியது மற்றும் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக உள்ள உறுதியான வழக்கை உருவாக்க வலுவான மற்றும் நம்பகமான ஆதாரங்களை சேகரிக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
அக்டோபர் 17 அன்று, டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Crimes Tribunal), முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் உட்பட திருமதி ஹசீனா மற்றும் 45 பேருக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்தது. நவம்பர் 18 அன்று, விசாரணையை முடிக்க டிசம்பர் 17, 2024 காலக்கெடுவாக நிர்ணயித்த தீர்ப்பாயம் விசாரணையாளர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்தது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமறைவாக இருந்த வழக்கு
பொதுவான சட்ட அதிகார வரம்புகளில், குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் விசாரணையைத் தொடங்க முடியாது. இந்த விசாரணையைத் தொடங்க, திருமதி ஹசீனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் நேரடியாகவோ அல்லது மெய்நிகர் தளங்கள் (virtual platform) மூலமாகவோ பங்கேற்க வேண்டும்.
இதற்கு மாற்றாக, சில இடங்களில், தங்கள் கட்சிக்காரர் சார்பாக ஒரு வழக்கறிஞர் ஆஜராகலாம். இது "ஆக்கபூர்வமான இருப்பு" (constructive presence) என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், பொதுவான சட்ட நாடுகளில் இது இன்னும் விவாதிக்கப்படும் பிரச்சினையாக உள்ளது. இருப்பினும், வங்காளதேச குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) 1898-ன் பிரிவு 339 B குற்றம் சாட்டப்பட்ட நபரை அவர்கள் இல்லாத நிலையில் விசாரிக்க முடியும் என்று கூறுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத ஒரு விசாரணையைப் பொறுத்தவரை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் (International Criminal Court (ICC)) ஒரு சமீபத்திய முன்னுதாரணத்தைக் கொண்டுள்ளது. அக்டோபர் 29, 2024 அன்று, அதன் விசாரணைக்கு முந்தைய அறை III சந்தேகத்திற்குரிய ஜோசப் கோனி முன்னிலையில் இல்லாமல் குற்றச்சாட்டு விசாரணையை உறுதிப்படுத்த முடிவு செய்தது. வடக்கு உகாண்டாவில் 36 போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கோனி, 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், வங்காளதேசம் விசாரணைக்கு பொருத்தமான இடமாகத் தோன்றுகிறது. ஏனெனில், அங்கு குற்றம் சாட்டப்பட்ட செயல்கள் ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் செயல்படுத்தப்படவேண்டும். இதற்காக, திருமதி ஹசீனாவை ஒரு இராஜதந்திர வழிமுறைகள் (diplomatic channels) மூலம் ஒப்படைக்குமாறு வங்காளதேசம் இந்தியாவைக் கேட்டுக் கொண்டாலும், இந்திய அரசாங்கம் இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், வலுக்கட்டாயமாக காணாமல் போதல் அல்லது சித்திரவதை போன்ற கடுமையான சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ளும் எந்தவொரு குற்றவாளியையும் "ஒப்படைக்க அல்லது வழக்குத் தொடர" வழக்கமான சர்வதேச சட்டத்தின் கீழ் அரசுக்கு ஒரு கடமை இருந்தாலும், ஹசீனாவை வங்காளதேசத்திடம் ஒப்படைக்க இந்தியா கடமைப்படவில்லை.
இந்தியாவின் சாத்தியமான பாதுகாப்பு
ஹசீனாவின் குற்றங்களில் இந்தியா எந்த வகையிலும் ஈடுபடவில்லை. இது போன்ற செயல்களை ஆதரிக்கவும் இல்லை, ஊக்குவிக்கவும் இல்லை.
2013-ம் ஆண்டில், இந்தியா வங்காளதேசத்துடன் இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1962-ம் ஆண்டின் இந்திய ஒப்படைப்புச் சட்டம் (Indian Extradition Act), இந்திய குடிமக்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, தனிநபர்களை நாடு கடத்துவதற்கான தெளிவான கட்டமைப்பை வழங்குகிறது. இந்த நிலையில், வங்கதேசம் நாடு கடத்தக் கோரும் நாடாகவும், இந்தியாவை ஒப்படைக்கக் கோரும் நாடாகவும் உள்ளது.
வங்காளதேசத்தின் ஒப்படைப்பு கோரிக்கையை நிராகரிக்க இந்தியா இரண்டு சட்டப் பாதுகாப்புகளைப் பயன்படுத்தலாம்.
1. ஹசீனா அரசியல் குற்றங்களைச் செய்துள்ளார் என்று இந்தியா வாதிடலாம். இருப்பினும், ஒப்படைப்பு கோரிக்கையை நிராகரிப்பதற்கான சரியான காரணம் அரசியல் குற்றங்கள் ஆகும். இருப்பினும், இந்த வாதம் வெற்றிபெற வாய்ப்பில்லை. முதல் பார்வையில், ஹசீனாவின் நடவடிக்கைகள் அரசியல் குற்றங்களாகத் தகுதி பெறுகின்றன என்ற கருத்துக்கு சிறிய ஆதரவு இல்லை.
2. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் (Amnesty International and Human Rights Watch) போன்ற அமைப்புகளின் அறிக்கைகள் அவரது அரசாங்கம் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. இதில் அரச ஆதரவு வன்முறை, சித்திரவதை, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல், துன்புறுத்தல் மற்றும் பிற கடுமையான செயல்கள் அடங்கும்.
அவர் இந்தக் குற்றங்களைச் செய்தாரா இல்லையா என்பதை நியாயமான விசாரணையின் மூலம் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
ஷேக் ஹசீனாவைச் சுற்றியுள்ள நாடு கடத்தல் சர்ச்சை முக்கியமான சட்டக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரண்டாவதாக, பொதுவானச் சட்டத்தின் கீழ், "விசாரணை அல்ல" என்று அழைக்கப்படும் ஒரு விதி உள்ளது. இதன் பொருள், பாரம்பரியமாக, ஒப்படைப்பு என்பது நிர்வாகத்தின் விருப்பமாகும். மேலும், சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தின் தலையீட்டை நாட முடியாது. இருப்பினும், இந்த நடைமுறைக்கு இப்போது அதிக ஆதரவு இல்லை. ஆயினும்கூட, ஹசீனா ஒரு இந்திய குடிமகனாக இல்லாவிட்டாலும், இந்திய அரசியலமைப்பின் 20 மற்றும் 21 வது பிரிவுகளால் பாதுகாக்கப்படுகிறார்.
தேசிய மனித உரிமை ஆணையம் vs அருணாச்சல பிரதேசம் மற்றும் பிறர் (National Human Rights Commission vs State of Arunachal Pradesh) 1996 வழக்கு, இந்திய உச்ச நீதிமன்றம் குடிமகன் அல்லாதவர் கூட பிரிவு 21 இன் பாதுகாப்பைப் பெற உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது. ஏனெனில், அது 'நபர்' (persons) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. தற்போதைய நிலைமை மற்றும் சித்திரவதை மற்றும் சிறை நிலைமைகள் குறித்த வங்காளதேசத்தின் கடந்தகால பதிவுகளின் அடிப்படையில், ஹசினாவைப் பாதுகாக்கவும், அவரை வங்காளதேசத்திற்கு ஒப்படைப்பதில் இருந்து இந்திய அரசாங்கத்தைத் தடுக்கவும் நீதிமன்றம் நியாயமான அடிப்படையைக் கொண்டிருக்கும்.
எவ்வாறாயினும், முன்னால் ஒரு சாத்தியமான வழி உள்ளது. ஹசீனா தங்கியிருக்கும் அதே நிலையில் இந்தியாவில் அவரை வீட்டிலேயே கைது செய்ய இந்திய அரசு அனுமதிக்கலாம் மற்றும் வங்காளதேச நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரான அவருக்கு விருப்பமான வழக்கறிஞருடன் காணொலி (video conferencing) மூலம் அவரது விசாரணையில் பங்கேற்பதை உறுதி செய்யலாம். இதற்குப் பிறகு, விசாரணை மற்றும் ஆதாரங்களை சேகரிப்பதில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா வங்காளதேசத்திற்கு உறுதியளிக்க முடியும்.
வங்காளதேச அதிகாரிகள் ஹசீனாவை முன் அறிவிப்பு தெரிவித்தபின் அணுக வேண்டும். ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருந்தால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் தண்டனையை அனுபவிக்க முடியும். இந்த நடவடிக்கை இந்தியாவின் சார்பாக உண்மையான நோக்கத்தைக் காட்டுகிறது மற்றும் ஐ.நா சாசனத்தின் பிரிவு 2(4) க்கு இணங்குவதை நிரூபிக்கிறது. அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் ஆபத்து மற்றும் கவலைகளைப் பாதுகாக்கிறது.
ஹசீனா இப்போது ஆட்சியில் இல்லை, மேலும் அவரது முதுமை மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக, அவரது நல்வாழ்வுக்காக எந்த பொருத்தமற்ற நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்படவில்லை. அவருக்கு மனித உரிமைகள் பெற உரிமை உண்டு. பகுத்தறிவு மற்றும் நீண்ட கால கண்ணோட்டத்தின் மூலம் இதை அடைய முடியும். இந்தியா-வங்காளதேச உறவுகளில் கருத்து வேறுபாடுகள் மற்றும் உணர்ச்சிகரமான வாதங்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஹசீனாவின் விசாரணையின் முக்கியத்துவத்தை வங்காளதேசம் புரிந்துகொண்டு அவர் பழிவாங்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இந்தியா தனது விசாரணையை திறம்பட நடத்த வங்காளதேசத்தின் அரசு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். இது நடந்தால், அது சர்வதேச சமூகத்திற்கு நியாயமான விசாரணைக்கு ஒரு கூட்டு அணுகுமுறையை நிரூபிக்கும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அதிகார வரம்பு, மாற்றுத் தீர்வு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சாசனத்தில் (Rome Statute) அங்கம் வகிக்கும் 111 ஆவது நாடாக வங்காளதேசம் உள்ளது. இது ரோம் சாசனத்தின் 5, 11 மற்றும் 12 பிரிவுகளின் அடிப்படையிலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகார வரம்புகளின் அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கும், அதாவது பொருள், தனிப்பட்ட, பிராந்திய மற்றும் தற்காலிக அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முன் ஒரு காரணமாக இருக்கலாம். இவை,
- குற்றம் என்பது "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" என்று கருதப்படுகிறது. இதன் பொருள் ஈர்ப்பின் தன்மையை சந்திக்கிறது.
- குற்றம் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு நாட்டின் தனிப்பட்ட குடிமகனால் செய்யப்பட்டது.
- குற்றம் வங்கதேசத்தில் (பிராந்தியத்தில்) உறுதி செய்யப்பட்டது.
- குற்றம் 2002-ம் ஆண்டுக்குப் பிறகு தற்காலிகமாக நடந்தது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) என்பது கடைசி முயற்சியின் நீதிமன்றமாகும். மேலும், இது தேசிய அதிகார வரம்பிற்கு மாற்றாக அல்ல. பிரிவு 17-ன் படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகார வரம்பு நிரப்பு கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. வங்காளதேசம் ஏற்கனவே உள்நாட்டில் விசாரணையை கையாண்டு வருவதால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) தலையிட எந்த காரணமும் இல்லை.
எவ்வாறாயினும், ரோம் சட்டத்தின் பிரிவு 53, பிரிவு 17 உடன் ஒப்பிடும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபரின் உரிமைகள் ஆபத்தில் இருந்தால், மற்றும் நடவடிக்கைகள் சுதந்திரமாக அல்லது பாரபட்சமற்றதாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரின் நலன்கள் பெரும் ஆபத்தில் இருப்பதாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். நபரை நீதிக்கு முன் கொண்டுவரும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் முரணாக இருந்தால் இது நிகழலாம். ஹசீனா, ரோம் சட்டத்தின் பிரிவு 21(3) உடன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights (ICCPR)) பிரிவு 14-ன் கீழ் தேவைப்படும் பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான நீதித்துறை அதிகாரத்தைப் பெற முடியாமல் போகலாம்.
அத்தகைய சூழ்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) வழக்குரைஞர் அலுவலகம் (Office of the Prosecutor (OTP)), பிரிவு 15-ன் கீழ், ஒரு பூர்வாங்கத் தேர்வைத் தொடங்கலாம். எனவே, முதல் பரிந்துரைக்கு மாற்றாக, ரோம் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் வங்கதேசம் இந்த விஷயத்தை ஐசிசிக்கு அனுப்பலாம். மாற்றாக, பிரிவு 15ன் கீழ் வழக்குரைஞர் அலுவலகம் (OTP) சொந்த முயற்சியில் (proprio motu) முதல்நிலை தேர்வைத் தொடங்கலாம். ஹசீனா வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்ற உத்திரவாதத்துடன் ஐசிசியிடம் சரணடையலாம்.
அக்லவ்யா ஆனந்த் டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் உதவி பேராசிரியராக உள்ளார். ஷைலேஷ் குமார் லண்டன் பல்கலைக்கழகத்தின் ராயல் ஹோலோவேயில் உள்ள சட்டம் மற்றும் குற்றவியல் துறையில் சட்ட விரிவுரையாளர் மற்றும் ஒரு காமன்வெல்த் அறிஞர் ஆவார்.