“ஒரு ஆண் உயர்கல்வியில் நுழைவது கல்வி வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், ஒரு பெண் கல்லூரிக்குச் செல்லும்போது அல்லது ஆராய்ச்சியைத் தொடரும்போது, அது ஒரு சமூகப் புரட்சிக்கு வழிவகுக்கும்” என்று என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், டிசம்பர் 30, 2024 திங்கள் அன்று “புதுமைப் பெண்” திட்டம் (‘Pudumai Penn scheme’) பற்றி பேசினார். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்ற கழகம் அளித்த வாக்குறுதிகளில் இது இல்லை என்று அவர் கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியது. பெண் குழந்தைகள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் காசோலைகளை வழங்கினார்.
மாணவிகளை "நாளைய சாதனையாளர்கள்" என்று குறிப்பிட்ட முதலமைச்சர், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாகவும், பல மாநிலங்கள் திராவிட மாதிரியைப் பின்பற்றுவதாகவும் கூறினார். வேலைவாய்ப்பு, உயர்கல்வி, ஆராய்ச்சி என எந்த துறையாக இருந்தாலும் தேசிய அளவில் தமிழ்நாட்டு பெண்கள் முதலிடத்தில் உள்ளனர் என்று கூறினார்.
“ஒரு சமூகப் புரட்சி”
பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை திமுக பின்பற்றுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். மகளிர் மேம்பாட்டிற்காக கட்சி அயராது பாடுபடும் என்று உறுதியளித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் கல்வி வரலாறு குறித்து பேசினார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அனைவருக்கும் கல்வி இயக்கத்தை நீதிக்கட்சி துவக்கியது என்றார். இது பலர் தங்கள் பெயர்களைப் படிக்கவும், எழுதவும், கையொப்பமிடவும் கற்றுக்கொள்ள உதவியது. பின்னர், கலைஞர் கருணாநிதியின் தலைமையில், அரசு (1969-75) மாநிலத்தில் 97 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் திறந்தது. மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கென தனித்துவமான பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இலவச பயணத் திட்டம்
தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை வழங்க அரசு முடிவு செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 567 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்த ஸ்டாலின், எதிர்க்கட்சியின் இடையூறுகளையும் மற்றும் ஒன்றிய அரசின் ஒத்துழையாமையையும் மீறி, இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று கூறினார்.
பெண்களுக்கான உயர்கல்வி, குழந்தை திருமணம் போன்ற சமூக அவலங்களை குறைக்க உதவுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இதன் மூலம் பெண்கள் தேவையான அதிகாரம் பெறுகிறார்கள். பாடசாலை முடிந்து படிப்பை நிறுத்திய பல பெண்கள் தற்போது உயர் கல்வியை தொடர்வதாக என்று முதலைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசின் “புதுமைப் பெண்” திட்டமே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்றும் கூறினார்.
“என்னுடைய பொறுப்பு”
"புதுமைப் பெண் திட்டம்” கருவூலத்திற்கு (exchequer) அதிக செலவை உருவாக்கி இருக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைக்கு கல்வியை கற்பிக்க ஆர்வமாக இருப்பது போல, உங்கள் அனைவருக்கும் கல்வியை வழங்குவது என்னுடைய பொறுப்பு" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.