ஒரே நாடு, ஒரே தேர்தல் (One Nation, One Election (ONOE)) என்றழைக்கப்படும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் பற்றிய விவாதம் மாற்றத்திற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் (Urban Local Governments (ULGs)) உள்ளூர் சுய-ஆளுகைக்கு முக்கியமானவை. நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் அத்தியாவசிய குடிமைச் சேவைகளை வழங்குவதோடு, குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களின் பங்கை வரையறுக்க 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் (Constitutional Amendment Act (CAA)) 1992-ல் நிறைவேற்றப்பட்டது.
எனினும் 30 வருடங்கள் கடந்தும் அதன் இலக்குகள் முழுமையாக எட்டப்படவில்லை. ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல்கள் பற்றிய தற்போதைய விவாதம், ஒரு நாடு ஒரு தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. உள்ளாட்சி ஜனநாயகத்தின் முக்கியப் பகுதியான நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான (ULGs) தேர்தல்களில் கவனம் செலுத்த ஒரு நல்ல வாய்ப்பாகும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவாதங்களில் இந்தத் தலைப்பு புறக்கணிக்கப்பட்டது.
"மாநிலப் பாடங்கள்” (‘State subjects’) பகுத்தறிவாக
2015ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் (Parliament Standing Committee) 79வது அறிக்கை, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் (Feasibility of Simultaneous Elections) குறித்து விவாதித்தது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆதரவு அளித்தது. இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களுக்கான (Urban Local Governments (ULGs)) தேர்தல்கள் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. 2017ஆம் ஆண்டில், NITI ஆயோக் "ஒரே நேரத்தில் தேர்தல்களின் பகுப்பாய்வு" என்ற விவாதக் கட்டுரையை வெளியிட்டது. இது நகர்ப்புற உள்ளூர் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களை (ULGs) விவாதத்திலிருந்து விலக்கியது. நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கள் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன என்றும், நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் பல உள்ளன.
இதன் காரணமாக ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது கடினம், ஒருவேளை சாத்தியமற்றது என்று விலக்கியது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான இந்திய சட்ட ஆணையத்தின் 2018 வரைவு அறிக்கையிலும் இதே காரணம் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு இந்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு (High-Level Committee (HLC)), வித்தியாசமான அணுகுமுறையை எடுத்தது. இது உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து விவாதித்து, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த 100 நாட்களுக்குள் அவற்றை நடத்த பரிந்துரைத்தது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 40% மக்கள்தொகையை நிர்வகிக்கும் 4,800 நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் (urban local governments (ULGs)) உள்ளன. இந்த எண்ணிக்கை 2050க்குள் 50%ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நகரங்கள் முக்கியமானவை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60%க்கும் அதிகமாக நகரங்கள் பங்களிக்கின்றன. நல்லாட்சி நகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானவை. அவை சமூக மற்றும் கலாச்சார நல்வாழ்வை மேம்படுத்துகின்றன.
எனவே, உள்ளாட்சி அரசாங்கங்களைத் தேர்வு செய்வதற்காக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை முறையான தேர்தல்களை நடத்துவது என்பது அரசியல் விவாதங்களிலும், கொள்கை வகுக்கும் விவாதங்களில் முக்கிய கருத்தாக இருக்க வேண்டும். 2024 செப்டம்பரில் ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர்நிலைக் குழு (HLC) அறிக்கை, உள்ளாட்சிகளுக்கான தேர்தல் செயல்முறை குறித்து விவாதித்தது. இது ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாகும். எவ்வாறாயினும், நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க தேர்தல்களின் தற்போதைய நிலைமையைப் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் விரிவான பகுப்பாய்வு இன்னும் தேவைப்படுகிறது.
நிச்சயமற்றத் தன்மை மற்றும் தேர்தல்களில் தாமதம்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான நகர்ப்புற உள்ளாட்சிகளில் (ULGs) தேர்தல்கள் பல ஆண்டுகளாக தாமதமாகி வருவது பலரை ஆச்சரியப்படுத்தலாம். நவம்பர் 2024-ல் வெளியிடப்பட்ட இந்தியாவின் கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் இந்தியா தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் உள்ள 60% நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தல்கள் தாமதமாகின்றன.
இது நிகழும்போது, இந்த நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் மாநில அரசாங்கங்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது அரசியலமைப்பில் உள்ள பரவலாக்கல் கொள்கைக்கு எதிரானது. குடிமக்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லாததாலும், அவர்களின் கவலைகள் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துவதற்கு குறைவான வழிகள் இருப்பதாலும் இது பொறுப்புடமையை பாதிக்கிறது. சரியான நேரத்தில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது. இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள ஒவ்வொரு நகராட்சிக்கும் பொருந்தும்.
நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு (ULGs) தேர்தல் நடத்துவது போதாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகள் அமைக்கப்பட வேண்டும். மேயர்கள், தலைவர்கள் மற்றும் நிலைக்குழுக்களை தேர்வு செய்ய மாநில அரசுகள் முதல் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஜனஅக்ரஹா நடத்திய ஆய்வில், கர்நாடகாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சராசரியாக, சபைகள் அமைப்பதில் 11 மாதங்கள் தாமதம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் மாநில அரசாங்கங்களால் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுகின்றன. இது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை உறுப்பினர்களால் அவர்களின் சமூகங்களின் வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் செய்கிறது.
அதிகாரம் பறிபோன மாநில தேர்தல் ஆணையங்கள்
இந்தியாவின் பெரிய நகரங்களில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல்கள் தாமதமானது குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். மற்றொரு பிரச்சனை மாநில தேர்தல் ஆணையங்களின் (State Election Commissions) அதிகார குறைப்பாகும். இவை நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க தேர்தல்களை மேற்பார்வையிடும் பொறுப்பு அரசியலமைப்பு அமைப்புகளாகும். தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) அறிக்கையின்படி, 15 மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் மட்டுமே வார்டு எல்லை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை தங்கள் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு வழங்கியுள்ளன.
மாநில அரசுகளால் வார்டு வரையறை தாமதம் அல்லது இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற வழக்குகள் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களுக்கான தேர்தல்கள் தாமதாவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. வார்டு எல்லை நிர்ணயம் மற்றும் இடஒதுக்கீடு நடவடிக்கைகளின் அதிக அரசியல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, இந்த பணிகளை சுதந்திரமான அரசு அதிகாரிகள் கையாள வேண்டும். மாநிலத் தேர்தல் ஆணையங்கள் இந்த செயல்பாடுகளை நிறைவேற்ற சரியான அமைப்புகளாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்துவதில் உள்ள சவால்கள் பற்றிய முழுமையான பகுப்பாய்வு, தேர்தல்களை ஒத்திசைப்பது தொடர்பான தேசிய விவாதங்களில் முக்கியமானது. நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க தேர்தல்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு உயர்மட்டக் குழு (HLC) மேற்கொண்டுள்ள முன்னேற்றத்தை வேகப்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
செயல்படுத்தும் குழுவை உருவாக்க இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்தக் குழு உயர்மட்டக் குழுவின் (HLC) பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான திட்டத்தைத் தயாரிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விவாதங்கள் முறையான மற்றும் சரியான நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க தேர்தல்களை உறுதி செய்வதற்கான சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தும் என்று நம்பப்படுகிறது. நமது நகரங்களில் உள்ளூர் ஜனநாயகத்தை மிகவும் சுறுசுறுப்பாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
சந்தோஷ் நர்குண்ட், குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்கிரகா மையத்தின் பங்கேற்பு ஆளுகைப் பிரிவின் தலைவராக உள்ளார். மான்சி வர்மா, குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்கிரகா மையத்தில் கொள்கை ஈடுபாட்டின் மேலாளர்.