காப்பீடு போதுமானதாக இல்லை : உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் - கே. சுஜாதா ராவ்

 சேவைகளின் போதுமான வழங்கல் அல்லது தரமற்ற வழங்கல் இருந்தால் முன்பணச் சீட்டுகளால் என்ன பயன்? சுகாதாரத்தில் முதலீடு செய்வது, நல்லாட்சியை வழங்குவது மற்றும் சட்டங்கள், ஒழுங்குமுறைகள், விதிகள் மற்றும் ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கான திறனை உருவாக்குவது போன்ற கடினமான பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.


உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) என்பது இந்தியாவுக்கு தேவையான இலக்கா? உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஒவ்வொரு நபரும் நல்ல ஆரோக்கியத்துடனும் கண்ணியத்துடனும் வாழத் தகுதியானவர் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு மாறாக, நமது அறிவுசார் மரபுகள் இருந்தபோதிலும், சமத்துவக் கருத்துக்கள் இந்தியாவில் அரசியல் ஆதரவைப் பெறவில்லை. நமது சமூகமும் அரசியலும் இன்னும் பிளவுபட்டு சமத்துவமற்றதாகவே உள்ளன. இந்த அடிப்படைக் கொள்கைகளில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றால், நமது அரசியலுக்கு என்ன மதிப்புகள் வழிகாட்ட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இது முக்கியமானது. ஏனென்றால் உடல்நலம், அரசியல், பல போட்டி நலன்களுடன் உள்ளது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு, சமத்துவம் மற்றும் நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல் அமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது. 


உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (Universal Health Coverage (UHC))  என்ற இலக்கை அடைய, கொள்கை நடவடிக்கைகளின் தொகுப்பு ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்.


முதலாவதாக, சமூக அடிப்படையிலான ஆரம்ப சுகாதாரத்திற்கான ஆதார இடைவெளியை மூட சுகாதார நிதியை இரட்டிப்பாக்க வேண்டும்.


இரண்டாவதாக, ஊட்டச்சத்து, பாதுகாப்பான நீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், வருமானம் மற்றும் கல்வி போன்ற சமூக சுகாதார காரணிகளுக்கு உலகளாவிய அணுகல் இருக்க வேண்டும்.


மூன்றாவதாக, அனைத்து பராமரிப்பு நிலைகளிலும் உள்ள மனித வளங்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், திறமையானவர்களாகவும், அவர்களின் வேலைகளைச் திறம்படச் செய்ய நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம்.


நான்காவதாக, சுகாதார வழங்குநர்கள் அவர்கள் சேவை செய்யும் மக்களுக்கு பதில் கூறும் வகையில் ஊக்கக் கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும்.


ஐந்தாவதாக, தனியார் துறையின் நிர்வாகமும் மேற்பார்வையும் மேம்படுத்தப்பட வேண்டும்.


  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுகாதார அமைப்பின் அடித்தளங்களை வலுப்படுத்துவது என்பது சுகாதார மையங்களை உருவாக்குவது மட்டுமல்ல. இது தேவைக்கேற்ப கவனிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் அமைப்புகளை உருவாக்குவதாகும். சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் செயல்படுத்தக்கூடிய செயலில் உள்ள நிலையைக் கொண்டிருப்பதும் இதில் அடங்கும். இது சுகாதாரத் துறையின் சந்தையில் உள்ள குறைபாடுகளிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்க உதவுகிறது.

 

வரையறுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை, இந்தியா ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டது என்று கூறியுள்ளது. பல தொற்று நோய்கள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும்  தாய் மற்றும் சிசு இறப்பு விகிதங்களும் கணிசமாகக் குறைந்துள்ளன. தொற்று நோய்கள், குறிப்பாக வட மாநிலங்களில் குறைந்துள்ளதால், தற்போது 60% இறப்புகள் தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றன. இதற்கு, முக்கிய காரணங்கள் இதய நோய்கள், புற்றுநோய்கள், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) மற்றும் நீரிழிவு. இந்த நோய்களுக்கு சிகிச்சையளிப்பது விலை உயர்ந்தது மற்றும் நீண்ட கால பராமரிப்பு தேவைப்படுகிறது. அவை அமர்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறை, விரைவான நகரமயமாக்கல், உணவில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் விளைவாகும். இந்த மாற்றங்களில் அதிக நொறுக்குத் தீனிகளை உட்கொள்வது, மது அருந்துவது, புகையிலை மற்றும் பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். கூடுதலாக, வயதான மக்கள் இந்த சுகாதார பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகுகின்றனர்.


சுகாதார அமைப்புக்கு ஒரு தன்னிலையான (substantive) மாற்றம் தேவை: இது குறிப்பிட்டகால (episodic) கவனிப்பிலிருந்து நீண்ட கால பராமரிப்புக்கு மாற வேண்டும். இந்த மாற்றத்திற்கு பின்னடைவு, புதிய திறன்கள் மற்றும் தொடர்ச்சியான கவனிப்பை உறுதி செய்வதற்கான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு தேவைப்படும். இந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கான காரணங்கள் மாறக்கூடியவை. எனவே சட்டங்கள், விதிமுறைகள், பொது சுகாதாரக் கொள்கைகள் மற்றும் குடும்ப மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களால் நடத்தப்படும் சமூக அடிப்படையிலான சுகாதார அமைப்பு ஆகியவை அவசியம். ஆரம்ப சுகாதாரத்தில் முதலீடு செய்வது மூன்றில் ஒரு பங்கு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைக் குறைக்கும் என்று மற்ற நாடுகள் காட்டுகின்றன. மருத்துவமனைகள் விலை உயர்ந்தவை என்பதால், இந்த முதலீடு உண்மையான சேமிப்பிற்கு வழிவகுக்கும்.


இந்தியாவின், ஆயுஷ்மான் பாரத் திட்டமானது (Ayushman Bharat programme)  இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: முதலாவதாக, மருந்து கிடைப்பதை மேம்படுத்தி, இலவசமாக வழங்கப்படும் 12 சேவைகளுக்கான பணியாளர்களை மேம்படுத்துவதன் மூலம் முதன்மை பராமரிப்பு வசதிகளை பலப்படுத்துகிறது. இரண்டாவதாக, 50 கோடி ஏழைகளுக்கு 5 லட்சம்  காப்பிட்டு தொகை வழங்குகிறது. இது ஒரு நேர்மறையான படியாகும். இருப்பினும், சுகாதார அமைப்பு மிகவும் விலை உயர்ந்தது, மிகவும் தனியார்மயமாக்கப்பட்டது மற்றும் வலுவான அடித்தளம் இல்லை என்று பலர் இன்னும் நம்புகிறார்கள். முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், இந்த கருத்து தொடர்கிறது. இதற்கான சில காரணங்கள் உள்ளன.

 

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 1 முதல் 1.2 சதவீதம் வரை பொது சுகாதாரத்திற்காக செலவிட்டுள்ளது. அதிகபட்சமாக, இது 1.3 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்பு (WHO) 3 சதவீதத்தை பரிந்துரைக்கிறது. இந்த குறைந்த செலவினத்தால், பொது சுகாதார சேவைகள் சரியாக செயல்படவில்லை. மருத்துவமனைப் பராமரிப்புக்காக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தாலும், மக்கள் இன்னும் மொத்த சுகாதாரச் செலவில் 45-54 சதவீதத்தை வரவுக்கு மீறிய செலவு (out-of-pocket) செய்கிறார்கள்.  இது நிலையான வளர்ச்சி இலக்கான (Sustainable Development Goals (SDG)) 20 சதவீதத்தை விட அதிகமாகும்.


இரண்டாவதாக, சுகாதாரப் பணியாளர்களில் மோசமான திட்டமிடல் உள்ளது. மோசமாக வடிவமைக்கப்பட்ட ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களின் பற்றாக்குறை இதற்கு முக்கிய காரணமாகும். பல பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. உதாரணமாக, 1 லட்சம் பேருக்கு சேவை செய்யும் சமூக சுகாதார மையங்களில் (Community Health Centers (CHC)) 80 சதவீத சிறப்புப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மக்களை தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வழிவகுக்கிறது. இது விலை உயர்ந்தது, அல்லது அதிக எண்ணிக்கையிலான மாவட்ட மருத்துவமனைகளை அவர்கள் நாடுகிறார்கள். சமூக சுகாதார மையங்களில் நிபுணர்களை பணியமர்த்துவதற்கான தற்போதைய நடைமுறை பயனுள்ளதாக இல்லை என்றாலும், மாதிரி செயல்படக்கூடியதாகத் தெரியவில்லை?


மூன்றாவதாக, இந்தியாவின் சுகாதார விநியோக அமைப்பு (India’s health delivery system) பொது மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கியது. தனியார் துறை மட்டும் பிரச்சினை அல்ல. பெருநிறுவனமயமாக்கல் (corporatisation), வணிகமயமாக்கல் மற்றும் லாபம் ஈட்டுதல் ஆகியவற்றை நோக்கி வளர்ந்து வரும் போக்கு கவலைக்குரியது. இதன் விளைவாக அதிகப்படியான நோயறிதல் மற்றும் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் ஏற்படுகின்றன. மூன்றாம் நிலை மருத்துவமனைகளை நிறுவுவதற்குத் தேவையான பெரும் மூலதன முதலீட்டில் குறைந்தபட்சம் 25 சதவீத வருவாயைக் கோரும் பங்கு மற்றும் துணிகர மூலதனத்திலிருந்து பெருகிய முறையில் திரட்டப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி மூன்றாம் நிலை கவனிப்பை வழங்கும் பல தனியார் மருத்துவமனைகள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பிளாக்ராக் (Black Rock) இப்போது மணிப்பால் குழுமத்தின் பெரும்பான்மை கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனால், மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.

 

நடுத்தர வர்க்கத்தினர் இலவச அல்லது மானியத்துடன் கூடிய சிகிச்சையை பெறுவதை அரசாங்கம் கடினமாக்குகிறது. இது சுமார் 30 மாவட்ட மருத்துவமனைகளை முதலீட்டாளர்கள் அல்லது நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுகிறது அல்லது விற்பனை செய்கிறது. இந்த ஒப்பந்தங்கள் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக உறுதியளிக்கின்றன. ஆனால், அரசாங்கத்தால் இந்த நிபந்தனைகளை செயல்படுத்த முடியாது.


அரசு தனது ஆட்சிப் பொறுப்பைத் தவிர்த்து வருவதையும் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததையும் நிலைமை காட்டுகிறது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) சுகாதாரக் காப்பீடு வழங்குவது என்று மட்டும் புரிந்துகொள்வது தவறானது. சேவைகள் கிடைக்காவிட்டால் அல்லது தரம் குறைந்தால் செலவுச் சீட்டால் என்ன பயன்? அரசு சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும், நல்ல நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒப்பந்தங்களைச் செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். மாநில அரசு முறையாக ஆட்சி செய்து அதன் அரசியலை மக்கள் நலனுடன் இணைத்தால் மட்டுமே இந்தியாவில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் வெற்றி பெற முடியும். மக்களின் எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும்போதும், அரசியல் அமைப்பு பொறுப்பேற்காத போதும் எப்படி மாற்றத்தை கொண்டு வருவது என்பது ஜனநாயகயத்திற்கு சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சினை முக்கிய கவலையாக உள்ளது.


கட்டுரையாளர் இந்திய அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர்




Original article:

Share: