சத்ரபதி சிவாஜி - மானஸ் ஸ்ரீவஸ்தவா

 

  • தனது எதிரிகளின் மனதில் பயத்தை விதைத்த ஒரு தலைசிறந்த இராஜதந்திரவாதி, சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசு மற்றும் மராட்டிய கடற்படையை நிறுவிய ஒரு தொலைநோக்குத் தலைவர்.  ஐரோப்பிய சக்திகள் கடல்களைக் கட்டுப்படுத்திய நேரத்தில், சிவாஜி ஒரு தற்சார்பு கடற்படைக்கான பாதையை வகுத்தார். 'இந்திய கடற்படையின் தந்தை' (‘Father of the Indian Navy’) என்ற பட்டத்தைப் பெற்றார்.  டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினத்தை (Navy Day) முன்னிட்டு, சிவாஜி ஏன் இந்திய கடற்படையின் முன்னோடியாக கௌரவிக்கப்படுகிறார்? 


  • இந்த கொந்தளிப்பான அரசியல் நிலப்பரப்புக்கு மத்தியில், சிவாஜி தோர்னா கோட்டையை (இன்றைய புனே மாவட்டத்தில்) கைப்பற்றியதன் மூலம் தனது இராச்சியம் அல்லது 'சுயராஜ்யத்தின்' அடித்தளத்தை அமைத்தார்.  சிவாஜியின் வளர்ந்து வரும் செல்வாக்கை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட அடில்ஷாஹி சுல்தானகத்தின் சக்திவாய்ந்த தளபதியான அப்சல் கானை தோற்கடித்ததில் அவர் அதிகாரத்திற்கு உயர்வதில் ஒரு முக்கியமான தருணம் வந்தது. 


  • சிவாஜி கொங்கன் மற்றும் கோலாப்பூர் பிராந்தியங்களின் பெரும்பகுதியை சுயராஜ்யத்தில் இணைத்து, கல்யாண் மற்றும் பிவாண்டி போன்ற முக்கியமான வடக்கு துறைமுகங்களின் கட்டுப்பாட்டைப் பெற்று, வர்த்தகம் மற்றும் கடல் விவகாரங்களில் தனது செல்வாக்கை வலுப்படுத்தினார்.  


  • 1657 மற்றும் 1658-ஆம் ஆண்டுக்கு இடையில், சிவாஜி தனது ஆதிக்கத்தை கொங்கன் கடற்கரையின் 100 கி.மீ நீளத்தில், சாவித்திரி ஆற்றிலிருந்து வடக்கு கோட்டைகளான கோஹோஜ் மற்றும் அஷெரிகாட் வரை விரிவுபடுத்தினார். சுர்கட், பிர்வாடி, தலா, கோசலே, சுதகாட், கங்கோரி மற்றும் ராய்காட் (அப்போது ரைரி என்று அழைக்கப்பட்டது) உள்ளிட்ட பல முக்கிய கோட்டைகளையும் அவர் கைப்பற்றினார். தனது இராச்சியத்தை விரிவுபடுத்தி, சித்தி (Siddi) பிரதேசங்களுக்கு நேரடியாக சவால் விடுத்தார். 


  • ராமச்சந்திரபந்த் அமாத்யா எழுதிய அத்னியாபத்ரா, மராட்டியப் பேரரசில், குறிப்பாக சத்ரபதி சிவாஜியின் பேரன் இரண்டாம் சம்பாஜிக்கு மாநில விவகாரங்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டியாக செயல்பட்டது. இந்த ஆவணமானது ஆட்சி அதிகாரம், நிர்வாகம் மற்றும் கடற்படைக் கொள்கைகளை உள்ளடக்கியது. இது பேரரசை வலுப்படுத்துவதற்கான  உத்திகளை பிரதிபலிக்கிறது. 


  •  மராட்டிய கடற்படை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. வணிகக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள். வணிகக் கப்பல்களில் மக்வாஸ், ஷிபாத்ஸ், படவ்ஸ், தரான்டேஸ் மற்றும் பகர்கள் போன்றவை அடங்கும். அதே நேரத்தில் போர்க்கப்பல்களில் குராப்கள், கல்பத்கள், மகாகிரிகள், ஷிபாத்கள், தரண்டேஸ், தரஸ்கள் மற்றும் பகருக்கள் போன்றவை அடங்கும்.  சரியான கடற்படை எண்கள் தெளிவாக இல்லை என்றாலும், 1665-ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலேயப் பதிவுகள் சிவாஜியின் கடற்படையில் 85 கப்பல்களும், 5,000 மாலுமிகளும், மூன்று பெரிய கப்பல்களும் (Ghurab) இருந்ததாக மதிப்பிடுகின்றன. 1673-ஆம் ஆண்டில் அவை, 33  கடற்படை கப்பல்களாக வளர்ந்தது.




Original article:

Share: