116 ஆண்டுகளுக்கு முன்பு, பாரதி குறித்து செய்தி வெளியிட்ட கல்கத்தா நாளிதழ் ஒன்று வ.உ.சிதம்பரனாரின் புகைப்படத்தை வெளியிட்டது -பி.கோலப்பன்

 சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ் அறிஞருமான வ.உ.சிதம்பரம் (VOC) ஆங்கிலேய கடல்சார் பேரரசுகளை துணிச்சலுடன் எதிர்த்தார். அதன்  விளைவுகளையும் எதிர்கொண்டார். இன்று, அவர் மற்ற இடங்களைவிட தமிழ்நாட்டில் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார். சுதேசி நீராவி வழிசெலுத்தல் நிறுவனத்தை (Swadeshi Steam Navigation Company (SSNC)) அவர் தொடங்கியபோது வ.உ.சிதம்பரம் நாடு முழுவதும் பிரபலமானார். 1908ஆம் ஆண்டில், கல்கத்தாவிலிருந்து (இப்போது கொல்கத்தா) வந்த வந்தே மாதரம் என்ற செய்தித்தாள், அவரது புகைப்படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டது. இந்த செய்தித்தாளை சிறந்த தலைவர்கள் பிபின் சந்திர பால் மற்றும் ஸ்ரீ அரவிந்தோ ஆகியோர் நடத்தினர். அதே ஆண்டு, சிதம்பரனார் கைது செய்யப்பட்ட பிறகு திருநெல்வேலி மக்கள் ஆங்களிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

 

தீன் மூர்த்தி பவனில் கண்டுபிடிக்கப்பட்டது 


"வ.உ.சிதம்பரனரின் புகைப்படம் ஏப்ரல் 26, 1908 அன்று வெளியிடப்பட்டது. அவரது கைதுக்கும் தண்டனைக்கும் இடைப்பட்ட காலத்தில் இது நடந்தது. அவர் மார்ச் 1908ல் கைது செய்யப்பட்டு ஜூலை 1908-ல் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார்”. சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித் துறைத் தலைவரான ஒய். மணிகண்டன், டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் செய்தித்தாளின் நகலைக் கண்டுபிடித்தார்.


"எங்கள் படத்தொகுப்பு (Our Picture Gallery)" என்ற பிரிவில் வ.உ.சிதம்பரனரின் படம் வெளியிடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட இதழ்களை மதிப்பாய்வு செய்ததாகவும், ஆனால் வேறு எந்த தமிழகத் தலைவரும் இடம்பெறவில்லை என்றும் Y. மணிகண்டன் குறிப்பிட்டார். இருப்பினும், ஒரு இதழில் அரவிந்தரின் படம் இடம்பெற்றிருந்தது. முதல் பக்கத்தில் உள்ள வ.உ.சிதம்பரனரின் படம் அந்தக் காலத்தில் சுதந்திர இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கூறுகிறார். வ.உ.சிதம்பரனார் பற்றி விரிவாக எழுதிய வரலாற்றாசிரியர் A.R.வெங்கடாசலபதி, முன்னதாகவே ஒரு குறிப்பிடத்தக்க படத்தைக் கண்டுபிடித்திருந்தார். 


1909ஆம் ஆண்டில், நாசிக்கைச் சேர்ந்த ஸ்ரீதர் வாமன் நகர்கர், பாரத மாதாவை மகிஷாசுர மர்தினியாகக் காட்டும் உருவப்படத்தை வெளியிட்டார். அந்த உருவப்படத்தைச் சுற்றி 24 தேசியத் தலைவர்கள் இருந்தனர். அதில் வ.உ.சிதம்பரனார் மட்டுமே தென்னிந்தியத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வந்தே மாதரம் தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்திற்கும் வ.உ.சிதம்பரனார்  போன்ற தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்தது.


தேசியவாதக் கவிஞர் சுப்பிரமணிய பாரதி, பால பாரத (Bala Bharata) என்ற ஆங்கில மாத இதழையும், இந்தியா என்ற தமிழ் வார இதழையும் வெளியிட்டதாக மணிகண்டன் சுட்டிக்காட்டுகிறார். வந்தே மாதரம் பத்திகள் மூலம் உலகம் இதைப் பற்றி அறிந்து கொண்டது. தென்னாப்பிரிக்காவில் இந்தியன் கருத்து (Indian Opinion) என்ற வார இதழை வெளியிட்ட மகாத்மா காந்தி, புதுச்சேரியிலிருந்து வெளியிடப்பட்ட பால பாரதத்தை அடிக்கடி குறிப்பிட்டார். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் தேசிய கவனத்தைப் பெற்றன. 


1906ஆம் ஆண்டில், ஆங்களிலேய கடல்சார் வர்த்தகத்தை எதிர்த்த வ.உ.சிதம்பரனார் சுதேசி நீராவி வழிசெலுத்தல் நிறுவனத்தைத் தொடங்கியது. மார்ச் 1908ல், வ.உ.சிதம்பரனார் மற்றும் சுப்பிரமணிய சிவா திருநெல்வேலியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினர். அவர்கள் பிபின் சந்திர பாலை பாராட்டினர் மற்றும் வெளிநாட்டு பொருட்களைப் புறக்கணிக்க மக்களை வலியுறுத்தினர். திருநெல்வேலி மக்கள் வ.உ.சிதம்பரனார் கைது செய்யப்பட்ட பிறகு ஆங்களிலேய ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தக் கிளர்ச்சியே ஏ.ஆர். வெங்கடாசலபதியின் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 என்ற புத்தகத்தின் முக்கிய கருத்தாகும். இதன் பின்னர் சாகித்ய அகாடமி விருதை பெற்றார்.


1908ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது. ஜனவரி 25 ஆம் தேதி, ஒரு முக்கிய கூட்டம் நடைபெற்றது. இது மிதவாதிகள் மற்றும் புதிய கட்சியின் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கிய பங்கேற்பாளர்களில் பால கங்காதர திலகரை பின்பற்றுபவரான சுப்பிரமணிய பாரதி மற்றும் பிபின் சந்திர பால் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைப் பிரதிபலித்தது. தேசியவாத செய்தித்தாள் வந்தே மாதரம் இந்த நிகழ்வை "மெட்ராஸில் தேசியவாதத்தின் வெற்றி" (The Triumph of Nationalism in Madras) என்று விவரித்தது.


 இந்தக் கூட்டம் முதல் பக்க செய்தியில் இடம்பிடித்தது. சுப்பிரமணிய ஐயர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். சக்கரை செட்டியார் முன்மொழிந்த திருத்தத்தை பாரதியார் ஆதரித்தார். கூட்டத்தின் தீர்மானம், அனைத்து இந்தியர்களும் காலனித்துவவாதிகளையும் அவர்களின் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த நிகழ்வை அறிவிக்கும் செய்தித்தாளின் நகலைக் கண்டெடுத்த மணிகண்டன், அதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார். சுப்பிரமணிய பாரதியின் அரசியல் வாழ்க்கையில் இந்த சந்திப்பு ஒரு முக்கிய தருணம். சென்னை மேயராக இருந்த பாரதியின் நண்பர் சக்கரை செட்டியார், சுதேச கீதங்கள் (தொகுதி-2)-ன் முன்னுரையில் இதைக் குறிப்பிட்டார். இந்தப் புத்தகம் பாரதியின் மனைவி செல்லம்மாளால் வெளியிடப்பட்டது.


முன்னுரையில், சக்கரை செட்டியார் பாரதி மற்றும் பலர் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்த இரண்டு நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். இந்த நடவடிக்கைகள் பகுத்தறிவு மிதவாதிகளால் "முரட்டுத்தனமான நடத்தை" என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், அவற்றை இளமை உற்சாகம் மற்றும் லட்சியத்திற்கான ஆர்வத்தின் எடுத்துக்காட்டுகள் என்று சக்கரை செட்டியார் எழுதினார். 


தேசியவாதிகள் மத்தியில் மிகுந்த உற்சாகம் நிலவியதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வளவு பெரிய தேசியவாத பெரும்பான்மையை இதற்கு முன்பு சென்னையில் பார்த்ததில்லை என்று அது குறிப்பிட்டது. கூட்டம் "திலக் மகாராஜ் கீ ஜெய்" மற்றும் "பாபு பிபின் பால் கீ ஜெய்" போன்ற கோஷங்களை எழுப்பி, ஆரவாரத்துடன் கூட்டத்தை முடித்தது.


“பிரமாண்டமான கூட்டம்” 


மார்ச் 17, 1907 அன்று, வந்தே  மாதர இதழ் "மெட்ராஸில் ஒரு பிரமாண்டமான சுதேசி கூட்டம்: புதிய உணர்வின் வெற்றி" (Grand Swadeshi Meeting at Madras: Triumph of the New Spirit) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரை மெரினா கடற்கரையில் 5,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக குறிப்பிட்டது. கூட்டத்திற்கு தி இந்துவின் நிறுவனர்களில் ஒருவரான ஜி. சுப்பிரமணிய ஐயர் தலைமை தாங்கினார். சுதேசி இயக்கம் குறித்து சிதம்பரனார் ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். 


அவர் சுதேசியை விஷ்ணுவின் நவீன அவதரம் என்று வர்ணித்தார். இந்த அவதாரம் நாட்டை தேசிய சுதந்திரத்தின் மகிமைக்கு எழுப்ப வந்தது என்று அவர் விளக்கினார். அவரது உரையில் "வந்தே மாதரம்" என்ற உரத்த ஆரவாரம் எழுப்பப்பட்டது. வந்தே மாதரம் செய்தித்தாள் மூலம் அடிக்கடி சுதேசி இயக்கம் மற்றும் வ.உ.சிதம்பரனரின் உரைகளை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டார். மார்ச் 19, 1907 அன்று, கடலூரில் நடந்த ஒரு பெரிய கூட்டத்தில் வ.உ.சிதம்பரனரின் உரையை செய்தித்தாள் செய்தி வெளியிட்டது. சுதேசி நீராவி வழிசெலுத்தல் நிறுவனம் மற்றும் சுதேசி தொழில்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி அவர் பேசினார். 1908ஆம் ஆண்டில், சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா மற்றும் வ.உ.சிதம்பரனரின் நண்பரான பத்மநாப ஐயங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வந்தே மாதரம் வ.உ.சிதம்பரனரின் சக ஊழியராக “பத்மநாப ஐயங்கார் - வாழும் தேசிய சுய தியாகம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. தமிழ்நாட்டில் போதுமான கவனத்தைப் பெறத் தவறிய பத்மநாப ஐயங்காருக்கு இந்த கட்டுரை முக்கியத்துவம் அளித்தது.




Original article:

Share: