முக்கிய அம்சங்கள்:
1. ரொபஸ்டா காபி (Robusta coffee) விலையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக கடுமையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரோபஸ்டா உலகளாவிய காபி உற்பத்தியில் 40%க்கும் அதிகமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய காடழிப்பு ஒழுங்குமுறைக்கு (new deforestation regulation) முன்னதாக இருப்பு வைப்பதன் மூலம் இது பாதிக்கப்படுகிறது. இந்த ஒழுங்குமுறை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காபி மற்றும் பிற விவசாய ஏற்றுமதிகளின் விலையை அதிகரிக்கலாம்.
2. இந்தியாவின் காபி ஏற்றுமதியானது நிதியாண்டு-2024 இல் ஏப்ரல் மற்றும் நவம்பர் இடையே $1,146.9 மில்லியனை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் $803.8 மில்லியனுடன் ஒப்பிடப்பட்டது. இது 29% அதிகரிப்பைக் காட்டுகிறது. 460 மில்லியன் டாலர்களாக இருந்த நிதியாண்டு-2021-ன் அதே காலக்கட்டத்தில் இருந்த ஏற்றுமதியை விட இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காகும்.
3. உலகளாவிய ரோபஸ்டா விலைகள் பல பத்தாண்டுகளில் மிக அதிகளவை எட்டியுள்ளன. வியட்நாம் மற்றும் பிரேசில் போன்ற முக்கிய காபி உற்பத்தி செய்யும் நாடுகளில் விநியோக பிரச்சனைகள் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
4. குறிப்பிடத்தக்க வகையில், உலகின் மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதியாளர்களில் ஒருவரான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து புதிய சந்தைகளைப் பெறுவதற்கான எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் சிறிய மாற்றம் காணப்பட்டது.
5. இந்த மாத தொடக்கத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மைத் துறையின் (United States Department of Agriculture (USDA)) அறிக்கை, பிரேசிலில் வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை பழங்கள் வளரும் காலத்தை பாதித்தது. இதனால் அரேபிகா (Arabica) மற்றும் ரோபஸ்டா (Robusta) விளைச்சல் எதிர்பார்த்த அளவைவிட குறைந்துவிட்டது.
6. குறிப்பிடத்தக்க வகையில், பிரேசில் உலகின் மிகப்பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது. இது உலகளாவிய உற்பத்தியில் சுமார் 40 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இதற்கிடையில், இரண்டாவது பெரிய காபி உற்பத்தியாளரான வியட்நாமும் குறைந்த உற்பத்திக்கான கணிப்புகளை அறிவித்துள்ளது.
7. காபி வாரியத் தரவுகளின்படி, அரேபிகா மற்றும் ரோபஸ்டா காபி உற்பத்தியில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 2022-23ஆம் ஆண்டில் 2,48,020 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. கர்நாடகாவின் சிக்கமகளூரு, குடகு மற்றும் ஹாசன் ஆகியவை இந்த உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. கேரளா 72,425 மெட்ரிக் டன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 18,700 மெட்ரிக் டன்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது.
உங்களுக்கு தெரியுமா :
1. இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் சிறந்த ஏற்றுமதிக்கான இலக்கு ஐரோப்பிய ஒன்றியமாகும். இதில், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகியவை மொத்த காபி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளன. மற்ற குறிப்பிடத்தக்க இடங்களில், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இவை மொத்த ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் காபி உற்பத்தியில் அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன.
2. ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் பொருட்கள் காடழிப்பு நிலத்திலிருந்து பெறப்படுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (European Union’s Deforestation Regulation (EUDR)) டிசம்பரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், ஐரோப்பிய நாடாளுமன்றம் சமீபத்தில் ஒழுங்குமுறையின் காலக்கெடுவை மேலும் ஒரு வருடம் நீட்டிக்க முடிவு செய்தது.
3. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)) என்ற சிந்தனைக் குழுவானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) மற்ற நாடுகளை விட ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் விவசாய ஏற்றுமதியை பாதிக்கும் என்று கணித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் விவசாய ஏற்றுமதி மதிப்பு $1.3 பில்லியன் ஆகும். ஏனென்றால், போட்டியிடும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் காடழிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.