திணறடிக்கும் தேவை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் குறித்து . . . - தலையங்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, 2005 (MGNREGA)) நிதி பற்றாக்குறை மற்றும் ஊதிய தாமதங்களால் பாதிக்கப்படக்கூடாது. 


அரசாங்கம் ஒரு நலத்திட்டத்தில் உறுதியாக இருக்கும் போது அந்த திட்டம் சிறப்பாக செயல்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. வேலை உறுதித் திட்டம் இரண்டு வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் பல காலகட்டங்களில் நீடித்து வளர்ச்சியடைந்துள்ளது. இந்த திட்டம் கிராமப்புற ஏழை மக்களிடையே பயனுள்ளதாகவும் பிரபலமாகவும் உள்ளது. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (National Democratic Alliance (NDA)) ஆட்சியில், இது முதலில் வேறொருவரின் யோசனையாகக் கருதப்பட்டது. பின்னர், அது ஒரு தேவையற்ற தேவையாக மாறியது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுத்தாக்கத்தின் போது, ​​MGNREGS அவசியமானது என்று நிரூபிக்கப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்கியது. ஊரடங்கு உத்தரவுகளுக்குப் பிறகு தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவியது. மேலும், தொற்றுநோய்க்குப் பிறகு தொடர்ச்சியான வரவு செலவு அறிக்கைகளின் சதவீத அடிப்படையில் ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைந்துள்ளதால் (2021-ஆம் நிதியாண்டில் 3.2%-லிருந்து நிதியாண்டு 2025ஆம் நிதியாண்டில் 1.78%-ஆக இருந்தது இப்போது "தேவையற்றது" என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் MGNREGS என்பது தேவையை அடிப்படையாகக் (demand driven) கொண்ட ஒரு திட்டமாகும். வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தொகையை விட கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இருப்பினும், இந்த நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. ஊதியங்கள் தாமதமாகிவிட்டன, இது செயற்கையாக தேவையைக் குறைத்துள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் ஊதியத்திற்கு ₹4,315 கோடி பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பணிகளுக்கான பொருள் செலவுகளில் அதன் பங்காக ₹5,715 கோடியை ஒன்றிய அரசு செலுத்த வேண்டியுள்ளது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, 2005 (MGNREGA)) வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய பிற சிக்கல்களும் உள்ளன. பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியத்தை சரிசெய்தல் மற்றும் ஆதார் அடிப்படையிலான கட்டண முறையுடன் (Aadhaar-based payment system) வேலை அட்டைகளை இணைப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதுமான நிதியை வழங்குகிறதா என்பதுதான் பிரச்சனையாக உள்ளது. நிதியைக் குறைப்பது தேவைக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கை பாதிக்கிறது. குறிப்பாக விவசாயப் பருவமற்ற காலங்களில், தங்கள் வருமானத்தை ஆதரிக்க இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு இது நியாயமற்றது. பல ஆய்வுகள் இந்தத் திட்டத்தின் நன்மைகளைக் காட்டுகின்றன. இது ஏழைகளுக்கு உதவுகிறது மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள், கிராமப்புற சாலைகள் மற்றும் நீர் பாதுகாப்பு வசதிகள் போன்ற முக்கியமான கிராம சொத்துக்களை உருவாக்குகிறது. தேவை சார்ந்த திட்டமாக, MGNREGS ஏழைகளின் கைகளில் பணத்தை வழங்கி கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. கிராமப்புற வறுமையை இன்னும் எதிர்கொள்ளும் ஒரு நாட்டில் MGNREGS மிகவும் முக்கியமானது. MGNREGS-க்கான அணுகுமுறையை ஒன்றிய அரசு மாற்ற வேண்டும். ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் நியாயமான ஒதுக்கீடு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.


Original article:

​Stifling demand: On the MGNREGS -Editorial 

Share: