ஏன் வட துருவத்தில் வெப்பநிலை சராசரியைவிட 20°C அதிகரித்துள்ளது? -அலிந்த் சவுகான்

 1979 முதல், ஆர்க்டிக் உலக சராசரியைவிட நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது. இது ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இப்பகுதி உலகின் பிற பகுதிகளுக்கு குளிர்சாதன பெட்டியாக செயல்படுகிறது. இது பூமியை குளிர்விக்க உதவுகிறது.


வட துருவத்தில் வெப்பநிலையானது சராசரியைவிட 20 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்ந்துள்ள்ளது. பிப்ரவரி 2 அன்று பனி உருகுவதற்கான வரம்பைக் கடந்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி, நார்வேயின் ஸ்வால்பார்டின் வடக்கில் வெப்பநிலையானது 1991–2020 ஆண்டின் சராசரியை விட 18 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அடுத்த நாள், வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தது.


பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி மிகா ரண்டனென், தி கார்டியனிடம், "இது மிகவும் தீவிரமான குளிர்கால வெப்பமயமாதல் நிகழ்வாகும். இது இதுவரை காணப்பட்ட வெப்பநிலையைவிட மிகக் கடுமையானதாக இருக்காது. ஆனால், இது இன்னும் ஆர்க்டிக்கில் நடக்கக்கூடியவற்றின் மேல் விளிம்பில் உள்ளது" என்று கூறினார்.


1979 முதல், ஆர்க்டிக் உலக சராசரியைவிட நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது. இது ஒரு கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தப் பகுதி பூமிக்கு குளிர்சாதன பெட்டியாக செயல்படுவதுடன், பூமியை குளிர்விக்க உதவுகிறது. இந்த விகிதத்தில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால், அது கடுமையான உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த தாக்கங்களில் கடல் மட்ட உயர்வு மற்றும் வானிலை முறைகளில் இடையூறுகள் ஆகியவை அடங்கும்.


வட துருவம் ஏன் அதிக வெப்பநிலையை அனுபவித்தது?


நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் துருவ குளிர்காலத்தின் (polar winter) ஆழத்தில் இப்பகுதி வழக்கத்திற்கு மாறாக லேசான வெப்பநிலையை அனுபவிக்கிறது. இது ஐஸ்லாந்தில் உள்ள ஆழமான குறைந்த அழுத்த அமைப்பு காரணமாகும். குறைந்த அழுத்த அமைப்பு என்பது அருகிலுள்ள பகுதிகளைவிட வளிமண்டல அழுத்தம் குறைவாக இருக்கும் ஒரு பகுதியாகும். இந்த அமைப்பு குறைந்த அட்சரேகைகளிலிருந்து வெப்பமான காற்றை இப்பகுதிக்குள் நுழைய அனுமதித்து, இப்பகுதிக்கு வெப்பத்தைக் கொண்டு வந்தது.


வடகிழக்கு அட்லாண்டிக்கில் மிகவும் வெப்பமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றொரு காரணியாகும். இது காற்றினால் இயக்கப்படும் வெப்பமயமாதலை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக, பிப்ரவரி 2 அன்று வட துருவத்தில் தினசரி சராசரி வெப்பநிலை சராசரியை விட 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது. முழுமையான வெப்பநிலை -1 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது.


ஆர்க்டிக் ஏன் உலக சராசரியை விட வேகமாக வெப்பமடைந்தது?


உலக வெப்பநிலை 1850-1900 ஆண்டின் அடிப்படையுடன் ஒப்பிடுகையில் சுமார் 1.3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த வெப்பநிலை உயர்வு பூமி முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. உதாரணமாக, ஆர்க்டிக் 1970-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து உலகளாவிய சராசரியைவிட 3.8 மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது, என்று 2022 ஆய்வின்படி குறிப்பிட்டுள்ளது.


ஆர்க்டிக்கின் விரைவான வெப்பமயமாதலுக்குப் பின்னால் பல காரணிகள் உள்ளன. ஒரு முக்கிய காரணி ஆல்பிடோ விளைவு (albedo effect), இது ஒரு மேற்பரப்பு எவ்வளவு சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்பதைக் குறிக்கிறது. கடல் பனி துருவப் பகுதிகளில் வெப்பநிலையைக் குறைவாக வைத்திருக்க உதவுகிறது. அதன் பிரகாசமான, வெள்ளை மேற்பரப்பு திரவ நீரை விட அதிக சூரிய ஒளியை விண்வெளியில் பிரதிபலிக்கிறது. ஆர்க்டிக்கில் உள்ள பனி உருகும்போது, ​​அதிக நிலம் அல்லது நீர் சூரியனுக்கு வெளிப்படும். இது அதிக வெப்பத்தை உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது. இதனால், அதிக வெப்பநிலைக்கு வழிவகுக்கிறது.


ஆர்க்டிக் போன்ற உயர் அட்சரேகைகளில் வெப்பச்சலனம் இல்லாதது மற்றொரு காரணமாகும். பூமியின் சூடான மேற்பரப்பு தரைக்கு அருகில் உள்ள காற்றுக்கு வெப்பம் கிடைக்கும் போது வெப்பச்சலனம் ஏற்படுகிறது. வெப்பச்சலனத்தில், ஆர்க்டிக்கைவிட அதிக சூரிய ஒளி பூமியின் மேற்பரப்பை அடைகிறது. இது வலுவான வெப்பச்சலனத்திற்கு வழிவகுக்கிறது. இது சூடான காற்று உயர காரணமாகிறது. உயரும் காற்று வளிமண்டலம் முழுவதும் வெப்பத்தை விநியோகிக்க உதவுகிறது.


இருப்பினும், ஆர்க்டிக்கில், வெப்பச்சலனம் பலவீனமாக உள்ளது. இதன் விளைவாக, பசுமை இல்ல வாயுக்களிலிருந்து வரும் கூடுதல் வெப்பச்சலனம் செங்குத்தாக கலக்க முடியாது. இதனால், வெப்பம் மேற்பரப்புக்கு அருகில் குவிந்துள்ளது.




Original article:

Share: