அமெரிக்கா, இந்தியா மற்றும் சட்டவிரோத குடியேற்றம் பற்றி . . . - தலையங்கம்

 சட்டவிரோத குடியேற்றத்தை இந்தியா கவனமாகவும் விரைவாகவும் கையாள வேண்டும்.


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது ஆச்சரியமானதோ அல்லது முன்நிகழ்ந்திடாததோ அல்ல. கடந்த சில ஆண்டுகளாக, முறையான ஆவணங்கள் இல்லாத நபர்களை அடையாளம் காணவும், தடுத்துவைக்கவும், நாடு கடத்தவும் அமெரிக்க அரசாங்கம் அதன் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (Immigration and Customs Enforcement (ICE)) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஜூன் மற்றும் அக்டோபர் 2024-க்கு இடையில், இந்தியா உட்பட 145-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 495 சர்வதேச விமானங்களில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் 1,60,000 மேற்பட்ட நபர்கள் நாடு கடத்தப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு, இந்த நாடுகடத்தல்களின் நேரம் மற்றும் முறை கவலையை ஏற்படுத்தும். ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றத்திலிருந்தது  ICE மேற்கொண்ட பெரிய அளவிலான ஒடுக்குமுறையுடன் நாடுகடத்தல்கள் ஒத்துப்போகின்றன. அவர் சட்டவிரோத குடியேற்றத்தை தனது முதன்மையான முன்னுரிமையாகக் (number one priority) குறிப்பிட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிகளின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, 7,25,000 ஆவணமற்ற தனிநபர்கள் அங்கு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திரும்பி வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு இந்தியா தயாராக வேண்டும். இரண்டாவதாக, முதல்முறையாக, அமெரிக்கா நாடுகடத்தலுக்கு இராணுவ விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. நாடுகடத்தலின் போது புலம்பெயர்ந்தோர் விலக்கிவைக்கப்பட்டதை அறிந்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தனது கண்டங்களை தெரிவித்தார். இந்த நடவடிக்கை அமெரிக்கா தனது உறுதியான நிலைப்பாட்டைத் தொடர விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நிலைப்பாட்டை விளக்கியுள்ளது. இந்த நாடுகடத்தல் அவர்களின் கடுமையான குடியேற்ற அமலாக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே என்று அவர்கள் கூறினர். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த நாடுகடத்தல் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். குடியேற்றச் சட்டங்களையும் அமலாக்கத்தையும் கடுமையாக்குவதே இதன் நோக்கம். சட்டவிரோத இடம்பெயர்வு ஆபத்துக்கு மதிப்பு இல்லை என்ற செய்தியை இது அனுப்புகிறது. நேரம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக இது நடந்துள்ளளது. இது ராஜதந்திர முயற்சிகள் மட்டும் போதுமானதாக இருக்காது என்பதைக் குறிக்கிறது. டிரம்ப் நிர்வாகம் இன்னும் இந்த நடவடிக்கைகளைத் தொடரலாம். இந்த நடவடிக்கை இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் மோதல் புள்ளியாக மாறும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய குடிமக்கள் என்பது உறுதி செய்து, அவர்கள் சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்குள் நுழைந்திருந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வது இந்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும். இருப்பினும், மெக்சிகோ மற்றும் கனடா வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முற்படும் இந்தியர்களின் ஆபத்தான பயணங்களை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அதிக நாடுகடத்தல் விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் (குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா) இளைஞர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் வேலை செய்வது சரியான பாதை அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி பிரச்சாரங்கள் சட்டவிரோத குடியேற்றத்தினால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்ட வேண்டும். முக்கியமாக, மூல காரணங்களை புறக்கணிக்கக்கூடாது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அடிப்படை பொருளாதார நெருக்கடி, ஆழமடைந்து வரும் விவசாய நெருக்கடிகள், சமூகத்தில் ஏற்படும் பதற்றங்கள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். அதிகரித்து வரும் விவசாய நெருக்கடிகளை சமாளிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் மக்களை இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுகின்றன. வாய்ப்புகளைத் தேடி பதற்றங்கள் ஏற்படும் மண்டலங்களுக்கு வேண்டுமென்றே பயணிப்பவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளை மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால், இந்தப் பெரிய அளவிலான இடம்பெயர்வுக்குப் பின்னால் உள்ள காரணங்களை இந்திய அரசாங்கம் கவனமாகவும் விரைவாகவும் கையாள வேண்டும்.




Original article:

Share: