வரவு செலவு அறிக்கையில் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு ₹5,074 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் UDISE+ தரவு, தக்கவைப்பு மற்றும் உள்கட்டமைப்பில் இடைவெளிகளைக் காட்டுகிறது -ரேணு சிங்

 கல்வி அமைச்சகத்தின் கூடுதல் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (Unified District Information System for Education Plus (UDISE+)) 2023-24ஆம் ஆண்டு தரவு, முந்தைய ஆண்டைவிட 2023-24ஆம் ஆண்டில் அரசுப் பள்ளி சேர்க்கை 88 லட்சம் குறைந்துள்ளதாகக் காட்டுகிறது. இந்தப் பற்றாக்குறைக்கு, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான சிறந்த தரவு சேகரிப்பு காரணமாக இருக்கலாம்.


UDISE+ தரவு சேகரிப்பு முன்பைவிட சிறப்பாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு மாணவருக்கும் தரவு சேகரிக்கப்பட்டுள்ளது. 19.7 கோடி மாணவர்கள் தங்கள் ஆதார் எண்களை வழங்கினர். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான கல்வி  அடையாள எண் (educational id (EID)) கிடைத்தது. இது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களைக் கண்காணிக்கவும், மாணவர்களை துல்லியமாக எண்ணவும் உதவுகிறது. இது பள்ளித் தரவு சேகரிப்பை மேம்படுத்துதல் மற்றும் அதன் பரிந்துரைகளைக் கண்காணித்தல் என்ற தேசிய கல்விக் கொள்கை இலக்கை பின்பற்றுகிறது.


தரவு சார்ந்த முடிவுகள்


இந்தியாவின் கல்விக் கொள்கை இப்போது வளங்களை திறம்பட மற்றும் திறமையாகப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நிதி அழுத்தங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இது வருகிறது. மக்கள்தொகை மாற்றங்கள் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகையையும் பாதிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், தரவுகளின் அடிப்படையில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளது. கல்வி முறையில் பொறுப்புக்கூறலுக்கான அதிக தேவையும் உள்ளது.


இருப்பினும், நிலைநிறுத்துவதில் இன்னும் சவால்கள் உள்ளன. பொருளாதார கணக்கெடுப்பு 2024-25, தக்கவைப்பு விகிதங்கள் தொடக்கப்பள்ளியில் (வகுப்பு 1 முதல் 5 வரை), தொடக்கப்பள்ளியில் 78 சதவீதம் (வகுப்புகள் 1 முதல் 8 வரை), இடைநிலைப்பள்ளியில் 63.8 சதவீதம் (வகுப்புகள் 1 முதல் 10 வரை) மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 45.6 சதவீதம் (வகுப்புகள் 1 முதல் 12 வரை) என தொடர்ந்து இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய, அணுகுமுறை தேவையான மாற்றத்தைக் கொண்டுவர போதுமானதாக இல்லை. எந்தக் குழந்தையும் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு புதிய மற்றும் பயனுள்ள உத்தி தேவை.


கல்வியில் நிதி முடிவுகள், கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளின் அடிப்படையிலும் எடுக்கப்படுகிறதா என்பது ஒரு முக்கிய கேள்வி. UDISE+ தரவுகள் இந்தியாவில் 14,71,891 பள்ளிகள் உள்ளன. மொத்தம் 24.8 கோடி மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், UDISE+ 2023-24-ன் படி 22,298 அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் 24,34,238 மாணவர்களையும் 1,58,990 ஆசிரியர்களை கொண்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act, 2009) அமல்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மூடப்பட்டன. இருப்பினும், அந்த பள்ளிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றாததால், அவற்றைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால் இது அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.


அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் 80% ஜார்க்கண்ட் (5879), பீகார் (4915), அசாம் (3630) மற்றும் மேற்கு வங்கம் (3380) ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே இருப்பதாக தரவு காட்டுகிறது. மேலும், நாடு முழுவதும் 31,981 ஆசிரியர்களைக் கொண்ட 12,954 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ளது. அதே நேரத்தில் 1,10,971 பள்ளிகளில் ஒற்றை ஆசிரியர்களே உள்ளனர் மற்றும் 39,94,097 மாணவர்கள் படிக்கின்றனர்.


மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் (13,198), அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (8,866), ஜார்க்கண்ட் (8,353), மகாராஷ்டிரா (8196) மற்றும் ராஜஸ்தான் (7688) உள்ளன. பள்ளிகளை மறுசீரமைத்து, தேவைக்கேற்ப ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் தெளிவாக உள்ளது. சிறிய பள்ளிகள் இன்னும் பெரும்பான்மையாக உள்ளன. 14,71,891 பள்ளிகளில் 20.6% பள்ளிகள் 30-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் 13.8% பள்ளிகள் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளன. இந்தத் தரவை கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். லடாக் (34.4%) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (24.7%) போன்ற சில மாநிலங்களில் 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பல பள்ளிகள் உள்ளன. இதற்கு கடினமான நிலப்பரப்பு காரணமாகும். போதுமான ஆசிரியர்கள் மற்றும் சரியான உட்கட்டமைப்புடன் கூடிய பள்ளிகளை மாணவர்கள் அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த GPS மேப்பிங் தேவைப்படும்.

UDISE+, 2023-24 தரவு ஒரு தீவிரமான சிக்கலைக் காட்டுகிறது. கல்வி உரிமை சட்டம், 2009 அனைத்துப் பள்ளிகளும் மூன்று ஆண்டுகளுக்குள் அங்கீகாரம் பெற வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும் என்று கூறியது. இருப்பினும், 22,298 அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இன்னும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 24,34,238 மாணவர்கள் மற்றும் 1,58,990 ஆசிரியர்கள் உள்ளனர். UDISE+-ல் பட்டியலிடப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பெரும்பாலானவை ஜார்க்கண்ட் (5,879), பீகார் (4,915), அசாம் (3,630) மற்றும் மேற்கு வங்கம் (3,380) ஆகிய நான்கு மாநிலங்களில் அமைந்துள்ளதால், இதற்கு உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.


UDISE+ தரவுகளின்படி, கிரேடு 1 உள்ள 8,73,841 அரசுப் பள்ளிகளில், 77,714 8.9% பள்ளிக்குள் அங்கன்வாடி மற்றும் முன் தொடக்கப் பிரிவு இரண்டும் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பள்ளிகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வளங்கள் திறம்படப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க ஒரு ஆய்வு நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இது பொது நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதையும் வீணாக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய உதவும்.


தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ சிறப்பாக நிர்வகிப்பதையும் செயல்படுத்துவதையும் உறுதி செய்வதற்கு வரவு செலவு அறிக்கைகளை விவரங்களைத் தாண்டிப் பார்ப்பது முக்கியம். ஒன்றிய அரசு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தேர்வு வாரியங்கள் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு மூலம் இதை அடைய முடியும். ஆசிரியர் பகுத்தறிவு போன்ற செலவுகளைக் குறைப்பதன் மூலமும் வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலமும், கல்வி முறை மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாணவர்கள் மீது கவனம் செலுத்த முடியும். இது வாழ்நாள் முழுவதும் கற்றலுக்குத் தேவையான ஆதரவை அவர்களுக்கு வழங்க உதவும்.




Original article:

Share: