இந்திய அரசியலமைப்பின் பிரிவு 239AA கீழ் டெல்லிக்கு என்ன சிறப்பு விதிமுறைகள் உள்ளன? -ரோஷ்னி யாதவ்

 உங்களுக்குத் தெரியுமா? :


. டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் தனித்துவமான நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளது. இது முக்கியமாக டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம் (National Capital Territory of Delhi Act), 1991-ன் கீழ் செயல்படுகிறது.


. இந்திய அரசியலமைப்பில் உள்ள முதல் அட்டவணையின்படி, டெல்லி ஒரு யூனியன் பிரதேசமாகும். பிரிவு 239AA அதன் நிர்வாகத்திற்கான சிறப்பு விதிமுறைகளை வழங்குகிறது.


. பிரிவு 239AA, 69-வது திருத்தச் சட்டம், 1991 மூலம் சேர்க்கப்பட்டது. டெல்லியின் மாநில அந்தஸ்து கோரிக்கையை ஆராய 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட எஸ். பாலகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் (S Balakrishnan Committee) அடிப்படையில் இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.


• பிரிவு 239AA-ன் படி, டெல்லி தேசிய தலைநகர் ஒரு நிர்வாகம் மற்றும் ஒரு சட்டமன்றத்தைக் கொண்டிருக்கும். டெல்லி சட்டமன்றம் தேசிய தலைநகர் பிரதேசத்தின் முழு அல்லது எந்தப் பகுதிக்கும் சட்டங்களை இயற்ற முடியும். மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள பிரிவுகளில் சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், அவை யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தினால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும். இருப்பினும், காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் குறித்து சட்டங்களை இயற்ற முடியாது.


• பிரிவு 239AA(b) டெல்லி சட்டமன்றத்தில் எத்தனை இடங்களை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறுகிறது. இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், தேசிய தலைநகர் பிரதேசம் எவ்வாறு தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது மற்றும் சட்டமன்றத்தின் செயல்பாட்டிற்கான பிற விதிகளையும் தீர்மானிக்கும்.


. 1991-ஆம் ஆண்டில், பிரிவு 239AA சேர்க்கப்பட்டபோது, ​​நாடாளுமன்றம் டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம் (Government of National Capital Territory of Delhi (GNCT)) சட்டம், 1991-ஐ நிறைவேற்றியது. இந்த சட்டம் டெல்லியின் சட்டமன்றம் மற்றும் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான கட்டமைப்பை அமைக்கிறது. இது சட்டமன்றத்தின் அதிகாரங்கள், துணை நிலை ஆளுநர் (Lieutenant Governor (LG)) விருப்புரிமை அதிகாரம் மற்றும் துணைநிலை ஆளுநருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய முதலமைச்சரின் கடமை ஆகியவற்றை வரையறுக்கிறது.





Original article:

Share: