இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


• நிதிக் கொள்கை (fiscal policy) எனப்படும் வரிவிதிப்பு மற்றும் செலவினக் கொள்கைகளைப் பயன்படுத்தி அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. வரிகளைக் குறைக்கும்போது, மக்கள் அதிக பணம் செலவழிக்கிறார்கள். இது பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கிறது.


• இதேபோல், சம்பளம் (நடப்பு அல்லது வருவாய் செலவு என்றும் அழைக்கப்படுகிறது) போன்ற தினசரிச் செலவுகளுக்கான செலவினங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்தி சொத்துக்களை (மூலதனச் செலவு என்று அழைக்கப்படுகிறது) உருவாக்குவதற்கு அதிகமாகச் செலவிடுவது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை  அதிகரிக்க உதவுகிறது.


• இந்தியாவின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி பெயரளவு அடிப்படையில் 10% விகிதத்தில் வளர்ந்துள்ளது. ஒப்பிடுகையில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது ஒரு இந்தியரின் சராசரி வருமானம் 8.9% விகிதத்தில் மட்டுமே வளர்ந்துள்ளது.


• ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை 11.8% வளர்ச்சியடைந்தது. இது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை விட வேகமாகும்.  2015-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு செலவு அறிக்கை 13.31% மட்டுமே இருந்தது. மேலும்,  2025 நிதியாண்டில் 15.65% ஆக அதிகரித்தது.


• சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை செலவுகள் கல்வியை விடக் குறைவாக உள்ளது. வரவு செலவு அறிக்கை ஒட்டுமொத்த அளவிற்கு ஏற்ப ஒதுக்கீடு வளர்ந்திருந்தாலும், அது மொத்த அரசாங்க செலவினத்தில் 1.7% மட்டுமே  உள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? :


• மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் ஒரு முக்கியமான பொருளாதார குறிகாட்டியாகும் (macroeconomic indicator). உலகின் பிற நாடுகளுடன் ஒரு நாட்டின் வளர்ச்சியை ஒப்பிடுவதற்கும் இது ஒரு எளிதான அளவீடாகும்.


• இந்த அளவீட்டில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது சராசரி எண்ணை மட்டுமே தருகிறது. இது வருமானம், வேலையின்மை, கிராமப்புற-நகர்ப்புற இடைவெளிகள் அல்லது வருமான நிலைகளில் உள்ள வேறுபாடுகளைக் காட்டாது. இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடப்படும் விதம் காரணமாக அது அடிக்கடி பயன்படுத்தப்படும் அளவீடாகவே உள்ளது.


• மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும்.




Original article:

Share: