ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையானது, மூலதனம் சார்ந்த திட்டங்களில் (capital-intensive projects) கவனம் செலுத்துகிறதா? நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (urban local bodies) எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
2015-ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நகர்ப்புற மேம்பாட்டை முன்னுரிமையாகக் கருதியது. ஏனெனில், நகரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product (GDP)) 67% பங்களிக்கின்றன. இருப்பினும், "வளர்ந்த இந்தியா" (Viksit Bharat) திட்டத்தில், நகரங்கள் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளது.
நகர்ப்புற இந்தியாவிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ?
ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் நகர்ப்புற மேம்பாட்டிற்கான மொத்த நிதியாக ₹96,777 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ₹82,576.57 கோடியை விட அதிகமான ஒதிக்கிட்டு தொகையாகும். இருப்பினும், பணவீக்கத்தை சரிசெய்த பிறகு, உண்மையான நிதி குறைந்துள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீடு (Revised Estimate (RE)) மார்ச் மாதத்திற்குள் ₹63,669.93 கோடி மட்டுமே செலவிடப்படும் என்றும், வரவு செலவு அறிக்கையில் 22.9% பயன்படுத்தப்படாமல் உள்ளதாக என்றும் காட்டுகிறது. பிரதம் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) (Pradhan Mantri Awas Yojana (Urban)) திட்டத்தில் நிதிப்பற்றாக்குறை உள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கு ₹30,170.61 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீடு அதை ₹13,670 கோடி ரூபாயாகக் குறைத்தது. இது கொள்கை இலக்குகளுக்கும் (policy ambitions) உண்மையான செயல்படுத்தலுக்கும் (actual implementation) இடையிலான இடைவெளியைக் காட்டுகிறது.
நகர்ப்புற நிதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, நகர உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையுடன் பொருந்தவில்லை. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மூலதனம் சார்ந்த திட்டங்களுக்கு (capital-intensive projects) இன்னும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நிதி குறைப்பு எவ்வாறு நிகழ்ந்தது?
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)), ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் (Centrally Sponsored Schemes (CSS)) மற்றும் ஒன்றிய அரசின் துறை திட்டங்கள் (Central Sector Schemes) மூலம் தங்களுக்கு தேவையான நிதியைப் பெறுகின்றன.
இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடி பரிமாற்றங்கள் குறைந்துள்ளன. நகரங்களுக்கான முக்கிய வருமான ஆதாரமான நகர்ச் சுங்கவரி (octroi) நீக்கப்பட்டது. மேலும், இழந்த வருவாயை ஒன்றிய அரசின் நிதியுதவி மூலம் அரசாங்கம் ஈடுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சரக்கு மற்றும் சேவைவரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வருமானம் 21%-க்கும் மேல் குறைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆதரவை அதிகரிப்பதற்குப் பதிலாக, கடந்த ஆண்டு ₹26,653 கோடியிலிருந்து இந்த ஆண்டு ₹26,158 கோடியாகக் குறைந்தது. இந்தப் பற்றாக்குறை நகரங்கள் தாங்களாகவே நிதி திரட்ட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். இது குடிமக்களுக்கு அதிக வரிகளை விதிக்க வழிவகுக்கும்.
ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்கள் ஒன்றிய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் செலவு பகிர்வு மூலம் நிதியளிக்கப்படுகின்றன. CSS-ன் கீழ் உள்ள முக்கிய நகர்ப்புற திட்டங்களில்,
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY))
தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission (SBM))
அடல் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான இயக்கம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT))
சீர்மிகு நகரங்கள் திட்டம் (Smart Cities Mission) ஆகியவை அடங்கும்.
இருப்பினும், இந்த திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு நிதி ஒதுக்கீடுகள் ஏமாற்றமளிக்கின்றன.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கடந்த ஆண்டை விட நிதி 30% குறைக்கப்பட்டுள்ளது.
அடல் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான இயக்கம் ((Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)) & சீர்மிகு நகரங்கள் திட்டம் ஆகிய இருதிட்டங்களும் கடந்த ஆண்டு, ₹10,400 கோடியைப் பெற்றன. இந்த ஆண்டு, நிதி குறைந்துள்ளது. இருந்தபோதிலும், சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு தேவையான பணம் இல்லை.
தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் (SBM - Urban) : கடந்த ஆண்டைப் போலவே ஒதுக்கீடு ₹5,000 கோடியாக உள்ளது. இருப்பினும், திருத்தப்பட்ட மதிப்பீடு ₹2,159 கோடி மட்டுமே செலவிடப்படும் என்பதைக் காட்டுகிறது. இது திட்டமிட்டதை விட 56% குறைவானதாகும்.
ஒன்றிய அரசின் துறை திட்டங்கள் ஒன்றிய அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த திட்டங்கள் அரசியல் செல்வாக்கு கொண்டவை. பெரும்பாலான நிதி பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு, குறிப்பாக மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு செல்கிறது.
மற்ற நகர்ப்புற திட்டங்களைப் போல் இல்லாமல், மெட்ரோ திட்டங்கள் அதிக நிதியைப் பெற்றுள்ளன:
2024-25 நிதியாண்டில், வெகுஜன விரைவான போக்குவரத்து அமைப்பு (Mass Rapid Transit Systems) மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை நிதி ஒதுக்கீடு ₹21,335.98 கோடியாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க நிதி இப்போது ₹24,691.47 கோடியாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, 2025-26 ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை ₹31,239.28 கோடியை முன்மொழிந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 46% அதிகமான நிதி ஒதுக்கீடாகும். விரிவான நகர்ப்புற போக்குவரத்திற்கு பதிலாக மெட்ரோ ரயிலில் அதிக கவனம் செலுத்துவது, நகர்ப்புற மேம்பாடு நீண்ட காலத்திற்கு அனைவருக்கும் பயனளிக்குமா என்ற கவலையை எழுப்புகிறது.
அடுத்து என்ன?
ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் ₹10,000 கோடி மதிப்பிலான புதிய நகர்ப்புற சவால் நிதி (Urban Challenge Fund) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் ₹1 லட்சம் கோடி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், 50% நிதி தனியார் முதலீடுகளிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைக்கு எதிரானதாகத் தெரிகிறது. ஏனெனில், கடந்த காலத்தில் சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு (Smart Cities Mission) தனியார் துறை குறைவாகவே பங்களித்தது.
பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தும் ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை, வேலைவாய்ப்பு உருவாக்கம், பசுமை வேலைகள் மற்றும் நிலையான பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றில் குறைவாகவே கவனம் செலுத்துகிறது. உட்கட்டமைப்பில் முதலீடு செய்வது முக்கியம் என்றாலும், சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை புறக்கணிப்பது ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடும்.
எழுத்தாளர் சிம்லாவின் முன்னாள் துணை மேயர் மற்றும் கேரள நகர்ப்புற ஆணைய உறுப்பினர்.