டெல்லி இரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


1. இந்த சம்பவம் நடைமேடை எண் 14ல் இரவு 9.30 மணி முதல் 10.15 மணி வரையிலான ஒரு 10 நிமிடங்களுக்குள் நிகழ்ந்தது. அங்கு பலர் நடைமேம்பாலம், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிகளில் (எஸ்கலேட்டர்களில்) சிக்கிக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்ட நெரிசல் குறித்து டெல்லி தீயணைப்பு சேவைக்கு (Delhi Fire Service (DFS)) இரவு 9:55 மணிக்கு முதல் தகவல் வந்தது.


2. "வார இறுதி நாள் என்பதால், பல பயணிகள் இரவு 9 மணி முதல் 10 மணி வரை மகாகும்பமேளாவிற்காக பிரயாக்ராஜுக்கு இரயில்களில் ஏற முயன்றனர். அதே நேரத்தில், சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் (Swatantra Senani Express) மற்றும் டெல்லி-புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (Delhi-Bhubneshwar Rajdhani Express) ஆகிய இரண்டு இரயில்கள் தாமதமாகின. இதனால் 12, 13 மற்றும் 14 நடைமேடைகளில் அதிகமான பயணிகள் கூடியிருந்தனர்," என்று துணை காவல் ஆணையர் (இரயில்வே) கே.பி.எஸ். மல்ஹோத்ரா கூறினார்.


3. வணிக மற்றும் டிக்கெட் பரிசோதக ஆய்வாளரின் கூற்றுப்படி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 1,500 பொது டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்று அதிகாரி கூறினார்.


4. பல பயணிகள் புது டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸுக்காகக் காத்திருப்பதாக ஒரு காவல்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டது. இந்த இரயில் தினமும் இரவு 10:10 மணிக்கு நடைமேடை எண் 14 இல் இருந்து புறப்படும்.


5. ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இரவு 9 மணிக்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதாக பல பயணிகள் குறிப்பிட்டனர். அரசு ரயில்வே காவல்துறை (Government Railway Police(GRP)) மற்றும் இரயில்வே துறைகள் இரண்டும் இதை அறிந்திருந்தன. ஆனால், சரியான நேரத்தில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.


உங்களுக்குத் தெரியுமா? :


1. நிகழ்வுகளில் கூட்டத்தை நிர்வகிப்பதற்கான NDMA-ன் வழிகாட்டியின்படி, ஒரு கூட்டத்தில் உள்ளவர்களின் நடத்தை மற்றவர்களால் பாதிக்கப்படலாம். தனிநபர்கள் ஒரு கூட்டத்தில் தனியாக செயல்படுவதைவிட வித்தியாசமாக செயல்படலாம், மேலும் ஒரு சிலரின் செயல்கள் மற்றவர்களை பின்பற்ற வழிவகுக்கும். கூட்டத்தின் நடத்தையைப் புரிந்துகொள்வது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த சமூக அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.


2. கூட்டக் கட்டுப்பாட்டிற்கான வழிகாட்டும் கொள்கை தேவை-வழங்கல் இடைவெளியை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதை மூன்று வழிகளில் செய்யலாம்:

  • கூட்டத்தின் வருகையைக் கட்டுப்படுத்துதல்.

  • இடத்தில் கூட்டத்தின் வருகையை ஒழுங்குபடுத்துதல்.

  • தேவைப்பட்டால், வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல்.


3. தேவையைப் புரிந்து கொள்ள, நாம் பல காரணிகளைப் பார்க்க வேண்டும். அவை :

(i) வரலாற்றுத் தரவு, கூட்ட வருகை முறைகள், வளர்ந்து வரும் கூட்டம் மற்றும் பார்வையாளர்களின் வகைகள்.


(ii) உச்சங்களை உருவாக்கும் பெருந்திரள் வருகையுடன் கூடிய நேரங்களை அடையாளம் காணவும். இவை சில பருவங்கள், வாரத்தின் நாட்கள், நாளின் குறிப்பிட்ட நேரங்கள், பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்றவற்றில் இருக்கலாம்.


(iii) முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவுகள் அல்லது பதிவுகளைக் கவனியுங்கள்.


(iv) பொதுப் போக்குவரத்து கால அட்டவணைகள்.



4. வருகையைப் புரிந்து கொள்ள, நாம் கணக்கிட வேண்டிய வழிமுறைகள்: 


1. இடத்தில் உள்ள திறனைக் கணக்கிடுங்கள். இதில் இருக்கை திறன் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு எத்தனை வழிபாடுகள், காணிக்கைகள் அல்லது பிரார்த்தனைகள் செய்யப்படலாம் என்பது அடங்கும்.


2. வைத்திருக்கும் பகுதிகள் அல்லது வரிசை வளாகங்களின் திறனைக் கணக்கிடுவது போன்ற முன்னெச்செரிக்கை வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.




Original article:

Share: