முக்கிய அம்சங்கள் :
1. அமெரிக்க அரசியலமைப்பின் 22-வது திருத்தமானது 1951-ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் திருத்தத்தின் அடிப்படையில், யாரும் இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்று கூறுகிறது. 1932 முதல் 1944 வரை அதிபராக பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்தத் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2. அமெரிக்க அதிபரின் பதவிக்காலத்திற்கு வரம்புகளை அமைப்பது அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கியவர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது. NPR-ன் அறிக்கையின்படி, அவர்களில் பெரும்பாலோர் அவசரகாலத்தின்போது, நாடு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பியதால், இதற்கான கால வரம்பை ஆதரிக்கவில்லை.
3. எனினும், பிரச்சினை பற்றிய விவாதம் முடிவுக்கு வரவில்லை. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிபர் பதவிக் காலத்தை கட்டுப்படுத்தும் முதல் திட்டம் 1803-ம் ஆண்டில் காங்கிரஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ஒரு வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டது. 1824 மற்றும் மீண்டும் 1826-ல், செனட் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என்ற தீர்மானங்களை அங்கீகரித்தது. இருப்பினும், இந்தத் தீர்மானங்கள் அவையில் கிடப்பில் வைக்கப்பட்டது. அமெரிக்க வரலாற்று ஆய்வாளரான ஸ்டீபன் W.ஸ்டாதிஸ், ”இருபத்தி இரண்டாவது திருத்தம்: ஒரு நடைமுறை தீர்வு அல்லது ஒரு பாகுபாடான சூழ்ச்சி? 1990” (The Twenty-Second Amendment: A Practical Remedy or Partisan Maneuver?) என்ற தனது ஆய்வறிக்கையில் இதைப் பற்றி எழுதினார்.
4. அமெரிக்க நாடாளுமன்ற பதவிக்கால வரம்புகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது, 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரு பாரம்பரியம் தொடங்கியது. 1796-ம் ஆண்டில், அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் 3-வது முறையாக போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்தார். அவரது முடிவு மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம் போல மாறியது. இது அரசியலமைப்பைப் போலவே புனிதமாகக் கருதப்பட்டது. பின்னர், 1801 முதல் 1809 வரை அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சனும் 3-வது முறையாக போட்டியிட விரும்பவில்லை. இது இரண்டு முறை பதவி வகிக்கும் மரபை வலுப்படுத்த உதவியது.
5. 1872-ம் ஆண்டு யுலிஸஸ் எஸ். கிராண்ட் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது பதவிக்கு அச்சுறுத்தல் தொடங்கியது. கிராண்டின் கூட்டணி கட்சிகளும், சில செய்தித்தாள்களும் அவர் மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தன. இது 1894 இடைக்காலத் தேர்தல்களின் போது, ஒரு பெரிய விவாதமாக மாறியது. கிராண்ட் தனது திட்டங்கள் குறித்து எதுவும் கூறவில்லை. இது, பலவீனமான பொருளாதாரம், தெற்கில் மறுகட்டமைப்புக்கு வெள்ளையர் எதிர்ப்பு மற்றும் நெறிமுறை ஊழல்களுடன் சேர்ந்து, குடியரசுக் கட்சியினர் அந்த ஆண்டு 94 இடங்களை இழக்க வழிவகுத்தது என்று NPR தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, வேட்புமனு வழங்கப்பட்டால் அதை ஏற்க மாட்டேன் என்று கிராண்ட் அறிவித்தார்.
6. 1875-ம் ஆண்டில், பிரதிநிதிகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இரண்டு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கும் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோளாக இருந்தது. பாரம்பரியத்தை மீறுவது "ஞானமற்றது, தேசபக்தியற்றது மற்றும் நமது சுதந்திர நிறுவனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்" என்று தீர்மானம் கூறியது. இருப்பினும், ஒரு அதிபர் 3-வது முறையாக போட்டியிட முயற்சிப்பது சட்டவிரோதமானது அல்ல. 1880-ம் ஆண்டில், கிராண்ட் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட முயன்றார், ஆனால் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
உங்களுக்குத் தெரியுமா? :
1. 22-வது திருத்தம், "எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது" என்று கூறுகிறது. மேலும், முன்னோடியின் பதவிக் காலத்தில் அதிபராகும் ஒரு துணை அதிபர் இரண்டு முழு பதவிக்காலங்களை வகிக்கவும் இது அனுமதிக்கிறது. முன்னோடியின் மீதமுள்ள பதவிக்காலத்தில் பாதிக்கும் குறைவாக அவர்கள் பணியாற்றும்வரை இது சாத்தியமாகும். உதாரணமாக, ஜான் எஃப். கென்னடியின் துணைத் தலைவராக இருந்த லிண்டன் ஜான்சன், 1963-ம் ஆண்டில் கென்னடி படுகொலை செய்யப்பட்ட பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கும் (14 மாதங்கள்) குறைவான அளவில் அதிபராக பணியாற்றினார். 1964-ம் ஆண்டில், ஜான்சன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். 1968-ம் ஆண்டில் அவர் போட்டியிடவில்லை என்றாலும், அவர் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்க முடியும். இது அவரது மொத்த பதவிக் காலத்தை ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் கொண்டு வந்திருக்கும்.
2. இரண்டு முறை பதவி வகிக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறிய முதல் (மற்றும் அவர் மட்டுமே) அதிபர் ரூஸ்வெல்ட் ஆவார். அவர் இறந்த 1933 முதல் 1945 வரை அவர் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது நிலையான தலைமையை வழங்க அவர் நான்கு முறை அதிபராக இருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியதாக NPR அறிக்கை தெரிவிக்கிறது.
3. 1947-ம் ஆண்டில், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றம் 22வது திருத்தத்தை நிறைவேற்றியது. அதிபர் பதவிகள் இரண்டு நான்கு ஆண்டு பதவிக்காலமாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு ஆறு ஆண்டு பதவிக்காலமாக இருக்க வேண்டுமா என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்தத் திருத்தம் இறுதியில் அதிபர்கள் மூன்றாவது பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடை செய்தது.