முக்கிய அம்சங்கள் :
• மத்திய வங்கியின் இந்த முயற்சி, அமைப்பின் பணப்புழக்கத் தேவைகளுக்கு நீடித்த தீர்வை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே, நேரத்தில் ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தி நாட்டின் அந்நியச் செலாவணியை வலுப்படுத்துகிறது.
• இந்த பரிமாற்ற வழிமுறை வங்கிகளுக்கு உடனடி பணப்புழக்கத்தை வழங்குவதன் மூலம் ரூபாயை நிலைப்படுத்தி உதவுகிறது. வெளிநாட்டு நிதிகள் நாட்டைவிட்டு வெளியேறும்போது ரூபாயின் மீதான அழுத்தத்தை இது குறைக்கிறது. இது தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. சந்தை நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் மாற்று விகிதத்தில் தீவிர ஏற்ற இறக்கங்களைத் தடுக்கும்.
• இந்த பரிமாற்றம் ரிசர்வ் வங்கியின் டாலர் இருப்புகளையும் அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் தலையிடுவதால் இது முக்கியமானது. அடுத்த வாரம், ரிசர்வ் வங்கி 3 ஆண்டு காலத்திற்கு $10 பில்லியன் பரிமாற்ற ஏலத்தை நடத்தும்.
• ஜனவரி 2025-ல், இந்திய வங்கி அமைப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பணப்புழக்க நெருக்கடியை சந்தித்தது. பணப்புழக்க பற்றாக்குறை ஜனவரி 23 அன்று ₹3.15 லட்சம் கோடியை எட்டியது. இது 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.
• ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த ரிசர்வ் வங்கி டாலர்களை விற்று வருகிறது. இது வங்கி அமைப்பில் ரூபாய் பணப்புழக்கத்தைக் குறைத்தது.
• இந்த பரிமாற்றம் ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து ஒரு எளிய வாங்கி-விற்கும் அந்நிய செலாவணி பரிவர்த்தனையாகும். ஒரு வங்கி ரிசர்வ் வங்கிக்கு அமெரிக்க டாலர்களை விற்கும். அதே, நேரத்தில் பரிமாற்ற காலத்தின் முடிவில் அதே அளவு அமெரிக்க டாலர்களை வாங்க ஒப்புக்கொள்கிறது.
•கடந்த ஐந்து வாரங்களில் ரிசர்வ்வங்கி, வங்கி அமைப்பில் ₹3.6 லட்சம் கோடியைச் சேர்த்தது. இது கடன் கொள்முதல்கள், அந்நிய செலாவணி பரிமாற்றங்கள் (forex swaps) மற்றும் நீண்டகால மறுசுழற்சிகள் மூலம் செய்யப்பட்டது.
உங்களுக்குத் தெரியுமா?
• சந்தையில் ரூபாய் பணப்புழக்க நிலைமைகளை நீடித்த அடிப்படையில் சரிசெய்ய ரிசர்வ் வங்கி திறந்த சந்தை செயல்பாடுகளை (Open Market Operations (OMOs)) பயன்படுத்துகிறது. திறந்த சந்தை செயல்பாடுகள் நீண்டகால அடிப்படையில் பணப்புழக்கத்தை சரிசெய்ய உதவுகின்றன. அதிகப்படியான பணப்புழக்கம் இருக்கும்போது, ரிசர்வ்வங்கி அரசுப் பத்திரங்களை விற்கிறது. இது சந்தையில் ரூபாய் பணப்புழக்கத்தைக் குறைக்கிறது. பணப்புழக்கப் பற்றாக்குறை இருக்கும்போது, ரிசர்வ்வங்கி அரசுப் பத்திரங்களை வாங்குகிறது. இது சந்தையில் பணப்புழக்கத்தைச் அதிகரிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமைப்பில் பண விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் திறந்த சந்தை செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.