ஜம்மு காஷ்மீரின் சினார் மரங்களின் (Chinar trees) புவிசார் குறியீடு எவ்வாறு முக்கியமானது?. -ரோஷ்னி யாதவ்

 ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் "மர ஆதார்" திட்டத்தைத் (“Tree Aadhaar” mission) தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் இப்பகுதியின் சினார் மரங்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


சமீபத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கம் சினார் மரங்களைப் பாதுகாக்க "மர ஆதார்" திட்டத்தைத் (“Tree Aadhaar” mission) தொடங்கியது. இந்த மரங்கள் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இந்த முயற்சியில் அனைத்து சினார் மரங்களையும் எண்ணுவதுடன் ஒவ்வொரு மரத்திற்கும் தனித்துவமான அடையாளத்தை வழங்குவது அடங்கும்.


முக்கிய அம்சங்கள் :


1. ஓரியண்டல் பிளேன் மரம் (பிளாட்டனஸ் ஓரியண்டலிஸ் வர். கேஷ்மெரியானா) என்றும் அழைக்கப்படும் சினார், மேப்பிள் போன்ற ஒரு மரம் ஆகும். இது ஒரு பெரிய விதானத்தைக் (canopy) கொண்டுள்ளது மற்றும் போதுமான நீர்வளம் உள்ள குளிர்ந்த காலநிலை பகுதிகளில் காணப்படுகிறது.


2. கிழக்கு இமயமலையில் இந்த மரம் பொதுவானது. மரம் முதிர்ச்சியடைய 30 முதல் 50 ஆண்டுகள் ஆகும். அதன் முழு அளவை அடைய 150 ஆண்டுகள் ஆகும். மரம் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் சுற்றளவு 10 முதல் 15 மீட்டர் வரை இருக்கலாம்.


3. சினார் என்பது ஜம்மு & காஷ்மீரின் "மாநில மரம்" (state tree) ஆகும். இப்போது இது ஒரு யூனியன் பிரதேசமாகும். இலையுதிர் காலத்தில் அதன் பசுமை இலைகள் மெதுவாக கருஞ்சிவப்பு சிவப்பு மற்றும் தங்க நிறமாக மாறும் போது இந்த மரம் இப்பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாக மாறும்.


4. காஷ்மீர் கலை, இலக்கியம் மற்றும் கைவினைப் பொருட்களில் இந்த மரம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. உள்ளூர் பேப்பியர்-மச்சே (local papier-mâché), எம்பிராய்டரி (embroidery), கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள் (hand-woven carpets) மற்றும் வால்நட் மர வேலைப்பாடுகளில் (walnut wood carvings) சினார் மையக்கருக்கள் பொதுவாகக் காணப்படுகின்றன.


5. முகலாயர்கள் இந்த மரத்திற்கு "சினார்" (chinar) என்ற பெயரை வழங்கினர். இந்த வார்த்தையை உருவாக்கியவர் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் என்று சிலர் நம்புகிறார்கள்.


6. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்முவில் உள்ள செனாப் பிராந்தியத்தின் சில பகுதிகளில் சினார் தோட்டங்களை விரிவுபடுத்துவதில் முகலாயர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். முகலாயர்கள் இந்த மரத்தை "அரசுரிமை வாய்ந்த மரம்" (royal tree) என்று கருதினர்.


சினார் பாதுகாப்புத் திட்டம் (Chinar Conservation Project)


1. ஒவ்வொரு சினார் மரத்தின் நிலையையும் அரசாங்கம் கண்காணிக்க உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தனியார் நிலத்தில் கூட சினார் மரத்தை வெட்டுவதற்கு அரசாங்க அனுமதி தேவை. இருப்பினும், பல மரங்கள் ஒப்புதல் இல்லாமல் வெட்டப்படுகின்றன. இதைத் தடுக்க, சினார் பாதுகாப்புத் திட்டம் (Chinar conservation project) இந்த மரங்களை சிறப்பாக கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது.


2. புதிய முயற்சியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் செனாப் பகுதியில் உள்ள சினார் மரங்களின் கணக்கெடுப்பு அடங்கும். இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக அரசாங்கம் அனைத்து சினார் மரங்களையும் கணக்கெடுத்துள்ளது. ஒவ்வொரு மரத்திற்கும் "மர ஆதார்" (Tree Aadhaar) என்ற தனித்துவமான அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மரமும் புவிசார் குறியீடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.


3. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சினார் மரங்களில் உலோக QR குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்வது ஒவ்வொரு மரத்தைப் பற்றிய தகவலையும் தரும். இந்தத் தகவல் 25 கூறுகளை (25 parameters) உள்ளடக்கியது. மரத்தின் தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை, வயது, உயரம், சுற்றளவு, கிளைகளின் எண்ணிக்கை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவை இதில் அடங்கும். மரத்தின் உயரம் பற்றிய விவரங்களும் தரவுகளில் அடங்கும். மரம் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களையும் இது குறிப்பிடும்.


கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes(MISHTI)) மற்றும் கங்கை டால்பினின் செயற்கைக்கோள் குறியீடு (Satellite tagging)


1. ‘காலநிலைக்கான சதுப்புநில கூட்டணியில்’ (Mangrove Alliance for Climate) இந்தியா இணைந்த பிறகு, ஒன்றிய அரசு கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (MISHTI) திட்டத்தைத் தொடங்கியது. காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் 27வது கட்சிகளின் மாநாட்டின் (COP27) போது இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வு நவம்பர் 2022-ம் ஆண்டில் எகிப்தில் நடந்தது. உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறிக்கும் வகையில் MISHTI முன்முயற்சி ஜூன் 5, 2023 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.


2. சதுப்புநிலங்கள் இந்தியாவில் மிகவும் பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாகும். அவை, கடற்கரையோரங்களை மோசமான வானிலையிலிருந்து பாதுகாக்கின்றன. காலநிலை மாற்றம் உலகளவில் அதிக தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், சதுப்புநிலத் தோட்டங்கள் கடலோர நிலங்களை மீள்தன்மை கொண்டதாக மாற்ற உதவுகின்றன. அவை, வெள்ளம் மற்றும் நில அரிப்பைத் தடுக்கின்றன. புயல்களின் போது அவை ஒரு இடைநிலையாகவும் (buffer) செயல்படுகின்றன. கூடுதலாக, சதுப்புநிலங்கள் சிறந்த கார்பன் மூழ்கிகளாகும்.


கங்கை டால்பினின் செயற்கைக்கோள் குறியீடு


1. இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ‘திட்டம் டால்பினுக்கு’ (Project Dolphin) ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், டிசம்பர் 18, 2024 அன்று அசாமில் முதல் கங்கை நதி டால்பின் (பிளாட்டானிஸ்டா கங்கெடிகா-Platanista gangetica) குறியிடப்பட்டது.


2. பருவகாலங்களில் இனங்கள் எவ்வாறு நகர்கின்றன மற்றும் நடந்துகொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள குறியீட்டு பயிற்சி (tagging exercise) உதவுகிறது. இது அவற்றின் இடம்பெயர்வு முறைகள், வரம்பு மற்றும் பரவல் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. கூடுதலாக, அவை தங்கள் வாழ்விடத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன. குறிப்பாக, துண்டாக்கம் அல்லது கலங்கிய ஆறு (fragmented or disturbed river systems) அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது. இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


3. உலகளவில் காணப்படும் ஐந்து நதி டால்பின் இனங்களில் கங்கை டால்பினும் ஒன்றாகும். இது முக்கியமாக இந்திய துணைக் கண்டத்தில் காணப்படுகிறது. இது குறிப்பாக, கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா (Ganga-Brahmaputra-Meghna) மற்றும் கர்ணபுலி-சங்கு நதி அமைப்புகளில் (Karnaphuli-Sangu river systems) காணப்படுகிறது.


4. 2009-ம் ஆண்டு, பிரதமர் மன்மோகன் சிங், கங்கை நதி டால்பினை இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக (National Aquatic Animal) அறிவித்தார். இது இனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் பாதுகாப்பில் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கவும் ஒரு முயற்சியாகும்.


5. 1990-ம் ஆண்டு காலகட்டங்களில் இருந்து சிந்து மற்றும் கங்கை டால்பின்கள் இரண்டும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு பட்டியலில் 'அழிந்து வரும் இனங்கள்' (Endangered) ஆக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடு இந்த இனம் "காடுகளில் அழிந்து போகும் அபாயம் மிக அதிகம்" (a very high risk of becoming extinct in the wild) என்பதைக் குறிக்கிறது.




Original article:

Share: