மழுங்கிய ஆயுதம்: இணையம் நிறுத்தப்படுவது குறித்து...

 இந்தியா இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதை நிறுத்த வேண்டும். குறிப்பாக, கட்டுப்பாடுகளுக்கு சரியான காரணம் இல்லாதபோது அதை செய்யக்கூடாது.


இந்தியாவின் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (Software Freedom Law Center (SLFC)) 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் இணைய முடக்கங்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இணைய உரிமைகள் ஆதரவு குழுவான Access Now-ன் தனி அறிக்கை, அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்ட இணைய முடக்கங்களின் எண்ணிக்கையில் இந்தியா இன்னும் உலகிலேயே முன்னணியில் உள்ளது என்று கூறுகிறது. சட்ட ஒழுங்கைப் பராமரிக்க அலைபேசி இணைய முடக்கங்கள் ஒரு அத்தியாவசிய கருவியாக இருப்பதாக ஒன்றிய அரசு வாதிடுகிறது. 


இந்தியாவில் பெரும்பாலான இணைய பயனர்கள் அலைபேசிகள் மூலம் இணையத்தை அணுகுவதால், இந்த முடக்கங்கள் இணைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2024-ஆம் ஆண்டில் இணைய முடக்கம் குறித்து விரிவாகப் பார்த்தால், சில சந்தேகத்திற்குரிய உண்மைகள் தெரியவரும் அதன் படி: இந்தியாவில் 84 இணைய முடக்கங்களில், 41 போராட்டங்களின் போது விதிக்கப்பட்டன. 23 இணைய முடக்கங்கள் வகுப்புவாத மோதல்கள் காரணமாக விதிக்கப்பட்டன. 5 இணைய முடக்கங்கள் தேர்வுகளில் மோசடி செய்வதைத் தடுக்க விதிக்கப்பட்டன.


வன்முறைச் சூழ்நிலைகளின் போது, தவறான தகவல்கள் விரைவாகப் பரவும் இடங்களில், அதிகாரிகள் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை ஒரு தடுப்பு நடவடிக்கையாகக் கருதலாம். வன்முறை பற்றிய தாமதமான தகவல்கள் அவசரகால நடவடிக்கையை மெதுவாக்கும். அனுராதா பாசின் VS இந்திய ஒன்றியம் வழக்கில் (Anuradha Bhasin vs Union of India), ஒவ்வொரு இணைய முடக்கமும் அவசியமாகவும் விகிதாசாரமாகவும் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 


இணைய முடக்கம் மக்களின் வேலைகள், சுகாதாரம் மற்றும் கல்வியைப் பாதிக்கிறது. இது ஒரு கடுமையான நடவடிக்கை, எனவே அரசாங்கம் அதன் தாக்கத்தை மதிப்பிட்டு மிகவும் தேவைப்படும்போது மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக, இந்த விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர், ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


அவசரகால காவல் பணிகளுக்கான ஒரு கருவியாக இணைய முடக்கத்தை சிலர் ஆதரிக்கின்றனர். இருப்பினும், முடக்கங்கள் செயல்படுத்தப்படும் விதம் ஒரு பெரிய கவலையாக உள்ளது. Access Now மற்றும் இந்தியாவின் மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் அறிக்கைகள் கடுமையான பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்றன. தொலைத்தொடர்பு (சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்தல்) விதிகள், 2024 மற்றும் அதன் முந்தைய விதிகள் 2017-ன் படி, கால அளவு மற்றும் காரணங்களை விரிவாக விவரிக்கும் எந்த செல்லுபடியாகும் உத்தரவும் அரசாங்க வலைத்தளங்களில் பதிவேற்றப்படவில்லை. ஒவ்வொரு இணைய முடக்கத்திற்குப் பிறகும், ஒரு தீவிர மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.  அது அவசியமா மற்றும் அதன் தாக்கம் என்ன என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். 


எந்தவொரு நாட்டிலும் முடக்கங்களின் சிறந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். இருப்பினும், கடந்த ஆண்டு உலகளவில் 296 முடக்கங்கள் விதிக்கப்பட்டன. இது மில்லியன் கணக்கானவர்களை பாதித்தது. இந்தியாவின் இணைய முடக்கங்கள், எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு அவசரமாகத் தேவையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா முன்னிலை வகிக்க விரும்பாத பகுதிகளில் இணைய முடக்க குறியீடும்  (Internet shutdowns index) ஒன்றாகும்.




Original article:

Share: