'வைர முக்கோணத்திற்கு' ரத்னகிரி எப்படி முக்கியமானது? - குஷ்பு குமாரி

 இரத்னகிரியில் 60 வருட இடைவெளிக்குப் பிறகு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணியானது, ஒரு குறிப்பிடத்தக்க பௌத்த தலமாக கவனத்தை ஈர்த்துள்ளது.


இரத்னகிரியில் உள்ள 5-13ஆம் நூற்றாண்டு புத்த வளாகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிப் பணியின்போது ஒரு பிரம்மாண்டமான புத்தரின் தலை, ஒரு பிரம்மாண்டமான பனை மரம், ஒரு பழங்கால சுவர் மற்றும் பொறிக்கப்பட்ட புத்த நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இவை அனைத்தும் கி.பி 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


முதல் அகழ்வாராய்ச்சிகள் 1958 மற்றும் 1961-க்கு இடையில் நடந்தன. அவை தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டெபாலா மித்ராவால் (Debala Mitra)  வழிநடத்தப்பட்டன. பின்னர் அவர் 1981 முதல் 1983 வரை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் (Archaeological Survey of India (ASI)) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக இருந்தார். 1961-க்குப் பிறகு, இந்த இடத்தில் அகழ்வராய்ச்சி தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. இருப்பினும், வேறு சில கட்டமைப்புகள் மற்றும் சிற்பங்கள் ஓரளவு தெரிந்தன. அதற்குப் பதிலாக, ASI ஆனது ஒடிசாவில் உள்ள பிற பௌத்த தளங்கள் மீது தனது கவனத்தைத் திருப்பியது.


முக்கிய அம்சங்கள் :


1. ரத்னகிரி என்றால் "நகைகளின் மலை" (Hill of Jewels) என்று பொருள்படும். இது புவனேஸ்வரிலிருந்து 100 கி.மீ வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த இடம் பிருபா மற்றும் பிராமணி நதிகளுக்கு இடையில் ஒரு மலையில் அமைந்துள்ளது. இது ஒடிசாவின் மிகவும் பிரபலமான பௌத்த தளம் மற்றும் அதிகளவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட ஒன்றாகும்.


2. இரத்னகிரி ஒடிசாவில் சிறந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பௌத்த தளங்களில் ஒன்றாகும். இது உதயகிரி (Udaygiri) மற்றும் லலித்கிரியுடன் (Lalitgiri) சேர்ந்து பிரபலமான வைர முக்கோணத்தின் (Diamond Triangle) ஒரு பகுதியாகும். இந்த மூன்று பௌத்த பாரம்பரிய தளங்களும் தென்கிழக்கு ஒடிசாவின் ஜஜ்பூர் (Jajpur) மற்றும் கட்டாக் மாவட்டங்களில் (Cuttack districts) ஒன்றுக்கொன்று நெருக்கமாக அமைந்துள்ளன.


3. ஒடிசா சுற்றுலாத் தளத்தின்படி, உள்ளூர்வாசிகள் லலித்கிரியை (Lalitgiri) நால்டிகிரி (Naltigiri) என்றும் அழைக்கின்றனர். மேலும், இது ஒடிசாவின் புத்த வைர முக்கோணத்தில் (Buddhist diamond triangle) மிகப் பழமையான ஒன்றாகும். இந்த இடத்திலிருந்து கிடைத்த முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, கோண்டலைட், ஸ்டீடைட், வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன நான்கு கொள்கலன்களைக் கொண்ட நினைவுச்சின்ன கலசம் (relic casket) ஆகும். இந்த நினைவுச்சின்னங்கள் புத்தருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.


4. உதயகிரி தளமானது மற்ற மூன்று தளங்களில் மிகப்பெரியது ஆகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் இரண்டு மலைத்தொடர்களின் அடிவாரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த இடம் பெரும்பாலும் புவனேஸ்வரில் உள்ள உதயகிரி குகை மற்றும் கந்தகிரி குகைகளாக தவறாகக் கருதப்படுகிறது. ஒடிசா சுற்றுலா தளத்தின்படி, உதயகிரி பற்றிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இரத்னகிரி மற்றும் லலித்கிரியைப் போலல்லாமல், இங்கு எந்த சிற்பங்களோ அல்லது வேதங்களோ காணப்படவில்லை. இந்த சிற்பங்களும் வேதங்களும் பொதுவாக வஜ்ராயண தாந்த்ரீக வழிபாட்டுத் தலங்களுடன் (Vajrayana tantric cult) இணைக்கப்பட்டுள்ளன.


5. இரத்னகிரி தளம் வஜ்ராயன (அல்லது தந்திரயான) புத்த மதப் பள்ளியின் ஒரு முக்கியமான ஆரம்பகால மையமாக நம்பப்படுகிறது. "இடிமின்னல் வாகனம்" (Thunderbolt Vehicle) என்றும் அழைக்கப்படும் வஜ்ராயன பௌத்தம், மாய நடைமுறைகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கியது. இந்த புத்தமத வடிவம் இறுதியில் இமயமலைப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் பரவியது.


6. இரத்னகிரி மடாலயம் இந்தியாவில் வளைந்த கூரையைக் கொண்ட ஒரே புத்த மடாலயமாகும். ஒரு காலத்தில் இது சுமார் 500 துறவிகளை தங்க வைத்திருந்ததாக வரலாற்று சான்றுகள் காட்டுகின்றன. இந்த துறவிகள் தந்திரயான புத்த வடிவத்தைப் (Tantrayana form of Buddhism) பின்பற்றினர்.

தளத்திலிருந்து கண்டுபிடிப்புகள்


1. புதுப்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் பிரம்மாண்டமான புத்தர் தலைகளை தளத்தின் கலாச்சார சூழலில் வைக்க உதவும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன (ASI) அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தளத்தின் செராமிக் சேகரிப்பு பற்றிய சிறந்த புரிதலைப் பெறவும் அவர்கள் நம்புகிறார்கள்.


செராமிக் தொகுப்பு (Ceramic assemblage)

இது ஒரு தொல்பொருள் தளத்தில் காணப்படும் மட்பாண்டங்கள் மற்றும் மட்பாண்ட கலைப்பொருட்களின் தொகுப்பாகும். இந்த மட்பாண்டங்கள் மனித நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவை, பண்டைய காலங்களில் கலாச்சார நடைமுறைகள், பொருளாதார பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் காட்ட முடியும்.


3. தாமஸ் டொனால்ட்சனின் கூற்றுப்படி, ரத்னகிரி ஒரு கற்றல் மையத்தைப் (learning center) போலவே நாளந்தாவும் முக்கியமானது. இதில், சில திபெத்திய நூல்களும் அங்கு காணப்பட்டன. புத்த மதத்தின் மகாயான (Mahayana) மற்றும் தந்திரயான (Tantrayana) பிரிவுகள் தொடங்கிய இடமும் இதுவாகும். வஜ்ராயானம் (Vajrayana) என்றும் அழைக்கப்படும் தந்திரயானம், மாய நடைமுறைகள் (mystical practices) மற்றும் கருத்துக்களை (concepts) உள்ளடக்கியது.


4. சுனில் பட்நாயக் போன்ற அறிஞர்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகள் முக்கியமானவை என்று நம்புகிறார்கள். ஒடிசா ஒரு காலத்தில் பௌத்த கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது என்பதை அவர்கள் காட்டுகிறார்கள். ஒடிசாவில் 100க்கும் மேற்பட்ட பழங்கால பௌத்த தளங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


5. சில ஆய்வுகள், பிரபல சீன புத்த துறவி மற்றும் பயணி ஹியூன் சாங் இரத்னகிரிக்கு பயணம் செய்திருக்கலாம் என்று கூறுகின்றன. அவர் கி.பி 638-639 காலத்தில் ஒடிசாவிற்கு பயணம் செய்தார். இந்த இடத்தில் புதிய அகழ்வாராய்ச்சிகள் வெவ்வேறு காலங்களில் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம், கலை மற்றும் கட்டிடக்கலை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும். 5-ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஏதேனும் பழங்கால நினைவுச்சின்னங்கள் அந்த இடத்தில் இருந்ததா என்பதையும் அவை காட்டக்கூடும் என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.


ஒடிசா - ஒரு முக்கியமான பௌத்த மையம்


1. ஒடிசாவில், பௌமகார வம்சத்தின் (Bhaumakara dynasty) கீழ் பௌத்தம் செழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வம்சம் 8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மாநிலத்தின் சில பகுதிகளை ஆட்சி செய்தது.


2. ஒடிசா நீண்ட காலமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கடல் மற்றும் வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவுடனான பிரபலமான வர்த்தகப் பொருட்களில் மிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பட்டு, கற்பூரம், தங்கம் மற்றும் நகைகள் ஆகியவை அடங்கும்.


3. இந்த மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் பலியாத்ராவை (Baliyatra) நடத்துகிறது. அதாவது, 'பாலிக்கு பயணமான' (voyage to Bali), ஏழு நாள் திருவிழாவாக கொண்டாடுகிறது. கலிங்கத்திற்கும், பாலிக்கும் இடையிலான 2,000 ஆண்டுகள் பழமையான கடல்சார் மற்றும் கலாச்சார உறவுகளை இந்த விழா கொண்டாடுகிறது. இது பிற தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களுடனான தொடர்புகளையும் மதிக்கிறது. இதில் ஜாவா, சுமத்ரா, போர்னியோ, பர்மா (மியான்மர்) மற்றும் சிலோன் (இலங்கை) ஆகியவை அடங்கும்.


4. புத்தர் தனது வாழ்நாளில் ஒடிசாவிற்கு பயணம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், பௌத்தத்தைப் பரப்புவதில் கலிங்கம் முக்கியப் பங்கு வகித்தது. தபசு (Tapassu) மற்றும் பல்லிகா (Bhallika) ஆகியோர் புத்தரின் முதல் சீடர்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த இரண்டு வணிக சகோதரர்களும் (merchant brothers) ஒடிசாவின் பண்டைய பெயரான உத்கலாவிலிருந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.


5. அசோகர் கிமு 268 முதல் 232 வரை மகதத்தின் மௌரியப் பேரரசராக இருந்தார். கிமு 261-ல் கலிங்கத்தை அவர் படையெடுத்ததாக நம்பப்படுகிறது. இந்தப் போர் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தியது. அது அவரை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதன் விளைவாக, அவர் பௌத்தத்திற்குத் திரும்பி அகிம்சை பாதையை ஏற்றுக்கொண்டார். அவர் தனது பேரரசுக்குள் மட்டுமல்ல, இலங்கை, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் பௌத்தத்தைப் பரப்பினார்.


வஜ்ராயன பௌத்தம் (Vajrayana Buddhism)

1. வஜ்ராயன பௌத்தம் கி.பி 6-7ஆம் நூற்றாண்டில் மகாயான பௌத்தத்திலிருந்து (Mahayana Buddhism) உருவானது. இது முக்கியமாக வங்காளம், பீகார் மற்றும் திபெத்தில் செழித்து வளர்ந்தது மற்றும் இது இந்தப் பகுதிகளில் நிலைத்திருக்கிறது.


2. வஜ்ராயன பௌத்தத்தில் (Vajrayana Buddhism), இடி அல்லது வைரம் என்று பொருள்படும் வஜ்ர (Vajra) எனப்படும் மந்திர சக்திகளைப் பெறுவதன் மூலம் மோட்சத்தைச் (salvation) சிறப்பாக அடைய முடியும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பிரிவைப் பின்பற்றுபவர்கள் வஜ்ராயன பௌத்தம் பெண் தெய்வங்களை மையமாகக் கொண்டது என்று நம்பினர். இந்தத் தெய்வங்கள் ஆண் தெய்வங்களுக்குப் பின்னால் உள்ள சக்தி அல்லது ஆற்றலை (சக்தி) பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்தப் பிரிவில் புத்தர்கள் அல்லது போதிசத்துவர்களின் பெண் 'துணைவர்கள்' தங்கள் பின்பற்றுபவர்களுக்கு இரட்சகர்களாக-saviouresses (தாராக்கள்) கருதப்பட்டனர்.


3. தாந்த்ரீக பௌத்தம் (Tantric Buddhism) பல வழிமுறைகளைக் கொண்டுள்ளது. மிகவும் பிரபலமான ஒன்று "ஓம் மணி பத்மே ஹம்" (Om mani padme hum) ஆகும். இந்த வழிமுறைகள் வழிபாட்டாளருக்கு மந்திர சக்தியைக் கொடுப்பதாக நம்பப்பட்டது. அவை, உயர்ந்த பேரின்பத்தையும் தருவதாகக் கருதப்பட்டது. இந்த சொற்றொடர் "ஆ! ரத்தினம் உண்மையில் தாமரையில் உள்ளது" (Ah! The jewel is indeed in the lotus) என்று பொருள்படும் என்று வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷாம் விளக்குகிறார்.




Original article:

Share: