போக்சோ (POCSO) சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்து… - சீமா சிந்து

 சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, பாலியல் குறித்த சமூகத்தின் பார்வைகள் மாற வேண்டும். இன்றும் கூட, இந்திய அரசாங்கம் பாரதிய நியாய சன்ஹிதா வில் பிரிவு 69-ஐ அமல்படுத்துகிறது. இது திருமணத்தின் தவறான வாக்குறுதிகளால் ஒருவர் தவறாக வழிநடத்தப்படுதல் மற்றும் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதைத் தண்டிக்கும். இதனை அரசாங்கம் திருமணத்திற்கு முந்தைய உடலுறவை ஒழுக்கக்கேடானதாகக் கருதுகிறது என்பதைக் குறிக்கிறது.


போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 14 வயது சிறுமி தன்னார்வத்துடன் நான்கு நாட்கள் அவருடன் தங்கியிருந்ததால், தனது செயல்களின் விளைவுகளைப் புரிந்துகொண்டதாக நீதிமன்றம் கூறியது. இவை சம்மதத்துடன் நடந்தது என்பதை அந்தப் பெண் ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


இந்த முடிவு இந்தியா அரசாங்கம் போக்சோ சட்டத்தில் குழந்தைகளின் வயதை குறைக்க வேண்டுமா என்பது குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ், 18 வயதுக்குட்பட்ட எவரும் சட்டப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க முடியாது. இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டாலும், மைனருடன் பாலியல் தொடர்பு கொள்வது சட்டத்தின் கீழ் இன்னும் குற்றமாகும்.


போக்சோ சட்டம்  பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  ஆனால், பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்குட்பட்டவராக இருந்தால், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  இது குற்றம் எவ்வளவு கடுமையானது என்பதைக் காட்டுகிறது.


இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் 14 வயது, குற்றம் சாட்டப்பட்டவர் 19 வயது மேலும் அவர் அனாதை ஆவார். குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளார்.


போக்சோ சட்டம்  குழந்தைகளை இரண்டு வயதுக் குழுக்களாகப் பிரிக்கிறது. அவை: 18 வயதுக்குட்பட்டவர் மற்றும் 16 வயதுக்குட்பட்டவர். 


16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் செயல்களையும் விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறது.  இந்த வகைப்பாடு சிறார் நீதிச் சட்டம், (Juvenile Justice Act) 2015-ல் உள்ளது. இது 16-18 வயதுடையவர்களை கடுமையான வழக்குகளில் பெரியவர்களாக கருதி  விசாரிக்க அனுமதிக்கிறது.


இந்த வகைப்பாட்டின் காரணமாக, போக்சோ சட்டத்தில் வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று பலர் வாதிடுகின்றனர். பெரும்பாலான நாடுகளில், இந்த வயது 14 முதல் 16 வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், பாலியல் உறவுகள் மற்றும் திருமண வயது ஆகியவற்றை குழப்பிக் கொள்ளக்கூடாது என்றும் மக்கள் வாதிடுகின்றனர். இது சம்மதத்திற்கான வயதை 16 ஆகக் குறைக்கும் யோசனையை ஆதரிக்கிறது.


கடுமையான தண்டனைகள் காரணமாக பொய்யான போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. மேலும், இதுபோன்ற வழக்குகள் குறித்து நீதிமன்றங்கள் அடிக்கடி தங்கள் கவலைகளை எழுப்பியுள்ளன. போக்சோ சட்டத்தின் விதிகள் சில சமயங்களில் திருமணத் தகராறுகளில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.


 ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் பழிவாங்கும் நிகழ்வுகளிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஒரு பெண்ணின் பெற்றோர் அவளுடைய சம்மத உறவை ஏற்க மறுத்து, தவறான தகவல்களை வழங்குமாறு அப்பெண்னை வற்புறுத்துகிறார்கள். இது ஒரு கடினமான சூழ்நிலைக்கு வழிவகுக்கிறது. ஏனெனில், இந்தக் குற்றச்சாட்டு, குற்றம் சாட்டப்பட்டவரின் சமூக, மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், அவரது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளையும் சீர்குலைக்கும்.




 இந்தப் பின்னணியில், வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்க வேண்டுமா என்பதை மதிப்பீடு செய்யுமாறு சட்ட ஆணையத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.  குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (Prohibition of Child Marriage Act) (2006) மற்றும் குழந்தைக் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (provisions against child trafficking) பாதுகாப்புகளைத் தோற்கடிக்கும் என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தவறான பயன்பாட்டைச் சமாளிக்க "வழிகாட்டு நீதித்துறை விருப்புரிமை" (“guided judicial discretion”) பயன்படுத்தப்படலாம் என்று ஆணையம் பரிந்துரைத்தது.


முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த தவறான பயன்பாட்டைச் சமாளிக்க வழிகாட்டு நீதிமன்றத்தின் விருப்புரிமை போதுமானதாக இருக்காது. ஏனெனில், விருப்புரிமை பயன்படுத்தப்படும் நேரத்தில், ஒருமித்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏற்கனவே சரிசெய்ய முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது. 


21ஆம் நூற்றாண்டிலும், இந்திய அரசாங்கம் பாரதிய நியாய சன்ஹிதாவில் பிரிவு 69-ஐச் சேர்த்துள்ளது. ஒரு நபர் தவறான திருமண வாக்குறுதியால் தவறாக வழிநடத்தப்பட்டால், சம்மதத்துடன் பாலுறவு கொண்டதற்காக இந்த சட்டம் மக்களைத் தண்டிக்கும். 


இது அரசாங்கம் பாலினத்தை ஒரு பரிவர்த்தனை முறையாகக் கருதுகிறது மற்றும் திருமணத்திற்கு முந்தைய உடலுறவை ஒழுக்கக்கேடானது என்று கருதுகிறது என்பதைக் குறிக்கிறது. இத்தகைய சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, இந்தியாவில் பாலியல் குறித்த சட்ட விதிகள் மற்றும் சமூக அணுகுமுறைகள் இரண்டும் மாற வேண்டும்.


சீமா சிந்து, எழுத்தாளர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.




Original article:

Share: