தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பிராந்திய இராஜதந்திரத்தில் பூட்டானின் முக்கிய பங்கை பட்ஜெட் 2025 எவ்வாறு வலியுறுத்துகிறது?
இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்டக் கூட்டங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளைக் காட்டுகின்றன. பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே 2025-ம் ஆண்டு நடைபெற்ற அல்டிமேட் லீடர்ஷிப் பள்ளி (School of Ultimate Leadership (SOUL)) மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, பிரதமர் நரேந்திர மோடியை தனது "மூத்த சகோதரர்" மற்றும் "வழிகாட்டி" என்று பாராட்டினார். இது பூட்டானுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் பிணைப்பை பிரதிபலிக்கிறது. இது இந்தியாவின் அண்டைநாட்டுக்கு முன்னுரிமைக் கொள்கையின் (Neighbourhood-First Policy (NFP)) வெற்றியையும் காட்டுகிறது.
இந்தியாவின் தெற்காசிய இராஜதந்திரத்தை அண்டைநாட்டுக்கு முன்னுரிமைக் கொள்கை (NFP) 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி வருகிறது. 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், அதன் அண்டை நாடுகளுக்கான இந்த உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. புதிய பட்ஜெட்டில் வெளியுறவு அமைச்சகம் (MEA) ₹20,516 கோடியைப் பெற்றது. இதில், ₹5,483 கோடி வெளிநாட்டு உதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய புவிசார் அரசியல் மாறி வருகிறது. மேலும், தெற்காசியா நாடுகள் இராஜதந்திர ரீதியில் போட்டிகளை எதிர்கொள்கிறது. அதன் நெருங்கிய அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் பட்ஜெட்கான ஆதரவு அதன் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளைக் காட்டுகிறது. அண்டைநாட்டுக்கு முன்னுரிமைக் கொள்கையின் (NFP) முக்கிய யோசனை முதன்முதலில் 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நம்பிக்கை, வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் பிராந்திய கூட்டாண்மைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை இராஜதாந்திர ரீதியாக எதிர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தெற்காசியாவில் அதன் பிராந்திய அளவில் இராஜதந்திர ரீதியில் பூட்டானுக்கு இந்தியாவின் ஆதரவு எவ்வாறு பொருந்துகிறது? 2025-26 ஒன்றிய பட்ஜெட்டின் கீழ் இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியப் பகுதிகள் யாவை? இந்தியா தனது ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வாய்ப்பு எங்கே?
இந்தியாவின் அண்டை நாடுகளில் பூட்டான் மிகப்பெரிய பயனாளியாகும். இது ₹2,150 கோடியைப் பெறுகிறது. இது பூட்டானுடன் இந்தியாவின் வலுவான உத்திக்கான கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது. மாலத்தீவுகளுக்கான உதவி ₹600 கோடியாக அதிகரித்துள்ளது. மியான்மருக்கு ₹350 கோடியும், இலங்கைக்கு ₹300 கோடியும் கிடைக்கும். இது பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் கவனத்தைக் காட்டுகிறது.
இதற்கிடையில், வங்காளதேசத்திற்கான உதவி ₹120 கோடியாக உள்ளது. இது நிலையான ஈடுபாட்டைக் காட்டுகிறது. நேபாளத்திற்கான உதவி ₹700 கோடியாக உள்ளது, இது நிலைத்தன்மையையும் குறிக்கிறது. அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் ஆப்கானிஸ்தானுக்கு ₹100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
இந்திய பிராந்தியளவில் பூட்டான் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. மற்ற தெற்காசிய நாடுகள் இந்தியா மற்றும் சீனாவின் போட்டியிடும் நலன்களுக்கு இடையில் மாறிவிட்டன. ஆனால், பூட்டான் எப்போதும் இந்தியாவின் மிகவும் விசுவாசமான நட்பு நாடாகவே இருந்து வருகிறது. 2025 பட்ஜெட் ஒதுக்கீடு பழைய உறவுகளைப் பேணுவதைவிட அதிகம். இது இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கான ஒரு உத்தியின் நடவடிக்கையாகும். சீனா இமயமலையில் தனது இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில் இது மேற்கொள்ளப்படுகிறது.
பூட்டானின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க இந்தியா பூட்டானுக்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த உதவி பூட்டானின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் ஒரு இடையகமாக செயல்படுவதால் பூட்டான் முக்கிய நாடாகப் பார்க்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் ஒரு முக்கிய கூட்டணி நாடாக இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த உதவி காட்டுகிறது. நேபாளத்தில் திட்டங்கள், இலங்கையில் துறைமுக ஒப்பந்தங்கள் மற்றும் மாலத்தீவில் முதலீடுகள் மூலம் சீனா இப்பகுதியில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதால் இது மிகவும் முக்கியமானது.
கூடுதலாக, பூட்டானுடனான உறவுகளை தீவிரப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது பிராந்திய செல்வாக்கு சவாலற்றதாக இருப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், பொருளாதார மேம்பாடு மற்றும் சுத்தமான எரிசக்தி கூட்டாண்மைகளை மேம்படுத்துகிறது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (South Asian Association for Regional Cooperation(SAARC)), பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation(BIMSTEC)), மற்றும் வங்காளதேசம் பூட்டான் இந்தியா நேபாளம் (Bangladesh Bhutan India Nepal(BBIN)) போன்ற பலதரப்புத் தளங்களில் இந்தியாவுடன் பூட்டானின் தீவிரமான இராஜதந்திர ஒருங்கிணைப்பு, சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (Belt and Road Initiative (BRI)) சமநிலைப்படுத்தும் பிராந்திய கூட்டணிகளை உருவாக்கும் இந்தியாவின் திறனை வலியுறுத்துகிறது.
ஆசியாவின் இரண்டு பெரிய சக்திகளுக்கு இடையில் அமைந்துள்ள பூட்டான் தெற்காசிய விவகாரங்களில் சமமற்ற புவிசார் அரசியல் தன்மையையும் கொண்டுள்ளது. இந்தியாவின் சிலிகுரி காரிடாருக்கு வடக்கே அதன் இருப்பிடம், வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய நில இணைப்பு, இது சீனாவின் பிராந்திய லட்சியங்களுக்கு எதிரான ஒரு முக்கியமான இடையகமாக செயல்படுகிறது.
சர்ச்சைக்குரிய பீடபூமியில் சீனா தனது இருப்பை விரிவுபடுத்த முயன்றதால் 2017 டோக்லாம் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் இந்தியாவின் பாதுகாப்பில் பூட்டானின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அப்போதிருந்து, எல்லை மோதல்களைத் தீர்க்க சீனா பூட்டானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், பூட்டானை நெருக்கமாகக் கொண்டுவர சீனா பொருளாதார நன்மைகளை வழங்குகிறது.
2025-26ஆம் ஆண்டில் பூட்டானுக்கு இந்தியாவின் பட்ஜெட் உறுதிப்பாடு வெறும் பொருளாதார உதவி மட்டுமல்ல. இது ஒரு வலுவான புவிசார் அரசியல் செய்தியையும் அனுப்புகிறது. பூட்டானின் பொருளாதாரம் மற்றும் இராஜதந்திரத்தை ஆதரிப்பது சீனா இந்த முக்கியமான பிராந்தியத்திற்குள் நுழைவதைத் தடுக்க இந்தியாவுக்கு உதவுகிறது. இந்த ஆதரவு பூட்டானின் சுதந்திரத்தை வலுப்படுத்துகிறது. நேபாளம் மற்றும் இலங்கையில் காணப்படுவது போல், சீனாவின் பொருளாதார சலுகைகளுக்கு பூட்டான் விழுவதற்கான வாய்ப்பை இது குறைக்கிறது.
இந்தியாவும் பூட்டானும் நீண்டகால கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. அவர்களின் பிணைப்பு இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா-பூட்டான் வாணிபம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் முதன்முதலில் 1972-ல் கையெழுத்தானது மற்றும் பின்னர், கடைசியாக 2016-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தடையில்லா வர்த்தகத்தை அனுமதிக்கிறது. இது இந்தியாவை பூட்டானின் மிகப்பெரிய பொருளாதார நட்பு நாடாக மாற்றுகிறது.
இருதரப்பு வர்த்தகம் கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது 2014-15-ல் $484 மில்லியனில் இருந்து 2022-23-ல் $1.6 பில்லியனாக அதிகரித்துள்ளது. பூட்டானின் மொத்த வர்த்தகத்தில் இந்தியா 73% ஆகும். 2025-ம் ஆண்டில் ₹2,150 கோடி ஒதுக்கீடு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இது வர்த்தகம், முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பூட்டான் இந்தியாவைச் சார்ந்திருப்பதை அதிகரிக்கும்.
மோடி அரசாங்கம் இந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியின் பூட்டான் பயணத்தின் போது, பல முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் மங்தேச்சு நீர்மின் திட்டம் (Mangdechhu Hydropower Project), இஸ்ரோ தரை நில நிலையம் (ISRO Ground Earth Station) மற்றும் ரூபே கார்டு அமைப்பு (RuPay Card system) ஆகியவை அடங்கும்.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில், பூட்டான் மன்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த வருகைகள் நீர் மின்சாரம், டிஜிட்டல் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்தின. மார்ச் 2024-ம் ஆண்டில், பூட்டானின் பிரதமர் இந்தியாவுக்கு பயணம் செய்தார். இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் பொருளாதார உதவி, வர்த்தக வழித்தடங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதித்தனர்.
பூட்டானின் பொருளாதாரம் இந்தியாவை பெரிதும் சார்ந்துள்ளது. நீர் மின்சார ஏற்றுமதிகள் பூட்டானின் தேசிய வருவாயில் 40% மற்றும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆகும். பூட்டானின் நீர் மின்சாரத் துறையின் முக்கிய நிதியளிப்பாளராகவும், மேம்பாட்டாளராகவும் இந்தியா இருந்து வருகிறது. இந்தக் கூட்டாண்மை பூட்டானின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது மற்றும் இந்தியாவிற்கு குறைந்த விலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குகிறது. 2025 பட்ஜெட் நீர்மின்சார முதலீடுகளில் கவனம் செலுத்துகிறது. இது பிராந்தியத்தில் தூய்மையான எரிசக்தி மையமாக மாறும் பூட்டானின் இலக்கை ஆதரிக்கிறது.
பல ஆண்டுகளாக பூட்டான் முக்கியமான நீர்மின் திட்டங்களை உருவாக்க இந்தியா உதவியுள்ளது. இவற்றில் தலா (1020 மெகாவாட்), சுகா (336 மெகாவாட்), குறிச்சு (60 மெகாவாட்) மற்றும் மங்டெச்சு (720 மெகாவாட்) ஆகியவை அடங்கும். புனாட்சங்சு I & II (2,200 மெகாவாட்) மற்றும் கோலோங்சு (600 மெகாவாட்) போன்ற புதிய திட்டங்கள் பூட்டானின் இந்தியாவிற்கான மின்சார ஏற்றுமதியை அதிகரிக்கும். 2022ஆம் ஆண்டில், இந்த ஏற்றுமதிகள் ₹2,448 கோடி மதிப்புடையவை ஆகும்.
இந்த பரஸ்பர நன்மை பயக்கும் ஏற்பாடு பூட்டானின் பொருளாதாரம் வலுவாக இருக்க உதவுகிறது. இது குறிப்பாக, நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகரும்போது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா பூட்டானின் முக்கிய நட்பு நாடாகும். 2025-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் எல்லை சாலைகள், வர்த்தக வசதி மையங்கள் மற்றும் நவீன சோதனைச் சாவடிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லை தாண்டிய வர்த்தகத்தை மேம்படுத்தும். பூட்டானை பிராந்திய பொருளாதார கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க இந்தியாவும் செயல்பட்டு வருகிறது. BBIN (வங்காளதேசம்-பூடான்-இந்தியா-நேபாளம்) வழித்தடம் பூட்டான் ஏற்றுமதியாளர்கள் இந்திய துறைமுகங்களை எளிதாக அணுக உதவும்.
டிஜிட்டல் துறையில், பூட்டான் அதன் நிதித்தொழில்நுட்ப உள்கட்டமைப்பை (fintech infrastructure) உருவாக்க இந்தியா உதவுகிறது. எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை அதிகரிக்க ரூபே (RuPay) மற்றும் யுபிஐ கட்டண முறைகளைப் (UPI payment systems) பயன்படுத்துவதையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே நேரத்தில், பூட்டானில் போக்குவரத்து, இரயில் இணைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் இந்தியா முதலீடு செய்கிறது. இந்த முதலீடுகள் பூட்டான் இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக இணைந்திருப்பதை உறுதிசெய்கின்றன. மேலும், சீனா வழியாக வர்த்தக வழிகளைத் தேடுவதில்லை.
வரும் ஆண்டுகளில், இந்தியா புதிய ஒத்துழைப்புத் துறைகளில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இவற்றில் காலநிலை மீள்தன்மை, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் ஆகியவை அடங்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முன்னணியில் இருக்க பூட்டான் இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நிலைத்தன்மை இலக்குகளுடன் பொருந்துகிறது. இது எதிர்கால எல்லை தாண்டிய எரிசக்தி திட்டங்களுக்கான வாய்ப்புகளைத் திறக்கிறது.
2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் வெறும் பொருளாதார உறுதிப்பாட்டைவிட அதிகம். பூட்டான் இந்தியாவின் பிராந்திய ராஜதந்திரத்தின் முக்கிய பகுதியாக உள்ளது என்பது ஒரு உத்தியாகும். சீனா தெற்காசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. இந்த சூழலில், பூட்டானுக்கு இந்தியா அளிக்கும் வலுவான ஆதரவு இமயமலை இராச்சியத்தை நம்பகமான கூட்டணி நாடாகவும், பாதுகாப்பான இடைத்தரகராகவும், பொருளாதார நட்பு நாடாகவும் வைத்திருக்க உதவுகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்தியா-பூட்டான் உறவு செழிக்கும். பகிரப்பட்ட வளங்களின் செழிப்பு மற்றும் இராஜதந்திர திட்டமிடல் தெற்காசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்பதைக் காட்டும் வகையில், பிராந்திய ஒத்துழைப்புக்கு இது ஒரு முன்மாதிரியாகவும் அமையும்.