தற்போது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் (JPC) முன்மொழியப்பட்ட வக்ஃப் மசோதா மாற்றங்கள் குறித்து… -அபூர்வா விஸ்வநாத்

 இந்தியாவில் வக்ஃப் சொத்துகளை நிர்வகிக்கும் 1995-ம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தை (Waqf Act) திருத்துவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இது, வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதிலும், அத்தகைய சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதிலும் அரசாங்கம் பங்கு வகிக்க பெரும் மாற்றங்களை முன்மொழிந்தது.


வியாழக்கிழமை, ஒன்றிய அமைச்சரவை வக்ஃப் (திருத்தம்) மசோதா (Waqf (Amendment) Bill), 2024-ம் ஆண்டில் உள்ள 14 திருத்தங்களையும் அங்கீகரித்தது. இந்தத் திருத்தங்கள் கடந்த மாதம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் (Joint Parliamentary Committee (JPC)) முன்மொழியப்பட்டன. இது, மார்ச் 10-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1995-ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம், இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் மீதான நிர்வாகத்தை நிர்வகிக்கிறது. இதில், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவை தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதிலும் அரசாங்கத்திற்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும்.


இந்த மசோதா எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு (JPC) பரிந்துரைக்கப்பட்டது. ஜனவரி 27 அன்று, பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் (Jagadambika Pal) தலைமையிலான குழு, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் முன்மொழியப்பட்ட 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது. எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த 44 திருத்தங்களை இந்தக் குழு நிராகரித்தது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும், இப்போது ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்த திருத்தங்கள், மசோதாவின் மிகவும் சர்ச்சைக்குரிய சில பகுதிகளைக் குறிப்பிடுகின்றன.


நீட்டிக்கப்பட்ட காலக்கெடு


2024 மசோதா, ஒவ்வொரு வக்ஃப் மற்றும் அதில் அர்ப்பணிக்கப்பட்ட சொத்தையும் ஒரு ஒன்றிய போர்டல் மற்றும் தரவுத்தளத்தில் (central portal and database) பதிவு செய்வதை கட்டாயமாக்கியது. இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இந்தப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். தரவுத்தளத்தில் ஏதேனும் "அரசு சொத்து" (government property) என்று காணப்பட்டால், அது மாவட்ட ஆட்சியருக்கு மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். பின்னர், மாவட்ட ஆட்சியர் தங்களுக்குத் தேவையான விசாரணையை நடத்துவார். விசாரணைக்குப் பிறகு, அவர்கள் மாநில அரசுக்கு இதில் மேற்கொண்ட ஒரு சில அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.


ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) நாடாளுமன்ற உறுப்பினர் திலேஷ்வர் கமைத் பரிந்துரைக்கப்பட்ட திருத்தத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு (JPC) ஏற்றுக்கொண்டது. சில சந்தர்ப்பங்களில் வக்ஃப் சொத்தை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை இந்தத் திருத்தம் தளர்த்துகிறது. வக்ஃப் விவரங்களை போர்ட்டலில் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு முத்தவல்லி "போதுமான காரணத்தை" (sufficient cause) வழங்கினால் இது அனுமதிக்கப்படும்.


திருத்தப்பட்ட மசோதா, வக்ஃப் தீர்ப்பாயம் (Waqf Tribunal) சில வழக்குகளில் காலக்கெடுவை நீட்டிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், மசோதா "போதுமான" சூழ்நிலைகள் என்று கருதப்படுவதை வரையறுக்கவில்லை. மேலும், இதில் நீட்டிப்பு காலத்தையும் இது குறிப்பிடவில்லை. எனவே, தீர்ப்பாயம் அதன் சொந்தத் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.


பாஜக எம்பி டாக்டர் ராதா மோகன் தாஸ் அகர்வால் செய்த மற்றொரு திருத்தத்தையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு (JPC) ஏற்றுக்கொண்டது. 2024 மசோதாவில், முன்மொழியப்பட்ட சட்டம் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒன்றிய போர்ட்டலின் கீழ் பதிவு செய்யப்படாவிட்டால், வக்ஃப்களால் வழக்கு, மேல்முறையீடுகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் எதுவும் தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.


இதன் அடிப்படையில், வக்ஃப் அமைப்பானது போர்ட்டலில் பதிவு செய்யாவிட்டால், ஆக்கிரமிப்பு அல்லது வக்ஃப் நிலம் தொடர்பான ஏதேனும் தகராறு ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகும் உரிமையை இழக்கும். அகர்வால் முன்மொழிந்த திருத்தம் இந்த காலக்கெடுவை நீட்டிக்கிறது. வக்ஃப் ஆறு மாதகால பதிவுக்கான காலக்கெடுவை ஏன் தவறவிட்டது என்பதை விளக்கும் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தால், நீதிமன்றம் வழக்குகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.


மாவட்ட ஆட்சியரின் பங்கு


2024-ம் ஆண்டு மசோதா, வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு முன்பு இருந்த அதிகாரங்களை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியது.


சட்டத்திருத்தம் தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வக்ஃப் சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கச் சொத்தும் வக்ஃப் சொத்தாகக் கருதப்பட மாட்டாது என்று அந்த மசோதா கூறுகிறது. இருப்பினும், இந்த தீர்மானத்தை மாவட்ட ஆட்சியர்தான் எடுக்க வேண்டும், வக்ஃப் தீர்ப்பாயம் (Waqf Tribunal) அல்ல.


அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் வரை, சர்ச்சைக்குரிய சொத்து வக்ஃப் சொத்தாக கருதப்படாமல், அரசு சொத்தாக கருதப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


இந்த விதி குறித்து பல கவலைகள் எழுப்பப்பட்டன. இதில் மாநில அரசு வக்ஃப் தீர்ப்பாயத்தைக் கட்டுப்படுத்துவதும், வக்ஃப் மீதான தனது சொந்த வழக்கைத் தீர்ப்பதும் அடங்கும். மற்றொரு கவலை என்னவென்றால், சொத்து அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்ற அனுமானம் உள்ள வரை மட்டுமே.


தெலுங்கு தேசம் எம்பி லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு பரிந்துரைத்த நான்கு திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது. தகராறு தீர்வு தொடர்பான செயல்பாட்டில் மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக மாநில அரசு மூத்த அதிகாரியை நியமிக்க இந்தத் திருத்தங்கள் உதவுகின்றன.


"நியமிக்கப்பட்ட அதிகாரி" (designated officer) என்று அழைக்கப்படும் மூத்த அதிகாரி வருவாய்ப் பதிவேடுகளைப் புதுப்பிப்பார். சொத்து வக்ஃப் சொத்தாக இல்லாமல் அரசாங்கச் சொத்தாக அறிவிக்கப்பட்டால் இது நடக்கும்.


வக்ஃப் வாரியங்களில் பிரதிநிதித்துவம்


2024 மசோதா, முஸ்லிம் அல்லாத ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கலாம் என்று முன்மொழிந்தது. மாநில அளவிலான வக்ஃப் வாரியங்களுக்கு குறைந்தது இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்கவும் பரிந்துரைத்தது. இந்த நியமனங்களை மாநில அரசு மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.


பாஜக எம்பி அபிஜித் கங்கோபாத்யாய செய்த திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது. வக்ஃப் வாரியத்தில் உள்ள மாநில அரசு அதிகாரி ஒரு இணைச் செயலாளர் நிலை அதிகாரியாக இருக்க வேண்டும் என்று இந்தத் திருத்தம் கூறுகிறது. அந்த அதிகாரி வக்ஃப் தொடர்பான விஷயங்களைக் கையாள வேண்டும் (dealing with Waqf matters) என்று குறிப்பிட்டுள்ளது.


பாஜக மாநிலங்களை எம்.பி. குலாம் அலியின் மற்றொரு திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) ஏற்றுக்கொண்டது. வக்ஃப் தீர்ப்பாயத்தில் முஸ்லிம் சட்டம் (Muslim law) மற்றும் நீதித்துறை அறிவு பெற்ற ஒரு உறுப்பினரைச் சேர்ப்பதை கட்டாயமாக்க அவர் பரிந்துரைத்தார். வக்ஃப் மசோதாவின் முந்தைய பதிப்பு, தீர்ப்பாயத்தில் ஒரு பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைவராக இருக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. மாநில அரசின் இணைச் செயலாளர் நிலை அதிகாரியை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.




Original article:

Share: