பிரதிநிதித்துவத்தில் சமபங்கு தொடர்பான பிரச்சினை

 தொகுதி மறுவரையறை (delimitation) தொடர்பாக, தேசிய ஜனநாயக கட்சி அல்லாத கட்சிகளின் சென்னைக் கூட்டத்தின் விரிவான அறிக்கையில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும்.


தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் மற்றும் ஒடிசா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் (joint action committee (JAC)) சென்னை கூட்டத்தில் இருந்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதில் ஒன்று, இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறை மேலும் 25 ஆண்டுகளுக்கு முடக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றொன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) தொகுதி மறுவரையறைக்கு எதிரானது அல்ல என்றும், "நியாயமான மற்றும் சரியான செயல்முறையை" (fair and just process) மட்டுமே கோருகிறது என்றும், "நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்த மாநிலங்களைத் தங்களின் திறமையான மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் மூலம் தண்டிக்கக் கூடாது" என்றும் தெரிவித்தார். ஆனால், ஒன்றிய பாஜக எதிர்ப்பு முன்னணியில் NDA அல்லாத கட்சிகளை அணிதிரட்டுவதில் தொகுதி மறுவரையறைக்கான எதிர்ப்பு செயல்திட்டத்தின் வரம்பையும் சென்னையில் அமைக்கப்பட்ட கலந்துரையாடல் குழு அம்பலப்படுத்தியது. சமாஜ்வாதி கட்சி (SP), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) போன்ற முக்கிய NDA அல்லாத கட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்கவில்லை. உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அதிக மக்களவை இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது குறிப்பிடத்தக்கது.


இருந்தபோதிலும், தொகுதி மறுவரையறை செயல்முறை குறித்து தென்னிந்தியாவில் உள்ள பாதிப்புகளை கூட்டம் வெற்றிகரமாக எடுத்துக்காட்டியது. தற்போது வரை, ஒன்றிய அரசு இன்னும் தெளிவான திட்டத்தை அறிவிக்கவில்லை. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் தென்னிந்தியாவில் தொகுதி மறுவரையறை செயல்முறை தோல்வியடையாது என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் இது பிரதிநிதித்துவம் அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மக்களவையின் தொகுதி எண்ணிக்கையை  சரிசெய்யும் திட்டமானது 2026-ல் நிர்ணயிக்கப்பட்டது. இதில் புதிய நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள சிலவற்றை மாற்றுதல் அல்லது நீக்குதல் ஆகியவை அடங்கும். இது 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகிவிட்டது. மக்கள் தொகை முக்கிய அளவுகோலாக இருந்தால், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று அரசியல் முதன்மையாளர்கள்   தெரிவிக்கின்றனர். இது தென்னிந்தியா வைத்திருக்கும் இடங்களின் விகிதத்தைக் குறைக்கும். பிரதிநிதித்துவத்தில் இத்தகைய ஏற்றத்தாழ்வு கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதிக்கலாம். குறிப்பாக நிதி விஷயங்களில், அதிகார சமநிலையானது பலவீனமடைந்து வருகிறது.


அரசியல் பிரதிநிதித்துவத்தில் சமத்துவப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மக்கள் தொகை மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க வேண்டுமா என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கொள்கை அதற்கு சாதகமாக உள்ளது. ஆனால், சுதந்திரம் அடைந்ததில் இருந்து தொகுதி மறுவரையறைக்கான இந்திய அனுபவம் வேறுபட்டது. பிரத்தியேகமாக மக்கள்தொகையின் பார்வையில் மட்டுமே சிக்கலைப் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு பிராந்தியமும் பிரதிநிதித்துவப்படுவதில் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தனிப்பட்ட வாக்காளரைக் காட்டிலும் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் அலகுக்கு சிறப்புரிமை வழங்கும் கட்டமைப்பை நிர்வாகிகள் விரும்பினர். எனவே, இலட்சத்தீவு மற்றும் லடாக் சிறிய மக்கள் தொகையாக இருந்தாலும் மக்களவைத் தொகுதிகள் ஒப்பீட்டளவில் அவற்றிற்கு கிடைத்தன. கல்வி மற்றும் சுகாதாரத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து, மக்கள்தொகையை நிலைப்படுத்தவும், தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளுக்கு திறமையான பணியாளர்களை உருவாக்கவும், அவர்களின் பாரம்பரிய சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெறப்பட்ட தென் மாநிலங்களுக்கு அபராதம் விதிப்பதில் நியாயமற்ற நிலை உள்ளது.


தொகுதி மறுவரையறை விவாதம் இந்தியாவின் முன்னேற்றத்தை அச்சுறுத்தும் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை ஆகிய இரண்டு முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்காட்டுகிறது. வடக்கு-தெற்கு மாநில ஏற்றத்தாழ்வு (North-South disparity) தொடர்பான வேறுபாடு ஒரு சாதகமற்ற அரசியல் சண்டையாக மாறாமல் இருக்க, ஒன்றிய அரசு கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) குறிப்பிடுவதை கவனம் செலுத்த வேண்டும்.



Original article:

Share: