இந்தியாவில் வங்கிச் சேவையை, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) எவ்வாறு மேம்படுத்தியுள்ளது? -வச்சஸ்பதி சுக்லா, சந்தோஷ் குமார் தாஷ்

 அரசாங்கத்தின் முதன்மைத் திட்டம், அனைவருக்குமான நிதி உள்ளடக்கத்தை (universal financial inclusion) அடைய உதவியிருந்தாலும், வங்கிச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கணக்குகளைப் பயன்படுத்துவதில் சவால்கள் உள்ளன.


கடந்த காலங்களில் பல முன்முயற்சிகள் இருந்தபோதிலும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களில், அதிக ஆவணத் தேவைகள், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் குறைந்தபட்ச இருப்பு ஆணைகள் ஆகியவற்றின் காரணமாக நிதி உள்ளடக்கம் ஒரு சவாலாகவே இருந்தது. இந்த தடைகளைப் போக்க, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) திட்டத்தை அரசாங்கம் ஆகஸ்ட் 28, 2014 அன்று அனைவருக்குமான நிதி உள்ளடக்கத்தை அடையும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. வங்கிக் கணக்கு இல்லாத தனிநபர்கள் குறைந்தபட்ச இருப்புத் தேவை இல்லாமல் எந்த வங்கியிலும் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் திறக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. ஜனவரி 2015-க்குள், 12.5 கோடிக்கும் அதிகமான கணக்குகள் திறக்கப்பட்டன. ஜனவரி 2025 வரை, மொத்தம் 54.5 கோடியை எட்டியது. இதில் 61% பெண்கள் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த விரைவான வளர்ச்சி மக்களுக்கு சேமிப்பு, பணம் அனுப்புதல், கடன், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு சேவைகளை அணுக அனுமதித்துள்ளது. இதனால், வங்கிச் சேவை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.


சில தனிநபர்கள் பல கணக்குகளை வைத்திருப்பதால், வங்கிச் சேவைகளில் முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ள, குடும்பங்கள் அல்லது வங்கிக் கணக்குகளைக் கொண்ட தனிநபர்களின் விகிதத்தை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பகுப்பாய்வு முக்கியமானது. ஏனெனில், வங்கிகளுக்கான அணுகல் பரவலாக மாறுபடலாம். சில வீடுகளில், அனைத்து உறுப்பினர்களுக்கும் கணக்குகள் இருக்கலாம், மற்றவற்றில், யாருக்கும் கணக்குகள் இருக்காது. ஜனவரி-டிசம்பர் 2013 தரவுகளின்படி, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் (NSSO) 70-வது சுற்று ‘கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு’ (Debt and Investment Survey) குடும்ப அளவிலான தரவை வழங்கும் அதே வேளையில், 77-வது சுற்று (ஜனவரி-டிசம்பர் 2019) தனிப்பட்ட அளவிலான தரவை மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், ஒரு அலகுக்கான பதிவுத் தரவைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைக் கொண்ட குடும்பங்களின் சதவீதத்தை நாம் மதிப்பிடலாம்.


கிராமப்புறங்களில் குறைந்தது ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பங்களின் விகிதம் 2013-ல் 68.8%-லிருந்து 2019-ல் 97.8% ஆக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நகர்ப்புறங்களில், இந்த அதிகரிப்பு 79.5%-லிருந்து 96.9% ஆக அதிகரித்துள்ளது.


இது, 2019-ம் ஆண்டளவில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கான அணுகல் கிட்டத்தட்ட உலகளாவியதாகிவிட்டது என்பதைக் காட்டுகிறது. 2013 மற்றும் 2019-க்கு இடையில் வங்கி சேவைகள் கணிசமாக மேம்பட்டன. அதேநேரத்தில், மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் குறைந்தன. 2019-ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலத்திலும் 95 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்தன. வங்கி சேவைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு முதன்மையான PMJDY திட்டமே காரணமாக இருக்கலாம்.


மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு குறைந்தது


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டம் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாத மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு பயனளித்துள்ளது. அடிப்படை வங்கி சேவைகளுக்கான அணுகல் குறைவாக உள்ள கிராமப்புற மக்களைக் கொண்ட இந்த மாநிலங்களில், வங்கிக் கணக்குகள் உள்ள கிராமப்புற குடும்பங்களின் சதவீதத்தில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது. உதாரணமாக, 2013-2019-ம் ஆண்டில், பீகார் 55.1 சதவீதம், ஜார்க்கண்ட் 47.9 சதவீதம், மேற்கு வங்கம் 43.4 சதவீதம், ஒடிசா 38.4 சதவீதம், சத்தீஸ்கர் 38.3 சதவீதம், மத்திய பிரதேசம் 38 சதவீதம், மற்றும் அசாம் 37.1 சதவீதம் அதிகரித்தன. PMJDY-லிருந்து நகர்ப்புறத் துறையும் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைந்தது. 2019-ம் ஆண்டுக்குள், அனைத்து மாநிலங்களும் நகர்ப்புற குடும்பங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வங்கிக்கான அணுகலைப் பதிவு செய்துள்ளன. கேரளாவைத் தவிர, 2013-ம் ஆண்டில் அதிக அணுகலை எட்டியது. இந்த எண்ணிக்கைகள், வசதியான மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு இடையேயான வங்கி அணுகலில் உள்ள இடைவெளியைக் குறைப்பதில் PMJDY முக்கியப் பங்காற்றியதாகக் கூறுகின்றன.


நிதி உள்ளடக்கம் (Financial inclusion)


தனிநபர் அளவில், தேசிய மாதிரி கணக்கெடுப்பு (NSS) 77-வது சுற்றில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வங்கிச் சேவைகள் ஒப்பீட்டளவில் சமமாக அணுகக்கூடியதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது, கிராமப்புறங்களில் 84.4 சதவீதம் மற்றும் நகர்ப்புறங்களில் 85.2 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு வங்கிக் கணக்கையாவது கொண்டுள்ளனர். NSS 78வது சுற்று பல குறிகாட்டி கணக்கெடுப்பு (Multiple Indicator Survey) 2021-க்குள், வங்கிக் கணக்குகள் கொண்ட தனிநபர்களின் விகிதம் 89.4 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 89.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 89.6 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 94.6 சதவீதமாக அதிகரித்தது. கிராமப்புறங்களில் 94.6 சதவீதம்  மற்றும் நகர்ப்புறங்களில் 94.4 சதவீதம் ஆகும். NSS 79-வது சுற்று விரிவான வருடாந்திர மட்டு கணக்கெடுப்பின்படி, இந்த விகிதம் ஆண்களுக்கு 96.2 சதவீதமாகவும், பெண்களுக்கான 92.8 சதவீதமாகவும் இருந்தது .


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சண்டிகர் 100% வங்கிக் கணக்குக்கான பாதுகாப்பை அடைந்துள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 21 மாநிலங்களில் 95%-க்கும் அதிகமான தனிநபர்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்தனர். ஆறு மாநிலங்களில் மட்டுமே 90%-க்கும் குறைவான பாதுகாப்பு இருந்தது. இந்த எண்ணிக்கைகள் இந்தியா தனிநபர் நிலையில் நிதி உள்ளடக்கத்தை கிட்டத்தட்ட அடைந்துவிட்டதைக் காட்டுகின்றன.


குறிப்பிடத்தக்க சாதனைகள்


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ், வைப்புத்தொகையாக மார்ச் 2015-ல் ₹15,670 கோடியிலிருந்து மார்ச் 2024-ல் ₹2,32,502 கோடியாக அதிகரித்துள்ளது. இது 1,380 சதவீத வளர்ச்சி அல்லது கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (compound annual growth rate (CAGR)) 40 சதவீதமாக உள்ளது. ஒரு கணக்கிற்கான சராசரி வைப்புத்தொகையிலும் இது தெளிவாகத் தெரிகிறது. இது ₹1,065 இலிருந்து ₹4,467 ஆக உயர்ந்துள்ளது. இது, 20 சதவீத CAGR உடன் 4.2 மடங்கு உயர்வு ஆகும்.


விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (MasterCard) போன்ற உலகளாவிய அமைப்புகளுக்கு மாற்றாக உள்நாட்டு கட்டண வலையமைப்பை நிறுவுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, டிசம்பர் 2024 வரை PMJDY திட்டத்தின் கீழ் 37 கோடிக்கும் அதிகமான RuPay கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. RuPay PMJDY கடன் அட்டைகளின் குறிப்பிடத்தக்க அம்சம், தனிப்பட்ட விபத்து மரணம் மற்றும் மொத்த ஊனமுற்றோர் பாதுகாப்பு ₹2 லட்சம் வரை காப்பீட்டை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் சேமிப்பு அல்லது வைப்புத்தொகை பற்றியது மட்டுமல்ல, இது சாதாரண மனிதர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உதவியுள்ளது. 2018-19ல் 2,338 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2023-24ல் 16,443 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ₹34 லட்சம் கோடி நேரடி பலன் பரிமாற்றங்கள் PMJDY கணக்குகள் மூலம் செயல்படுத்தப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம் இந்தியாவில் அரசுத் திட்டங்களில் கசிவுகளைக் குறைக்க உதவுகிறது.


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டமானது, மக்களை வங்கி மூலமாக சேமிக்க உதவுவது மட்டுமல்லாமல், நிதி வரலாறு இல்லாதவர்களுக்கு கடன் அணுகலையும் வழங்குகிறது. அவர்களின் சேமிப்பு முறைகளைக் காண்பிப்பதன் மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, முத்ரா கடன் அனுமதிகள் 2018-19 முதல் 2023-24 வரை 9.8% கூட்டு வருடாந்திர விகிதத்தில் வளர்ந்தன. இந்தக் கடன் அணுகல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இது தனிநபர்கள் தங்கள் வருமானத்தை வளர்க்க அதிகாரம் அளிக்கிறது.


நிலையான டிஜிட்டல் பங்கீடு


தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு இணையவழி வங்கி பரிவர்த்தனைகளை கணிசமாக ஊக்குவித்துள்ளது. இது பணமில்லா பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் கருப்பு பணம் மற்றும் ஊழலைக் குறைப்பதற்கும் இது முக்கியமானது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு 79-வது சுற்று விரிவான வருடாந்திர மாடுலர் சர்வேயின்படி (Comprehensive Annual Modular Survey), 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 37.8 சதவீதம் பேர் இணையவழி வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய முடிந்தது. இருப்பினும், பாலின வேறுபாடுகளாக 25.2 சதவீத பெண்கள் மற்றும் 47.1 சதவீத ஆண்கள் இணையவழி வங்கித் திறனைக் கொண்டுள்ளனர். கிராமப்புறங்களுடன் (30 சதவீதம்) ஒப்பிடும்போது நகர்ப்புறங்கள் அதிக தேர்ச்சியை (50.6 சதவீதம்) காட்டுகின்றன.


NSS 79-வது சுற்று கணக்கெடுப்பு இணையவழி வங்கித் திறன்களில் (online banking capabilities) கணிசமான மாநில அளவிலான ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டியது. சண்டிகர் மற்றும் தெலுங்கானா மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணையவழி வங்கி பரிவர்த்தனைகளை நடத்தும் திறன் கொண்டவர்கள் என்று தெரிவித்தாலும், பல மாநிலங்கள் கணிசமாக பின்தங்கி உள்ளன. இதற்கான, புள்ளிவிவரங்கள் 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளன. உதாரணமாக, திரிபுரா 12.8 சதவீதம், மேகாலயா 17.9 சதவீதம், சத்தீஸ்கர் 19.1 சதவீதம், மேற்கு வங்கம் 21.5 சதவீதம், உத்தரபிரதேசம் 24.4 சதவீதம், அஸ்ஸாம் 27 சதவீதம், ஜார்கண்ட் 27.4 சதவீதம், ஒடிசா 29.2 சதவீதம், குஜராத் 2.8 சதவீதம், 29.7 சதவீதம் இது டிஜிட்டல் நிதி கல்வியறிவின் சீரற்ற முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் டிஜிட்டல் பங்கீட்டைத் தீர்ப்பதற்கான இலக்குகளின் தலையீடுகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


முன்னோக்கி செல்லும் வழி


PMJDY வங்கிச் சேவைக்கான அணுகலை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு கணக்கையாவது வைத்திருக்கும். இருப்பினும், உலகளாவிய Findex தரவுத்தளம் 2021 இந்தியாவில் 35 சதவீத கணக்குகள் செயலற்ற நிலையில் இருப்பதாகக் காட்டுகிறது. 2023-ம் ஆண்டு ஆய்வறிக்கையில், அகந்த் ஜே திவாரி மற்றும் கிரஹாம் ஏ.என். ரைட் ஆகியோர் பல PMJDY கணக்குகளைத் திறப்பது ஒரு முக்கியக் காரணம் என அடையாளம் கண்டுள்ளனர். அதே சமயம், மானுவேலா குந்தரின் 2017-ம் ஆண்டு ஆய்வில், ‘இந்தியாவில் நிதிச் சேர்க்கையின் முன்னேற்றம்: பல அலைகள் கணக்கெடுப்புத் தரவுகளின் நுண்ணறிவு’ (The Progress of Financial Inclusion in India: Insights from Multiple Waves of Survey Data), PMJDY கணக்கு வைத்திருப்பவர்களில் 51% பேர் PMJDY அல்லாத கணக்குகளையும் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது.


அதிகமான அளவில், மக்கள் கணக்குகளை வைத்திருந்தாலும், வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் சவால்கள் உள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை, பின்தங்கிய பகுதிகளில் கல்வியறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன. இதன் மூலம், விழிப்புணர்வை உருவாக்குதல், நிதிக் கல்வி, நிதி தொழில்நுட்ப கூட்டாண்மைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் போன்ற இலக்குக்கான தீர்வுகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.


இந்தியாவில் நிதி உள்ளடக்கம் பொருளாதார வளர்ச்சியை இயக்கும். இதை அடைய, கணக்கு செயலற்ற தன்மையைக் குறைத்து, மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை திறன்களை வளர்க்க உதவுவது முக்கியம். இது உள்ளடக்கிய வங்கியின் நன்மைகளை அதிகரிக்கும், நிதி பங்கேற்பை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்.


எழுத்தாளர்கள், சர்தார் படேல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனம் (SPIESR) மற்றும் கிராமப்புற மேலாண்மை நிறுவனம், ஆனந்த் (IRMA) ஆகியவற்றில் உதவிப் பேராசிரியர்கள் ஆவர்.



Original article:

Share: