அருமண் தனிமங்கள் (Rare Earth Elements) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 உக்ரைன் மற்றும் அமெரிக்க போர்க்கால உதவிக்கான இழப்பீடாக உக்ரைனின் அரிய மண் தாதுக்களிலிருந்து $500 பில்லியன் மதிப்புள்ள லாபத்தைப் பெறுவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் திட்டம், இந்த வளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை  அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோருக்கு இடையேயான சமீபத்திய சந்திப்பைத் தொடர்ந்து, அருமண் தனிமங்கள் (Rare Earth Elements) ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஜெலென்ஸ்கி அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும் என்ற யுகம் அதிகரித்து வருகிறது. இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்த தனிமங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.


முக்கிய அம்சங்கள்:


1. உலகின் முக்கியமான மூலப்பொருட்களில் 5% உக்ரைனில் உள்ளது. இது 19 மில்லியன் டன் கிராஃபைட் இருப்புக்களைக் கொண்டுள்ளது. இவை மின்சார வாகன பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பேட்டரிகளை தயாரிப்பதற்கான முக்கியப் பொருளான ஐரோப்பாவின் லித்தியம் வைப்புகளில் மூன்றில் ஒரு பங்கையும் அந்நாடு கொண்டுள்ளது.


2. பிப்ரவரி 2021-ல் ரஷ்ய போருக்கு முன்பு உக்ரைன் உலகின் டைட்டானியத்தில் 7%-ஐ உற்பத்தி செய்தது. விமானங்கள் மற்றும் மின் நிலையங்களில் டைட்டானியம் பயன்படுத்தப்படுகிறது. பிபிசி அறிக்கைகளின்படி, உக்ரைனில் அருமண் தனிமங்கள் (Rare Earth Elements) அதிகமாக உள்ளன.


அருமண் தனிமங்கள் (Rare Earth Elements) என்றால் என்ன?


1. அருமண் தனிமங்கள் (Rare Earth Elements (REEs)) என்பது கால அட்டவணையில் காணப்படும் 17 வேதியியல் தனிமங்களின் குழுவாகும். அவற்றில் 15 லாந்தனைடுகள், ஸ்காண்டியம் (Sc) மற்றும் யட்ரியம் (Y) ஆகியவை உள்ளன. இவை பெரும்பாலும் லாந்தனைடுகளுடன் காணப்படுகின்றன மற்றும் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன. லேசான அருமண் தனிமங்கள் (light RE elements (LREE)) மற்றும் கன அருமண் தனிமங்கள் (heavy RE elements (HREE)) என பிரிக்கப்படுகின்றன.


2. சீரியம், டிஸ்ப்ரோசியம், எர்பியம், யூரோபியம், கேடோலினியம், ஹோல்மியம், லாந்தானம், லுடேசியம், நீயோடிமியம், பிராசியோடிமியம், புரோமெதியம், சமாரியம், ஸ்காண்டியம், டெர்பியம், துலியம், இத்டர்பியம், இத்டிரியம் ஆகியவை புவியின் 17 அரிய தனிமங்கள் ஆகும்.


அருமண் தனிமங்கள் ஏன் முக்கியம்?


1. மொபைல் போன்கள், கணினி ஹார்டு டிரைவ்கள், மின்சார மற்றும் கலப்பின வாகனங்கள், குறைக்கடத்திகள், பிளாட்ஸ்கிரீன் டிவிகள் மற்றும் மானிட்டர்கள் மற்றும் உயர்நிலை மின்னணுவியல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நுகர்வோர் தயாரிப்புகளில் REE-கள் ஒரு அத்தியாவசியமான - பெரும்பாலும் சிறியதாக இருந்தாலும் முக்கியமான கூறுகளாகும். அருமண் தனிமங்கள் விண்வெளி விண்கல கூறுகள், ஜெட் என்ஜின் டர்பைன்கள் மற்றும் ட்ரோன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.


2. ஸ்காண்டியம் (Scandium) தொலைக்காட்சிகள் மற்றும் ஃப்ளோரசன்ட் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், யட்ரியம் (yttrium) முடக்கு வாதம் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில் உள்ள அருமண் தனிமங்கள் பற்றி


இந்தியாவில் லாந்தனம், சீரியம், நியோடைமியம், பிரசியோடைமியம் மற்றும் சமாரியம் போன்ற சில அருமண் தனிமங்கள் உள்ளன. இருப்பினும், டிஸ்ப்ரோசியம், டெர்பியம் மற்றும் யூரோபியம் போன்ற சில கனரக அருமண் தனிமங்கள் இந்தியாவில் பிரித்தெடுக்கக்கூடிய அளவில் இல்லை. எனவே, கனரக அருமண் தனிமங்களுக்கு (heavy RE elements (HREE)) சீனா போன்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. இது அருமண் தனிமங்களின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய உற்பத்தியில் 70% பங்கைக் கொண்டுள்ளது.


தேசிய முக்கியமான கனிமங்கள் திட்டம் (National Critical Minerals Mission (NCMM))


1. ஜனவரி 29, 2025 அன்று, ₹16,300 கோடி பட்ஜெட்டில் தேசிய முக்கியமான கனிமங்கள் திட்டத்தை  அரசாங்கம் அங்கீகரித்தது. இந்தப் பணி இந்தியாவிற்குள்ளும், கடல்கடந்த இடங்களிலும் முக்கியமான கனிமங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட பொருட்களிலிருந்து கனிமங்களை ஆராய்தல், சுரங்கப்படுத்துதல், பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட அனைத்து நிலைகளையும் NCMM உள்ளடக்கும்.


2. இந்த பணி நிலத்திலும் கடலோரத்திலும் முக்கியமான கனிமங்களைத் தேடுவதை அதிகரிக்கும். இந்த கனிமங்களைச் சுரங்கப்படுத்துவதற்கான ஒப்புதல் செயல்முறையையும் இது துரிதப்படுத்தும்.


முக்கியமான கனிமங்கள் என்றால் என்ன?


பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு கனிமங்கள் முக்கியமானவை. இந்த கனிமங்கள் கிடைப்பது கடினமாக இருந்தால் அல்லது ஒரு சில இடங்களில் பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்டால், அது விநியோக சிக்கல்களை ஏற்படுத்தும். லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் மற்றும் புவியின் அறிய தனிமங்கள் அடங்கும். உயர் தொழில்நுட்ப மின்னணுவியல், தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில்களுக்கு இந்த கனிமங்கள் தேவைப்படுகின்றன.


3. இந்த பணிக்கு தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளைக்கு (National Mineral Exploration Trust (NMET)) அரசு கூடுதலாக ₹5,600 கோடியை வழங்கும். இந்த பணம் மற்ற நாடுகளிலிருந்து கனிமங்களை வாங்குவதில் உள்ள அபாயங்களை சரிசெய்யவும், இந்தியாவிற்கு வெளியே ஆய்வுகளை ஆதரிக்கவும் உதவும்.


4. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Anusandhan National Research Foundation (ANRF)) மற்றும் பிற ஆராய்ச்சி திட்டங்களிலிருந்து ₹1,000 கோடியை தேசிய கனிமப் பொருட்கள் மையம் பெறும். இது அரசாங்க பட்ஜெட்டில் இருந்து ₹2,600 கோடியையும் பெறும். உலக வங்கியின் நெகிழ்ச்சி மற்றும் உள்ளடக்கிய விநியோகச் சங்கிலி மேம்பாடு (Resilient and Inclusive Supply-Chain Enhancement (RISE)) முன்முயற்சியின் மூலம் NCMM-க்கு வெளிப்புற நிதியுதவியை சுரங்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.


5. அரசாங்கம் நான்கு கனிம பதப்படுத்தும் பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பெரிய முறைசாரா மறுசுழற்சி துறையை மேம்படுத்த, முக்கியமான கனிமங்களை மறுசுழற்சி செய்வதற்கு தனி விதிகளையும் உருவாக்கும். கனிம வளம் மிக்க நாடுகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்கி, வர்த்தக ஒப்பந்தங்களில் முக்கியமான கனிமங்களைச் சேர்ப்பதை NCMM நோக்கமாகக் கொண்டுள்ளது.


6. 2023-ஆம் ஆண்டில், லித்தியம், கோபால்ட், நிக்கல், கிராஃபைட், தகரம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட 30 முக்கியமான கனிமங்களை ஒன்றிய அரசு பட்டியலிட்டது. இந்த கனிமங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானவை.


Original article:

Share: