சஃபேமா & டைகர் மேமன் : 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியிடமிருந்து 14 சொத்துக்களை அரசாங்கம் எவ்வாறு எடுத்துக் கொண்டது? -சதாப் மோதக்

 

SAFEMA -  Smugglers and Foreign Exchange Manipulators (Forfeiture of Property) Act


கடத்தல் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் அந்நியச் செலாவணியைக் கையாளுதல் மற்றும் கடத்தலைத் தடுக்க 1976-ல் கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்தை பறிமுதல் செய்தல்) சட்டம் (SAFEMA) இயற்றப்பட்டது.


34 ஆண்டுகளுக்கு முன்பு, 1993 மும்பை குண்டுவெடிப்புகளில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனுக்குச் சொந்தமான 14 விதமான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால், அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடுகிறது.


கடந்த வாரம், மும்பையில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம் இந்த சொத்துக்களை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது.


சட்டவிரோதமாகவும் சட்டத்திற்கு முரணாகவும் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்தை பறிமுதல் செய்தல்) சட்டம் (SAFEMA), 1976-ன் கீழ் ஒன்றிய அரசுக்குப் பறிமுதல் செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.


இதற்கான சட்டம் என்ன? மேமனின் வழக்கில் இது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?




சட்டம் (The law)


சொத்து பறிமுதல் (Forfeiture of property) என்பது குற்றவியல் சட்டத்தில், குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இது ஒரு பொதுவான தண்டனையாகும். 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 126, ஒரு நட்பு நாட்டிற்கு எதிராகப் போரை நடத்துபவர்களுக்கு அல்லது போர் புரிபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களுடன், சொத்து பறிமுதல் செய்வது ஒரு தண்டனையாக அனுமதிக்கிறது.


கடத்தல் மற்றும் அந்நியச் செலாவணியை தவறாகப் பயன்படுத்துவதை பறிமுதல் செய்திட SAFEMA சட்டம் 1976-ல் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான விதிகளும் இதில் உள்ளன. இந்தச் சட்டம், இந்த நபர்கள் சொத்துக்களை வாங்குவதற்கு பெரும்பாலும் வரி அல்லது பிற சட்ட மீறல்களிலிருந்து சட்டவிரோதமாக சம்பாதிப்பதற்கு இதைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகிறது. இந்த சொத்துக்கள் அவர்களின் சொந்தப் பெயர்களிலோ அல்லது அவர்களின் உறவினர்கள், கூட்டாளிகள் அல்லது நெருங்கிய தொடர்புகளின் பெயர்களிலோ இருக்கலாம்.


குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக சொத்து வைத்திருப்பவர்கள் மீது இந்தச் சட்டம் பரந்த வலையை வீசுகிறது. அதாவது, ஒரு நபரின் மனைவியிடமிருந்து; நபரின் சகோதரர் அல்லது சகோதரி; நபரின் மனைவியின் சகோதரர் அல்லது சகோதரி; நபரின் நேரடி மூதாதையர்கள் அல்லது சந்ததியினர் மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட நபர்களின் வாழ்க்கைத் துணை அல்லது நேரடி சந்ததியினர் ஆகியோர் அடங்குவர்.


சுங்கச் சட்டம், அந்நியச் செலாவணியைப் பாதுகாத்தல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Customs Act and the Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act), 1974 ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்ற அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள எவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்.


சட்டம் ஒரு தகுதிவாய்ந்த அதிகாரியால் சொத்துக்களை தடுத்து வைக்க வழங்குகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஒரு அறிவிப்பு வழங்கப்படுகிறது. சொத்துக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் இணைக்கப்படவில்லை என்பதை விளக்க இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. சட்டத்திற்குப் புறம்பாக சொத்துக்கள் வாங்கப்பட்டதாக ஆணையம் கண்டறிந்தால், அந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது சொத்துகளை பறிமுதல் செய்து ஒன்றிய அரசால் கையகப்படுத்தலாம். SAFEMA சட்டம் அதன் சொந்த அரை-நீதித்துறை மேல்முறையீட்டு அமைப்பையும் (quasi-judicial Appellate Body) கொண்டுள்ளது. இது பறிமுதல் உத்தரவுகளுக்கு எதிராக ஒரு நடைமுறைப் பாதுகாப்பாக செயல்படுகிறது.


மேமன் வழக்கு


1992-ம் ஆண்டில், கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் டைகர் மேமன் என்ற இப்ராஹிம் அப்துல் ரசாக் மேமன் மீது மகாராஷ்டிர அரசு வழக்குத் தொடர்ந்தது.


1993-ல், SAFEMA சட்டத்தின் கீழ் அதிகாரிகள் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். 1994-ம் ஆண்டில், மேமன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், தடா சட்டத்தின் (TADA law) கீழ் ஒரு சிறப்பு நீதிமன்றம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி இந்த சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றார்.


மார்ச் 12, 1993 அன்று, பம்பாயில் (இப்போது மும்பை) பல குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சதிகாரர்கள் டைகர் மேமன் மற்றும் சர்வதேச குற்றவாளி தலைமறைவான தாவூத் இப்ராஹிம் ஆவர்.




நீதிமன்ற உத்தரவு


இந்த ஆண்டின் தொடக்கத்தில், SAFEMA- சட்டத்தின் கீழ் உள்ள தகுதிவாய்ந்த ஆணையமானது, TADA நீதிமன்றத்தை அணுகியது. 1993-ம் ஆண்டில், சில சொத்துக்களை பறிமுதல் செய்து ஒன்றிய அரசுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அது கூறியது. பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் சவால் செய்தனர். இருப்பினும், இந்த மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. இதன் அடிப்படையில், சொத்துக்கள் இப்போது ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆணையம் வாதிட்டது.


இந்த சொத்துக்களை பறிமுதல் செய்த 1994-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்யுமாறும் அது நீதிமன்றத்தைக் கோரியது. இதேபோன்ற உத்தரவு ஆகஸ்ட் 2024-ல் பிறப்பிக்கப்பட்டது. இந்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பிறகு, சிறப்பு நீதிமன்றம் 1994-ம் ஆண்டு பறிமுதலுக்கான உத்தரவை ரத்து செய்தது. பின்னர் சொத்துக்களை ஒன்றிய அரசுக்கு மாற்ற உத்தரவிட்டது.


சொத்துக்களின் பட்டியல்


இந்த வழக்கில் 2015-ல் தூக்கிலிடப்பட்ட டைகர் மேமன், அவரது இளைய சகோதரர் யாகூப் மேமன் உட்பட மேமன் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சொந்தமான சொத்துக்கள் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தன. சில சொத்துக்கள் மாஹிமில் உள்ள அல் ஹுசைனி கட்டிடத்தில் இருந்தன. அங்கு குண்டுவெடிப்புக்கு முன்பு குடும்பத்தினர் தப்பிச் சென்றனர். மற்றவை குர்லா, டோங்ரி மற்றும் தெற்கு மும்பையில் உள்ள மனிஷ் மார்க்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் பிற இடங்களில் இருந்தன.


Original article:
Share: