தற்போதைய செய்தி : மூன்று ஆண்டுகளுக்கும் மேலான கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) உறுப்பு நாடுகள் கடந்த வாரம் எதிர்கால தொற்றுநோய்களை சிறப்பாகச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் வரைவை ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் மே மாதம் நடைபெறும் உலக சுகாதார சபையில் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள் :
• அமெரிக்கா இல்லாமல் செய்யப்பட்ட இந்த தொற்றுநோய் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பின் 75 ஆண்டுகால வரலாற்றில் இரண்டாவது சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும். முதலாவது 2003-ல் புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (tobacco control treaty) ஆகும்.
• உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பான உலகத்தை நோக்கிச் செயல்படுவதில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அழைத்தார்.
• உலகளாவிய தொற்றுநோய் ஒப்பந்தத்திற்கான பேச்சுக்கள் டிசம்பர் 2021-ல் ஓமிக்ரான் மாறுபாடு பரவி வந்தபோது தொடங்கியது. அந்த நேரத்தில், தடுப்பூசி தொழிற்சாலைகளைக் கொண்ட நாடுகள் மில்லியன் கணக்கான டோஸ்களை பதுக்கி வைத்திருந்தன. அதே, நேரத்தில் தடுப்பூசி உற்பத்தி இல்லாத ஏழை நாடுகள் குறைந்த அணுகலைக் கொண்டிருந்தன.
• COVID-19 தடுப்பூசிகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுடன் மிகவும் நியாயமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று 2022ஆம் ஆண்டு ஆய்வு காட்டுகிறது. இந்த வைரஸ் ஏற்கனவே உலகளவில் 7 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
• தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் பதிலளித்தலுக்கான தன்னிச்சையான குழுவால் வெளியிடப்பட்ட 2021 அறிக்கை, "மோசமான ராஜதந்திர தேர்வுகள், ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க விருப்பமின்மை மற்றும் ஒருங்கிணைக்கப்படாத அமைப்பு ஆகியவற்றின் கலவையானது ஒரு நச்சு கலவையை உருவாக்கியது. இது தொற்றுநோயை ஒரு பேரழிவு தரும் மனித நெருக்கடியாக மாற்ற அனுமதித்தது என்று கூறியது.
உங்களுக்குத் தெரியுமா?
• வரைவு ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று "நோய்க்கிருமி அணுகல் மற்றும் நன்மை பகிர்வு" அமைப்பு ஆகும். இது மருந்து நிறுவனங்களுக்கு நோய்க்கிருமி மாதிரிகள் மற்றும் மரபணு வரிசை முறைகள் போன்ற அறிவியல் தரவுகளை அணுக அனுமதிக்கிறது. இதற்கு ஈடாக ஒரு தொற்றுநோய் காலத்தில் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்களை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கு ஈடாக, நேச்சர் இதழில் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
• வரைவு ஒப்பந்தம், உற்பத்தியாளர்கள் தங்கள் தடுப்பூசி, சிகிச்சை மற்றும் நோயறிதல் உற்பத்தியில் 10%ஐ உலக சுகாதார அமைப்பிற்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது. பின்னர், மற்றொரு 10% மலிவு விலையில் விற்கப்பட வேண்டும்.
• மேலும், வளரும் நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிக்க உதவும் தொழில்நுட்பம் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வதை உறுப்பு நாடுகள் "ஊக்குவிக்க வேண்டும், இல்லையெனில் எளிதாக்க வேண்டும் அல்லது ஊக்குவிக்க வேண்டும்" என்று வரைவு ஒப்பந்தம் கூறுகிறது.
• தொற்றுநோய்களின்போது உருவாக்கப்பட்ட மருந்துகள் அல்லது நோயறிதல்களுக்கு "சரியான மற்றும் சமமான அணுகலை" உறுதி செய்வதற்காக, நாடுகள் பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு நிபந்தனைகளை விதிப்பதற்கான தேசிய கொள்கைகளை உருவாக்க வேண்டும்.