தற்போதைய செய்தி : இந்திய புலனாய்வு அமைப்புகளின் ஒப்படைப்பு கோரிக்கையைத் தொடர்ந்து, தப்பியோடிய நகைக்கடைக்காரர் மெஹுல் சோக்ஸி (65) ஆண்ட்வெர்ப்பில் கைது செய்யப்பட்டார் என்பதை பெல்ஜியம் அரசாங்கம் திங்களன்று உறுதிப்படுத்தியது.
முக்கிய அம்சங்கள் :
• பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சோக்ஸி, 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினார்.
• மெஹுல் சோக்ஸி ஏப்ரல் 12, 2025 சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்பதை பெல்ஜிய கூட்டாட்சி பொது நீதித்துறை உறுதிப்படுத்தியது. மேலும், நீதித்துறை நடவடிக்கைகளை எதிர்பார்த்து அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது சட்ட ஆலோசகரை அணுகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பெல்ஜிய நீதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
• இந்தியாவும் பெல்ஜியமும் நீண்டகால ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து நடைமுறைகள் மற்றும் ஆவணப் பணிகளை முடிக்க ஒன்றிய புலனாய்வுப் பிரிவின் (Central Bureau of Investigation (CBI)) மூன்று முதல் நான்கு மூத்த அதிகாரிகள் கொண்ட குழு பெல்ஜியத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
• மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையில் கடன் மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 2018-ஆம் ஆண்டு ஒன்றிய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றால் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் சோக்ஸி, அவரது மருமகன் மற்றும் தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர்.
• தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிரவ் மோடி, அமலாக்க இயக்குநரகம் மற்றும் ஒன்றிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் 2019-ல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதிலிருந்து லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து போட்டியிடுகிறார்.
• அமலாக்க இயக்குநரகம் மற்றும் ஒன்றிய புலனாய்வுப் பிரிவு ஆகிய இரண்டும் சோக்ஸி மற்றும் நிரவ் மோடிக்கு எதிராக பல குற்றப்பத்திரிகைகள் மற்றும் வழக்குப் புகார்களை தாக்கல் செய்துள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
• இந்தியா முதன்முதலில் 1901-ல் பெல்ஜியத்துடன் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் நிதிக் குற்றங்கள் உட்பட "இரட்டைக் குற்றவியல்" (dual criminality) அடிப்படையில் ஒப்படைக்க அனுமதிக்கிறது. இரட்டைக் குற்றம் என்பது, ஒருவர் செய்த குற்றம் இரு நாடுகளிலும் சட்டவிரோதமாகக் கருதப்பட்டால் மட்டுமே அவரை நாடு கடத்த முடியும் என்பதாகும்.
• எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம், இந்தியாவிற்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் அரசியல் குற்றங்களுக்காகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காக அந்த நபர் குறிவைக்கப்படுகிறார் என்பதை நிரூபிக்க முடிந்தாலோ அவரை நாடு கடத்த அனுமதிக்காது. மேலும், இரண்டு மாதங்களுக்குள் இந்தியா போதுமான ஆதாரங்களை வழங்கவில்லை என்றால், அந்த நபரை விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறது.
• 2020-ஆம் ஆண்டில், தப்பியோடியவர்கள் தொடர்பான வழக்குகளில் இணைந்து பணியாற்ற இந்தியாவும் பெல்ஜியமும் மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
• மெஹுல் சோக்ஸியை விசாரித்து வரும் இந்தியாவின் ஒன்றிய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குநகரத்தின் கோரிக்கைகளுக்குப் பிறகு, மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். நாடு கடத்தல் தொடங்கியதும், இந்த நிறுவனங்களின் குழுக்கள் பெல்ஜிய சட்டத்தின் கீழ் வழக்கை உருவாக்க பெல்ஜியத்திற்குச் செல்லும்.
• இருப்பினும், சோக்ஸி எந்த நேரத்திலும் இந்தியாவுக்குத் திரும்புவது சாத்தியமில்லை. குறிப்பாக, நாடுகடத்தலுக்கு பொதுவாக நீண்ட நேரம் எடுக்கும். ஐரோப்பாவில் இது இன்னும் மெதுவாக இருக்கும்.
• பெல்ஜியத்தில் சோக்ஸி கைது செய்யப்பட்டிருப்பது, இந்தியாவுக்கு வலுவான ராஜதந்திர சக்தி இருப்பதைக் காட்டுகிறது. ஆனால், அது சட்ட செயல்முறையை விரைவுபடுத்த உதவுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையாவை இங்கிலாந்திலிருந்து திரும்பக் கொண்டுவர முயற்சிப்பது போன்ற ஒத்த வழக்குகளில் இந்தியா பெரிய வெற்றியைப் பெறவில்லை. மல்லையா 2016-ல் இந்தியாவை விட்டு வெளியேறினார். நீரவ் மோடி 2018-ல் தப்பி ஓடிவிட்டார்.