சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு 2006 என்பது என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


. 2021-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணையை (office memorandum) உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ரத்து செய்தது. இது பிந்தைய நடைமுறை அனுமதிகளை வழங்குவதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு நிலையான இயக்க நடைமுறையை அறிமுகப்படுத்தியது. 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment (EIA)) அறிவிப்பை மீறும் செயல்களை முறைப்படுத்துவதற்கான இதே போன்ற அறிவிப்புகள் அல்லது அலுவலக உத்தரவுகளை வெளியிடுவதிலிருந்தும் இந்த தீர்ப்பு ஒன்றிய அரசை தடுத்தது.


. மார்ச் 2017-ல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC)) சார்பில் ஆறு மாதங்களுக்குள் சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்க ஒரு முறை வாய்ப்பு வழங்கியது. இது முதலில் ஒப்புதல் பெறாமல் வேலை செய்யத் தொடங்கிய, உற்பத்தியை அதிகரித்த அல்லது தங்கள் தயாரிப்புகளை மாற்றிய தொழிற்சாலைகளுக்கு பொருந்தும்.


. குறிப்பாக, ஒரு திட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், மனித ஆரோக்கியம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு (பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை) மீதான தாக்கத்தை ஆராய 2006-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிப்பு கீழ் முன் அனுமதி கட்டாயமாக  பெறப்பட்டிருக்க வேண்டும்.

. நீதிபதி Abhay S Oka மற்றும் நீதிபதி Ujjal Bhuyan அமர்வு, "சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தவர்களைப் பாதுகாக்க" அலுவலக நினைவுக்குறிப்புகளை வெளியிட்டதற்காக ஒன்றிய அரசைக் கண்டித்தது. மேலும், சுசுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வளர்ச்சியை நாம் அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.


. ஒன்றிய அரசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவர்களைப் பாதுகாக்கத் தன் வழியிலிருந்து விலகிச் சென்றது. மேலும், நீதிமன்றத்தால் அத்தகைய முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும், பிரிவு 21 வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கும் (right to protection of life and personal liberty) உரிமையை நிலைநிறுத்த அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ ஆணையை நீதிமன்றம் கொண்டுள்ளது என்றும் நீதிமன்றம்  கூறியது.


. கடந்த காலங்களில், ஆரோக்கியமான மற்றும் மாசு இல்லாத சூழலுக்கான உரிமையை உள்ளடக்கிய வகையில், உச்ச நீதிமன்றம் பிரிவு 21-ன் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டு அறிவிப்பு மற்றும் 2021ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணை (office memorandum (OM)) ஆகியவை பிரிவு 21 மற்றும் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்  என்று உரிமையை (right to equality before law) மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், அலுவலக குறிப்பாணை என்பது மீறல்களின் விளைவுகளைப் பற்றி "முழுமையாக அறிந்த" அனைத்து திட்ட ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்.


.  அமர்வு முந்தைய இரண்டு தீர்ப்புகளை மேற்கோள் காட்டியது. காமன் காஸ் VS  இந்திய யூனியன் (Common Cause VS Union of India (2017) மற்றும் அலெம்பிக் பார்மசூட்டிகல்ஸ் VS ரோஹித் பிரஜாபதி (Alembic Pharmaceuticals v. Rohit Prajapati (2020))  போன்ற வழக்குகளில் பின்னோக்கிய அனுமதிகள் சுற்றுச்சூழல் சட்டத்திற்கு எதிரானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.


. இது திட்டங்களுக்கு முதலில் அனுமதி பெறாமலேயே கட்டுமானத்தைத் தொடங்க அனுமதித்தது. 2021 அலுவலக குறிப்பாணையின் மூலம் விதிகளை மீறியதற்காக ஒன்றிய அரசை  நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது


. அலெம்பிக் வழக்கில், நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர், ஒரு திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்ட பிறகு ஒப்புதல் அளிப்பது அடிப்படை சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிரானது மற்றும் EIA (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) அறிவிப்பின் நோக்கத்தை மீறுவதாகக் கூறினர்.


உங்களுக்குத் தெரியுமா?:


வனங்கள் அழிப்புக்கு காரணம் என்ன?


. வேகமான தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவை காடுகள் அழிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பதால் நிலைமை மிகவும் தீவிரமானது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2014-15 மற்றும் 2023-24 க்கு இடையில், இந்தியா வளர்ச்சித் திட்டங்களுக்காக சுமார் 1,73,300 ஹெக்டேர் வன நிலத்தை இழந்தது.


.  சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற கனிமங்கள் நிறைந்த மாநிலங்களில், சுரங்கத்திற்காக ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு வாக்கில், சுமார் 500 சுரங்கத் திட்டங்களுக்கு 1 லட்சம் ஹெக்டேர் காடுகள்  அழிக்கப்பட்டன.


. வடகிழக்கு இந்தியாவின் மலைப்பாங்கான பகுதிகளில், விவசாயம் மாறி வருதல் (ஜும்), விவசாயம் விரிவடைந்து வருதல் மற்றும் அதிக அளவில் மரம் வெட்டுதல் போன்ற காரணங்களால் காடுகள் முக்கியமாக அழிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்கள் 2021 மற்றும் 2023-க்கு இடையில் அதிக வனப்பகுதியை இழந்தன.


.  இது தவிர, மனித செயல்பாடுகளாலும், நீடித்த வறட்சியாலும் தூண்டப்படும் அதிகரித்து வரும் காட்டுத் தீ, காடுகளின் சீரழிவுக்கு மேலும் வழிவகுக்கிறது. காலநிலை மாற்றம் வானிலையை வெப்பமாகவும் வறண்டதாகவும் மாற்றுவதன் மூலம் நிலைமை  மேலும் மோசமாகுகிறது.


. நவம்பர் 2023 முதல் ஜூன் 2024ஆம் ஆண்டுக்கு இடையில், இந்திய வன ஆய்வகம் 2,03,544 காட்டுத் தீ சம்பவங்களைப் பதிவு செய்தது. இத்தகைய அச்சுறுத்தும் போக்குகள் வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வலுவான மற்றும் தரமான சட்டக் கட்டமைப்பிற்கான அவசர தேவையை வலியுறுத்துகின்றன.

Original article:
Share: