நீதித்துறையில் பெண்கள்: இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது -ரிதுபர்ணா பட்கிரி

 1950ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, உச்ச நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களிலும் மிகக் குறைவான பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வு பாலின நீதியை எவ்வாறு பாதிக்கிறது?


நீதிபதி லீலா சேத் ஒரு நாள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தபோது, பல காலடி ஓசைகளையும், மென்மையான குரல்களையும் கேட்டார். அவர் தனது வாசிப்பாளரிடம் ஏதேனும் சிறப்பு செய்திக்குரிய வழக்கு திடீரென அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என விசாரித்தார். இல்லை, இல்லை என்று வாசிப்பாளர் பதிலளித்தார்.  இந்த கூட்டம் ஒரு விவசாயிகள் குழு, அவர்களை பிரதமர் சரண் சிங் டெல்லிக்கு காட்சிகளைக் காண அழைத்துள்ளார். அவர்கள் இப்போதுதான் உயிரியல் பூங்காவைப் பார்த்துவிட்டு வந்துள்ளனர்: இப்போது அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதியைப் பார்க்க வந்துள்ளனர்."


ஒரு மாநில உயர் நீதிமன்றத்தின் (இமாச்சலப் பிரதேசம்) முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி லீலா சேத், 1978-ஆம் ஆண்டு நடந்த ஒரு கதையை தனது சுயசரிதையான ஆன் பேலன்ஸ்ல் (On Balance) பகிர்ந்து கொண்டார். ஒரு பெண் நீதிபதி எப்படி இருப்பார் என்பதைப் பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தனர். இது ஒரு காலத்தில் ஒரு பெண்ணை ஒரு சக்திவாய்ந்த நீதித்துறைப் பணியில் பார்ப்பது எவ்வளவு அரிதானது என்பதைக் காட்டுகிறது. 40-ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இன்னும் ஒரு பெண் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இல்லை. மேலும், உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.


நீதித்துறையில் பாலின இடைவெளி


1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, உச்ச நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் மட்டுமே இருந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, நீதிபதி எம். பாத்திமா பீவி, 1989ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்டு 39 ஆண்டுகளான பிறகும் தற்போது, தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 33 நீதிபதிகளில் இரண்டு பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.  அவர்கள் நீதிபதி பேலா திரிவேதி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆவார்.


நீதிபதி திரிவேதி ஜூன் 9 அன்று ஓய்வு பெறுகிறார். ஆனால், வெள்ளிக்கிழமை (மே 16, 2025) அவரது கடைசி வேலை நாளாக குறிக்கப்பட்டது. இருப்பினும், அவரது ஓய்வு எதிர்பாராத திருப்பத்தைக் கண்டது. ஏனெனில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அவருக்கு பாரம்பரிய அதிகாரப்பூர்வ விடைபெறும் விழாவை நடத்தவில்லை. குறிப்பாக, நீதிபதி திரிவேதியின் ஓய்வுக்குப் பிறகு, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துவிடும்.


உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களிலும் நிலைமை சிறப்பாக இல்லை. உச்ச நீதிமன்ற பார்வையாளர் (Supreme Court Observer, 2021) தரவுகளின்படி, உயர் நீதிமன்றங்களில் 11.7% நீதிபதிகள் மட்டுமே பெண்கள் உள்ளனர். மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, பாட்னா மற்றும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை. கீழ் நீதிமன்றங்களில், பெண் நீதிபதிகள் 35% மட்டுமே உள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் நீதித்துறை அமைப்பின் அனைத்து நிலைகளிலும் பாலின சமநிலையின்மை (gender imbalance) இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.


மேலும், சாதி மற்றும் மதத்தின் பார்வையில் இருந்து பார்க்கும்போது நிலைமை இன்னும் கவலைக்குரியதாகத் தெரிகிறது. கடந்த 75 ஆண்டுகளில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பட்டியலினத்தவர் அல்லது பழங்குடி பெண் நீதிபதி இருந்ததில்லை. உச்ச நீதிமன்றம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை, ஒரே முஸ்லிம் பெண் நீதிபதி நீதிபதி எம். பாத்திமா பீவி மட்டுமே இருந்துள்ளார்.


தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியம் (Supreme Court collegium)  உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் நியமனம் மற்றும் மாற்றத்திற்கான அமைப்பில் பெண்கள் யாரும் இல்லை.  இதில் அரசியலமைப்பு விதி இல்லை என்றாலும், கொலீஜியம் முறை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலமாக வளர்ந்துள்ளது. இந்த அமைப்பில், இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் இடம் பெற்றிருப்பார்கள். நீதிபதி ரூமா பால் மற்றும் நீதிபதி ஆர். பானுமதி ஆகிய இரண்டு பெண் நீதிபதிகள் மட்டுமே கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ளனர்.


உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில், அதிக பெண்கள் இருப்பது பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். பெங்களூருவைச் சேர்ந்த சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம் (Centre for Law and Policy Research (CLPR)) 2025-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் சராசரியாக ஆண் நீதிபதிகளை விட ஒரு வருடம் குறைவாகவே பணியாற்றுகிறார்கள் என்று கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தக் குறுகிய பதவிக்காலம் அவர்கள் உயர் பதவிகளுக்கும், பின்னர் கொலீஜியப் பதவிகளுக்கும் உயரும் வாய்ப்புகளைப் பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.


உதாரணமாக, நீதிபதி பி.வி. நாகரத்னா இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், அவரது பதவிக்காலம் 36 நாட்கள் மட்டுமே நீடிக்கும்.




நீதித்துறையில் பாலின பன்முகத்தன்மை ஏன் முக்கியம்


நீதித்துறையில் பாலின பன்முகத்தன்மை இல்லாமையும் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவமும் பெரும்பாலும் இருக்கும் ஆணாதிக்க பாரபட்சங்களை வலுப்படுத்தும் தீர்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. இது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய சில தீர்ப்புகளில் இருந்து தெரிகிறது. உதாரணமாக, மார்ச் 11, 2025 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவருக்கு ஜாமீன் வழங்கியது. அந்தப் பெண் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று கூறியது.


அதேபோல், மார்ச் 17, 2025 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு மைனர் சிறுமி மற்றும் இரண்டு ஆண்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்ட நபர்கள் மீது ஆதாரம் போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கூறியது.


இரண்டு வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. பலர் இந்த முடிவுகளை 'உணர்ச்சியற்றது' (‘insensitive’) மற்றும் 'மனிதாபிமானமற்றது' (‘inhuman’.) என்று அழைத்தனர். நீதிபதி பேலா திரிவேதி, "சட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், அனுதாபம் அளிக்க கூடாது" என்று கூறினார். இது ஒரு முக்கியமான விஷயம். இந்த வகையான தீர்ப்புகள் நீதித்துறையில் எவ்வளவு குறைவான பெண்கள் உள்ளனர் என்பதோடு தொடர்புடையதாக இருக்கலாம்.


ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டில், கோழிக்கோட்டில் உள்ள ஒரு நீதிபதி, பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்கினார். அந்தப் பெண்ணின் ஆடைகள் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அதே ஆண்டு, மும்பை உயர் நீதிமன்றம், ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு சிறுவன் என்று காரணம் கூறி ஜாமீன் வழங்கியது. இந்த வகையான தீர்ப்புகள் பாலியல் கருத்துக்களை ஆதரிக்கின்றன மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நீதியைப் பறிக்கின்றன.




நீதித்துறையில் பெண்களை இயல்பாக்குதல்


நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் நியமிக்கப்படுவது ஒரு சாதாரண நடைமுறையாக இருக்க வேண்டும். அவர்கள் அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களாக மட்டுமல்லாமல், தங்கள் பணிகளைச் செய்யும் தனிநபர்களாகவும் பார்க்கப்பட வேண்டும். மேலும், பெண்கள் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை மட்டும் கையாள்வதில் பெண் நீதிபதிகள் மட்டுப்படுத்தப்படக்கூடாது.


நீதித்துறை அமைப்பில் பாலின விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொறுப்புணர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பது ஒரு நல்ல முன்னேற்றமாக இருக்கும். ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் பீகார் போன்ற சில மாநிலங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் உள்ளன. ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இத்தகைய இடஒதுக்கீடுகளுடன், சுத்தமான கழிப்பறைகள் மற்றும் சிறந்த சுகாதார வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளிலும் முன்னேற்றங்கள் இருக்க வேண்டும். இவை கீழ் நீதிமன்றங்களில்  நீதித்துறையில் அதிக பெண்கள் சேர உதவவும் ஊக்குவிக்கவும்.


மேலும், நீதித்துறையில் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த எத்தனை பெண்கள் பணிபுரிகிறார்கள் என்பதை சரிபார்க்க அரசாங்கம் தொடர்ந்து கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும். மிகக் குறைவான பெண் நீதிபதிகள் என்ற பிரச்சினையை சரி செய்ய இந்தத் தகவல் மிகவும் முக்கியமானது. இறுதியாக, நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பை இயல்பாக்குவது, மிகவும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ சட்ட அமைப்புக்கு முக்கியமானது.


Original article:
Share: