காரணம் மற்றும் விளைவு: மனித உரிமைகள், குடியுரிமை வழக்குகள்

 அரசாங்கங்கள் குடியுரிமை வழக்குகளில் மக்களின் அடிப்படை உரிமைகளை மதித்து பாதுகாக்க வேண்டும்.


துன்புறுத்தப்பட்ட நபர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்க நீதிமன்றங்கள் தலையிட்டதன் மூலம், இந்தியாவின் எல்லை மாநிலங்களில் சமூகத்தின் சில பிரிவுகள் எதிர்கொள்ளும் குடியுரிமை தொடர்பான கவலைகள் மீண்டும் வெளிசத்திற்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்க நீதிமன்றங்கள் தலையிட்டுள்ளன. இந்த வழக்குகளில் எழும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளன. June 24, 2025 அன்று, உச்ச நீதிமன்றம் Jaynab Bibi என்பவரின் நாடு கடத்தலை தடை செய்தது. அவர் முதலில் அசாமில் உள்ள வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தாலும் (Foreigners' Tribunal), பின்னர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தாலும் "வெளிநாட்டவர்" என்று முத்திரை குத்தப்பட்டார். 


தலைமுறை தலைமுறையாக அசாமில் வசித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், அனைத்து ஆவணங்களையும் வழங்கியவராகவும் இருந்தபோதிலும், அவர் ஒரு இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க ஒவ்வொரு நிலையை நோக்கி செல்லவேண்டியிருந்தது. நீதிபதிகள் K.V. விஸ்வநாதன் மற்றும் N. கோடீஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் மாதம் அடுத்த விசாரணைக்கு வரும் வரை அவருக்கு எதிராக ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது. ரக்ஷந்தா ரஷீத் வழக்கில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் ஒன்றிய உள்துறை செயலாளரிடம் 63 வயதான பெண்னை இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வர உத்தரவிட்டது. 


ஏப்ரல் மாதம் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் குடிமக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். பாகிஸ்தான் குடிமகனான ரஷீத், கடந்த 38 ஆண்டுகளாக ஜம்முவில் வசித்து வந்தார். மேலும், அவருக்கு நீண்டகால நுழைவு இசைவும் (long-term visa) இருந்தது. 1996-ஆம் ஆண்டு குடியுரிமை பெறுவதற்கான அவரது விண்ணப்பம் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை.


உயர் நீதிமன்ற நீதிபதி ராகுல் பாரதி தனது உத்தரவில், மனித உரிமைகள் மனித வாழ்க்கையின் மிகவும் புனிதமான கூறு என்றும், ஒரு வழக்கின் நன்மை தீமைகளை ஆராயாமல் நீதிமன்றம் அவர்களின் ஆன்மாக்களைக் காப்பாற்றுங்கள் (Save Their Souls) போன்ற பதிலளிக்க வேண்டிய தருணங்கள் உண்டு என்றும் கூறினார். இவை காலப்போக்கில் முறையாக தீர்மானிக்கப்படலாம். 


Bibi அவர்களின் வழக்கறிஞர்கள் 2024-ஆம் ஆண்டு (Md. Rahim Ali @ Abdur Rahim VS The State Of Assam) வழக்கை குறிப்பிட்டனர். அதில் அசாமில் உள்ள மக்கள் பெரும்பாலும் சரியான ஆதாரங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் என்று தவறாக சந்தேகிக்கப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியது. வலுவான சந்தேகம் உண்மையான சட்ட ஆதாரங்களை மாற்ற முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், ஒருவரை வெளிநாட்டவர் என்று அழைப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய சரியான செயல்முறையை அது விளக்கியது. 


2019-ஆம் ஆண்டின் குடியுரிமை (திருத்த) சட்டம் (Citizenship (Amendment) Act) ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆறு முஸ்லிம் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கியது.  இது மதத் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மற்றவர்களைப் புறக்கணிப்பதால் பலர் தனிச்சையானதாகவும் (arbitrary) குறுகியதாகவும் கருதுகின்றனர். 


யோகி ஆதித்யநாத் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்ற உயர்மட்ட பாஜக தலைவர்களின் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான அறிக்கைகள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளன. அவர்களில் சிலர் சரியான ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் (United Nations Universal Declaration of Human Rights) வாக்குறுதியளிக்கப்பட்டபடி, அரசாங்கங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் தனிநபரின் கண்ணியத்தை நிலைநிறுத்த வேண்டும். மேலும், நீதிமன்றங்களால் நினைவூட்டப்படவோ அல்லது கட்டாயப்படுத்தப்படவோ தேவையில்லாமல் ஒவ்வொரு நபரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்..



Original article:

Share: