பழங்குடியின மக்களுக்கான ஒன்றியத்தின் தொடர்பு கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கிய வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும். ஆனால் அது எளிதல்ல.

 பழங்குடியின மக்கள் அடிப்படை ஆவணங்களைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு திட்டங்கள் உள்ளன. இவற்றில் ஆதார் (Aadhaar) மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் (Ayushman Bharat cards) அடங்கும். இந்தத் திட்டங்கள் வன உரிமைகள் சட்டத்தின் (Forest Rights Act) கீழ் நில உரிமைகளைப் பெறவும் உதவுகின்றன. கூடுதலாக, அவை ஓய்வூதியக் கணக்குகள் மற்றும் ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கான அணுகலை வழங்குகின்றன.


ஜூன் 15 அன்று, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ஒரு தொலைத்தொடர்பு திட்டத்தைத் தொடங்கியது. இது பெரும்பாலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் சுமார் 1 லட்சம் கிராமங்களை மையமாகக் கொண்டது. பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM JANMAN)) மற்றும் தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA)) ஆகிய இரண்டு நலத்திட்டங்களை அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்குவதே இந்த திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.


பழங்குடியினருக்கு ஆதார் அட்டைகள், ஆயுஷ்மான் பாரத் அட்டைகள், வன உரிமைகள் சட்டத்தின் கீழ் உரிமைகள், ஓய்வூதியக் கணக்குகள் மற்றும் ஜன் தன் கணக்குகள் போன்ற முக்கிய ஆவணங்களை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இது ஏற்கனவே உள்ள திட்டங்களில் சேரவும் அவர்களுக்கு உதவுகிறது. பழங்குடி மக்களுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், "சமூக அணிதிரட்டல் மூலம் பங்கேற்பு நிர்வாகத்தை" (participatory governance through community mobilisation) ஊக்குவிப்பதும் இந்த பிரச்சாரத்தின் குறிக்கோள்களாகும். இந்த இலக்குகள் மிகவும் நேர்மறையானவை. இருப்பினும், சவால்கள் இருக்கும்.


கடந்த இரண்டு ஆண்டுகளில், பழங்குடியின மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வளர்ச்சிக்கான இடைவெளியைக் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டில், அரசாங்கம் PM JANMAN ஐ அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி DAJGUA திட்டத்தைத் தொடங்கினார். இந்தத் திட்டம் 63,843 கிராமங்களில் உள்கட்டமைப்பு சிக்கல்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இருப்பினும், பல பழங்குடி மக்கள் இன்னும் இந்தத் திட்டங்களிலிருந்து பயனடையவில்லை. இதில் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், கடினமான புவியியல் சூழ்நிலைக் காரணமாக சில பகுதிகளை அடைவது கடினம். குறிப்பாக பழங்குடி குழுக்களில் மற்றொரு கடுமையான பிரச்சினை நிலமின்மை ஆகும். நவம்பர் 2024ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தப் பிரச்சினையை எழுப்பினார். பழங்குடியினர் பகுதிகளில் நிலம் வழங்க உதவுமாறு நிதி ஆயோக்கை அவர் கேட்டுக் கொண்டார்.


மற்றொரு சவால் என்னவென்றால், பழங்குடி மக்கள் பெரும்பாலும் இந்தத் திட்டங்களை அணுகத் தேவையான ஆவணங்களைப் பெற முடியாது. உதாரணமாக, அக்டோபர் 2024ஆம் ஆண்டில், புனேவில் உள்ள பல கட்கரி ஆதிவாசி மக்கள் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதில் சிரமப்படுவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. பழங்குடி துணைத் திட்டங்களின் (Tribal Sub Plans (TSP)) கீழ் சலுகைகளைப் பெற இந்த ஆவணங்கள் தேவை. 1984ஆம் ஆண்டில் டிம்பே அணை (Dimbhe Dam) கட்டப்பட்டதால் அவர்கள் இடம்பெயர்ந்த பிறகு அவர்களின் கிராமம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.


சுதந்திரம் பெற்றதிலிருந்து, அணைகள், சுரங்கங்கள், வனவிலங்கு சரணலாயங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் உருவாக்கம்  காரணமாக மில்லியன் கணக்கான பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் தனித்துவமான பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதைச் செய்ய, அரசியல் செயல்களை விட நல்லாட்சி முக்கியமானது. இந்த மக்கள் தொடர்பு பிரச்சாரம் இதன் முதல் படியாக இருக்கலாம்.


Original article:

Share: