ஒரு குழந்தை தனது தாயின் சான்றிதழ் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழைப் பெற முடியுமா? உச்சநீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது. -அமால் ஷேக்

 ஒற்றைத் தாயின் குழந்தைக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (Other Backward Class (OBC)) சான்றிதழ்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் ஜூலை 22 அன்று விசாரிக்க உள்ளது.


தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, தந்தை அல்லது தந்தைவழி இரத்த உறவினர்களின் சான்றிதழ் அடிப்படையில் பெறப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும். இது அரசியலமைப்பின் 14 மற்றும் 21-வது பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டுள்ள தனது குழந்தையின் சமத்துவ உரிமை (right to equality) மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் (personal liberty) மீறுவதாக அவர் கூறினார்.



ஜூன் 23 அன்று உச்சநீதிமன்றம், தனித்து வாழும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ்களை வழங்குவதில் வழிகாட்டுதல்கள் இல்லாததைக் குறிப்பிட்டு, ஜூலை 22-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.


நீதிபதிகள் K.V. விஸ்வநாதன் மற்றும் N. கோடிஸ்வர் சிங் ஆகியோரடங்கிய பிரிவு நீதிபதிகள் அமர்வு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வைத்திருக்கும் ஒரு தனித்தாய் தனது சொந்த நிலையின் அடிப்படையில் தனது குழந்தைக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவதற்கான மனுவை விசாரித்தது. சாதிச் சான்றிதழ்களுக்கு தந்தையின் தரப்பைப் பின்பற்றும் விதிகளை மாற்றுமாறு கேட்கப்பட்டது. இந்த வழக்கு பிரிவு 14-ன் கீழ் பாலின சமத்துவம் (gender equality) குறித்த கேள்விகளை எழுப்புகிறது.


இந்த வழக்கு எதைப் பற்றியது?


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு அந்தஸ்துள்ள ஒற்றைத் தாயான மனுதாரர், தனது குழந்தைக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக டெல்லி வருவாய்த் துறையின் தற்போதைய வழிகாட்டுதல்களை எதிர்த்து ஜூன் 23 அன்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகத்தைச் சேர்ந்த ஒற்றைத் தாயாக, வழிகாட்டுதல்கள் தனது குழந்தை தனது சாதியைப் பெற அனுமதிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.


தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, விண்ணப்பப் படிவத்துடன் தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களிடமிருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழின் நகல் இணைக்கப்பட வேண்டும். இது தனது குழந்தையின் சமத்துவ உரிமையையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் முறையே பிரிவு 14 மற்றும் 21 ஆகியவற்றின் கீழ் மீறுவதாக அவர் கூறினார்.


சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் S.D. சஞ்சய், (ரமேஷ்பாய் தபாய் நாய்கா VS குஜராத் மாநிலம்) வழக்கில் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கு பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர் அல்லாத நபர்களுக்கு இடையே, குறிப்பாக கலப்பு திருமணங்களிலிருந்து பிறந்த குழந்தைகளின் சாதி அங்கீகாரத்தை பற்றியது.


ஒவ்வொரு சூழ்நிலையும் மாறுபடும், அதன் உண்மைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அப்போது கூறியது. ஒரு பொதுவான கொள்கையாக, வேறு சாதியைச் சேர்ந்த ஆணை மணந்த பெண் தனது கணவனின் சாதியை எடுத்துக்கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், அத்தகைய கலப்புத் திருமணத்திலிருந்து பிறக்கும் குழந்தை பொதுவாக தந்தையின் சாதியைப் பெறுகிறது.


சாதிமறுப்புத் திருமணத்திலோ அல்லது பழங்குடியினருக்கும் பழங்குடியினரல்லாதவருக்கும் இடையிலான திருமணத்திலோ, குழந்தைக்கு தந்தையின் சாதி இருப்பதாக ஒரு அனுமானம் இருக்கலாம். சாதி மறுப்புத் திருமணத்திலோ அல்லது பழங்குடியினருக்கும் பழங்குடியினரல்லாதவருக்கும் இடையிலான திருமணத்திலோ, கணவர் ஒரு உயர் சாதியைச் சேர்ந்தவர் என்றால் இந்த அனுமானம் வலுவாக இருக்கலாம். ஆனால், இந்த விதி இறுதியானது அல்ல. குழந்தை இன்னும் ஒரு பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த தனது தாயால் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட முடியும்.


பெற்றோர் பிரிந்து சென்றாலோ அல்லது விவாகரத்து செய்தாலோ, பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியின சாதி சேர்ந்த தாயால் வளர்க்கப்பட்டால், குழந்தை தனது தாயின் சாதியை ஏற்றுக்கொள்ளலாம். 


இந்த வழக்கில் நீதிமன்றங்கள் எவ்வாறு தீர்ப்பளித்துள்ளன?


வெவ்வேறு நீதிமன்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ள தந்தை வழி பரம்பரை விதியைக் கருத்தில் கொண்டு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (Other Backward Class (OBC)) சான்றிதழ் வழங்கப்படுவதால் குழந்தையின் நல்வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான ஆதாரங்களைக் கோரியுள்ளன.


2019ஆம் ஆண்டு ரூமி சவுத்ரி VS டெல்லி அரசு வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் சாதிச் சான்றிதழ் விதிகளுக்கு எதிரான ஒரு சவாலை விசாரித்தது. ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த இந்திய விமானப்படை அதிகாரியான ரூமி, ஒரு முன்னேறிய சாதியைச் சேர்ந்த ஒருவரை மணந்தார். அவர் தனது இரண்டு மகன்களையும் ஒற்றைத் தாயாக வளர்த்தார்; எனவே, அவர்கள் தான் சேர்ந்த அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சான்றளிக்கும் சான்றிதழைப் பெற அவர்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார். சாதிச் சான்றிதழ் கோரிய அவரது கோரிக்கையை நிர்வாக நீதிபதி நிராகரித்தார். நீதிபதியின் இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.


இந்த முடிவு 2020-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது, இதில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் பிரிவு நீதிபதிகள் அமர்வு, குழந்தைகள் தங்கள் தாயின் சாதியால் உண்மையான சிரமங்களை எதிர்கொண்டதாக நிரூபிக்க முடிந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று கூறியது. தாயால் தனது குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வழங்க முடிந்தது என்றும், அவர்களுக்கு சாதிச் சான்றிதழ்களை வழங்குவது கல்வி மற்றும் வேலைகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள் தேவைப்படும் உண்மையான பட்டியல் சாதி உறுப்பினர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் என்றும் நீதிமன்றம் கூறியது. இது அரசியலமைப்பின் நியாயத்தன்மை என்ற குறிக்கோளுக்கு எதிரானது என்று கூறியது


ஸ்மதி. மூன்சூன் பர்கக்கோடி VS  அசாம் அரசு வழக்கில், "கீழ்நிலை அதிகாரி" அதிகாரியின் தந்தை பொதுப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், அவர் தனது தாயிடமிருந்து பெற்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (Other Backward Class (OBC)) சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மை குறித்த வழக்கை குவஹாத்தி உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. அவர் தனது தாயின் சமூகத்தில் வளர்க்கப்பட்டதாகவும், அதனால் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் காட்டும் அறிக்கையுடன் நீதிமன்றம் உடன்பட்டது. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோரின் வழக்குகளில், ஒரு நபரின் சாதி அவர்களின் தந்தையின் சாதியை மட்டுமல்ல, அவர்களின் நிஜ வாழ்க்கை அனுபவம் மற்றும் சமூகத்துடனான தொடர்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.



Original article:

Share: